உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் சூரியனின் தாந்திரிக பரிகாரங்களைப் பார்த்து ஒரு தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி பிரச்சனை வருகிறது என்றால் ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே சூரியன் பழுதுபட்டிருகிறார் என்று அர்த்தம்.அரசாங்க வேலையில் முயற்சி செய்து கிடைக்கவில்லை என்றால் சூரியன் அவர்களுக்கு பாதகமான நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம்.பிதுர் சொத்துக்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் சூரியன் 6,8,12 இல் இருக்கிறார் என்று அர்த்தம்.
மேலும் அரசாங்கம் மூலமாக அவர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என்றால் அரசு வழியில் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கவில்லை என்றால் அங்கு சூரியன் எதிரி சாரத்தில் இருக்கிறார் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் இதயம் என்ற கருவி அடிக்கடி பழுதுபட்டால் சூரியன் நல்ல நிலையில் அவரது பிறப்பு ஜாதகத்தில் இல்லை என்று அர்த்தம்.இப்படி எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலும் உங்கள் ஜாதகத்தில் சூரியன் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் சரி,பாதகமாக இருந்தாலும் சரி,இந்த சுலபமான தாந்திரிகபரிகாரங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் அந்த நிலையை சரி படுத்தி உங்கள் வாழ்க்கையிலே இனிமையாக உங்கள் நாட்களைக் கடத்தலாம்.அதாவது சூரியனின் சக்தியைப் பெற அருளாசியை பெற ஒவ்வொரு ஞாயிறு அன்று நம் வீட்டிற்கு உறவினர்களை அழைத்து சப்பாத்தி,கோதுமையிலான தோசை,ஹல்வா,சிறுவர்களுக்கு செய்து கொடுத்து சூரியனின் அருளாசியைப் பெறலாம்.
ஜாதகத்தில் சூரியன் சனியோடு நின்று பலன் தரவில்லை என்றாலும்,சூரியன் ராகுவோடு கலந்து பலன் தரவில்லை என்றாலும்,சூரியன் உங்களுக்கு பாதகமான கிரகங்களில் இருந்தாலும்,சூரியன் மறைவுஸ்தானமான 6,8,12இல் மறைந்தாலும்,நான் சொன்ன இந்த தாந்திரிக பரிகாரம் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அரசாங்க வசியத்தை ஏற்படுத்தி அரசு வேலையை முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.தந்தை மகன் என்ற உறவு உங்களுக்கு இனிப்பாக இருக்கும்.மேலும் தந்தை மூலம் கிடைக்கக்கூடிய சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.இருதயம் என்ற கருவி உங்களுக்கு பலம் கொடுக்கும்.மேலும் சூரியனை ஆத்ம கிரகம் என்று கூறுவதால் நம் ஆன்மாவைப் பற்றி அறிகின்ற ரகசியங்களை அவர் வெளிப்படுத்தி இவ்விதமான தாந்திரிக பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் கடைபிடித்து வந்து சூரியனால் ஏற்படுகின்ற அந்த சூரிய தசை நடப்பில் இருக்கின்ற அந்த 6 வருட காலம் உங்களுக்கு இனிப்பாக இருக்கும் என்றால் இந்த தாந்திரிக சாஸ்திரம் என்பது மிக மிக எளிமையானது.அதே நேரத்தில் வலிமையானது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்பட்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றியே தவிர தோல்வி இல்லை என்று சொல்லி இந்தப் பகுதியை இறுதி செய்து நாளைய தினம் சந்திரனுக்கு உரிய தாந்திரிக பரிகாரம் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் நாம் பெற இருக்கிறோம் என்று சொல்லி இந்தப் பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கின்றேன்.நன்றி.வணக்கம்.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 28/04/2016 appeared first on Swasthiktv.