அரியலூர் மாவட்டத்தில் உள்ள மழுவாடி என்ற திருமழபாடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு தாயார் சுந்தராம்பிகையுடன் வைதியநாதசுவாமி என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார்,இவரை கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வணங்கி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை,பிராத்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சார்த்தி பக்தர்கள் நோத்தி கடனை நிறைவேற்றுகின்றனர்.
இத்தலத்தில் தான் நந்திக்கு திருமனம் நடைபெற்றது.
சிவன் தோவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54-வது தேவாரத்தலமாகும்.
அப்பர் சுந்தரர் சம்மந்தர் பாடிய தலமாகும்.
இங்கு தீர்த்தமாக கொள்ளிடம் லட்சுமி சிவகங்கை தீர்த்தம் உள்ளது.
தலவிருச்சமாகும் பனை மரம் உள்ளது.
காவிரி வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 54-ம் திருத்தலம் இது. எம் பெருமானே முன்னின்று நந்திகேஸ்வரருக்குத் திருமணம் செய்து வைத்த இடமாகக் கருதப்படுகிறது. திருவையாறு அருகே அந்தணபுரத்தில் வசித்தவர் சிலாத முனிவர். குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த சிலாத முனி, குழந்தை பாக்கியம் வேண்டி, திருவையாறில் அருள்பாலிக்கும் ஐயாறு அப்பரை நோக்கித் தவம் இருந்தார். தவத்திற்கு மெச்சி இறங்கி வந்த ஐயாறு அப்பர், புத்திர காமேட்டி யாகம் செய்து யாகம் நடத்திய பூமியை உழுதால் குழந்தை பாக்கியம் கிடைக்குமென்று உத்தரவிட்டார். உழுத நிலத்திலிருந்து பெட்டகம் ஒன்று கிடைக்க, அதிலிருந்து குழந்தையையும் பெற்றார் சிலாத முனிவர். ஆனால் அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் வாழுமென்று முன்பே கூறிவிட்டார் இறைவன்.
பெட்டகத்திலிருந்து தோன்றிய புதல்வனுக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதிற்குள் அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான் செப்பேசன். இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் தன் புதல்வன் இருப்பான் என்ற உண்மை, கடுங்கவலையாக சிலாத முனியை ஆட்கொண்டது. தனது ஆயுள் ரகசியத்தைத் தெரிந்து கொண்ட செப்பேசன், ஐயாறு அப்பர் கோயிலின் அயன அரி தீர்த்தக் குளத்தில் இறங்கி சிவபெருமானை வேண்டி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அவரது மேனியைத் திருக்குளத்து மீன்கள் கடித்துச் சேதப்படுத்தியபோதும் தவத்தைக் கலைக்கவில்லை. மனஉறுதி கொண்ட அவரது தவத்தை மெச்சிய இறைவன், செப்பேசனுக்கு பூரண ஆயுளைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.
திருமழபாடி வைத்தியநாத சுவாமியை சாட்சியாக வைத்து ஐயாறு அப்பரே செப்பேசன் என்ற நந்தியெம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணத்தை நடத்தி வைத்தார். இறைவனே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்ததால் மழபாடி வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் நந்தியெம்பெருமான் திருமணத்தைக் காணும் இளைஞர்களுக்கும் கன்னியர்களுக்கும் திருமணத் தடைகள் நீங்கிக் காலத்தே திருமணம் கைகூடி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘நந்தி’ கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்’ என்ற சொல் வழக்கு இன்றளவும் மக்களிடம் செல்வாக்குடன் இருக்கிறது.
தொடர்புக்கு:
91-4329-292890
அமைவிடம்:
அரியலூரில் இருந்து திருமழாபாடிக்கு பஸ்வசதி உள்ளது.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post திருமழபாடியில் நந்திக்கு திருமணம் செய்து வைத்த சிவபெருமான் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.