திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள பாடகம் என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையும் பெறுமையும் வாய்ந்த சக்தி மிக்க அம்மன் கோவில் உள்ளது. இங்கு அன்னை ஆதிபராசக்தி பலபெயர்களிலும் பல உருவங்களிலும் காட்சி கொடுப்பது போல் இங்கு சிரித்த முகத்துடன் இருக்கும் சுயம்பு முத்தாலம்மன் வரும் பக்தர்களை வா வென்று அழைத்து கூறைகளை தீர்க்கும் முத்தாலம்மனாக இத்தலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார் இத்தலம் வரலாறு சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது.
இந்த அம்மனை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் நீண்ட நாள் தடைப்பட்ட திருமணம் ஆகாதவர்களும் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த அம்மனை வணங்கினால் அனைத்தும் தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாகவே உள்ளது. பிராத்தனைகள் நிறைவேறியதும் முத்தாலம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து புதுவஸ்திரம் சார்த்தி பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர்.
சில பக்தர்கள் அவர் அவர் வசதிகளுக்கு கேற்ப காணிக்கை செலுத்துகின்றனர்.
‘பத்து விரல்; மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும் வைடுரிய மிச்சையோ
யிழைத் திட்ட பாதச்சிலம்பினொலியும் முத்து
மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன மாலை
யழகும் முழுதும் வைடுரியம் புஷ்புராகத்தினால்
முடிந்திட்ட தாலியழகும் சுத்தமாயிருக்கின்ற
காதினிற் கம்மலும் செங்கையிற் பொன்கங்
கணம் ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா
மொளிவுற்ற சிறுகாது கொப்பினழகும் அத்தி
வரதன் தங்கை சத்தசிவ ரூபத்தை யடினாற்
சொல்ல திறமோ அழகான பாடகந்தனில் புகழாக
வாழ்ந்திடு மம்மை முத்தாலம்மை யுமையே”
சிவபெருமானின் கண்களை மூடிய பார்வதி
திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை மூடிய பாவம் போக்க காஞ்சிபுரத்தில் இருந்து காமாட்சிதேவியாக அவதரித்தார், காப்பற்றியத்தில் அகமகிழ்ந்து பாவம் போக்க தேவியார் காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணமானார் உம்மை எப்பொழுதும் பிரியாமல் இருக்க உமது மேனியில் இடபாகம் அளிக்க வேண்டும் என வேண்டிய அன்னையிடம் நீ அருணை மாநகருக்கு சென்று என்னை நோக்கி தவமிரு என்று கூறி மறைந்தார் சிவபெருமான் திருவண்ணாமலை நோக்கி வரும் வழியில் பாடகம் என்ற கிராமத்தில் அன்னையின் காலில் இருந்த கொலுசுகளில் உள்ள இரண்டு முத்துக்கள் (தண்டத்தில் இருந்து) விழுந்தது.
அந்த கிராமத்திலேயே முத்தாலம்மனாக குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார்.
‘பாடகம” என்ற செல்லுக்கு கொலுசு (அணிகலன்) என்று பொருள் பண்டைய கால கல்வெட்டுகளில் ‘நிலம்” நில அளவு” என்ற பொருளில் வருகிறது. பாடகம் என்றால் பெண்கள் அணியும் அணிகலன் என்ற குறிப்பும் காணப்படுகிறது.
இவ்வூரின் பெயரே தொன்மைச் சிறப்பு மிக்கதாக விலங்குகிறது நிலம் வளம் மிக்க பாடகம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் அம்பாள் முத்தாலம்மன் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
திருவிழாக்கள்:
தைமாதம் பெங்கல் அன்று மூன்று நாட்கள் முத்தாலம்மன் வீதியுலா வருவதை பார்க்க வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவது இந்த கிராமத்தின் சிறப்பு.
மேலும், ஆடி மாதம் அம்மனுக்கு பெங்கல் வைத்து அம்மனின் வரலாற்றை உடுக்கை மேலத்துடன் வர்னித்து இரவு குதிரை வாகனத்தில் வீதியுலா கொண்டு வருவது நம் கண்முன்னே முத்தலாம்மன் நேரில் வருவது போல் தோன்றுகிறது.
தொடர்புக்கு: ஸ்ரீ முத்தாலம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள்:-
எ.பழனி -9047122373
எஸ்.காந்தி – 9786629487
எம்.சேகர்-9585789063.
அமைவிடம்:
திருவண்ணாமலையில் இருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் போளூரில் இருந்து 10 கி.மி தூரத்தில் பாடகம் முத்தாலம்மன் கோவில் உள்ளது.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post கொலுசு விழுந்ததால் சுயம்புவாக தோன்றிய முத்தாலம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.