Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

கருமாரி உருவான கதை

$
0
0

 திருவேற்க்காட்டில் கோவில் உருவாவதற்கு முன்பே அங்கு கருமாரியம்மன்  நாக வடிவில் பல நூற்றாண்டுகளாக புற்றிற்குள் வாழ்ந்து வந்ததை அவ்வூரின் மூத்த குடிகளின் வாய் வார்த்தைகளின் மூலம் நம்மால் அறியமுடிகிறது. எனினும் நாக வடிவில் இருந்த அம்மன் தன்னைத் தானாக வெளிப்படுதியதை பேராசிரியர் மங்கள முருகேசன் தன்னுடைய நூலில் ஆதாரப்பூர்வமாக பிரசுரமாகியுள்ளார் .

கருமாரி வெளிப்பட்ட கதை :

 சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்  பூந்தமல்லியை அடுத்த பழந்தண்டலம் என்னும் ஊரில் வயல் வேலைகள் செய்து வாழ்ந்து வந்த  அலமேலு அம்மாள் என்னும் ஏழைப்பெண் மூலமாகத்தான் அன்னை கருமாரி முதலில்   வெளிப்பட்டாள். அலமேலு அம்மாளை ஒரு கருநாகம் தீண்டி அவர் இறந்துவிட அவரை புதைப்பதற்காக எடுத்து சென்றபோது திடீரென ஒருவர் சாமியாடி அவர் சாகவில்லை கூழை காய்ச்சி அவள் வாயில் ஊற்றுங்கள் என்று சொன்னார். அதன்படியே அம்மக்கள் செய்ய அவர் அடுத்த கணமே உயிர்த்தெழுந்து அருள் வாக்கு சொள்ளதொடன்கினார்.”என் நாதன் இட்டகட்டளைப்படி இன்னும் 21 தலைமுறை நான் இந்த குடும்பத்தாரின் வாரிசுகள் மீதிறங்கி அருள் கூறுவேன் என்றும். தன்னை நாடி வரும் பக்தர்கலுக்கு   சாம்பல் அளித்து குறைகளை தீர்த்து வைப்பேன்” என்றுகூறி  தன்னை  வெளிப்படுத்தினால்.

திருவேற்கட்டில் கோயில் உருவான கதை:

 ஒரு சமயம்  திருவேற்க்காட்டின் நில உடமையாளர் சித்துக்காடு வையாபுரி முதலியாரின் மனைவி கண்ணம்மாள் நோய்வாய்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார்.  உடனே முதலியார்  தன் மனைவியை அலமேலு அம்மாளின் மூன்றாவது தலைமுறையான தம்பு சுவாமியிடம்  அழைத்துச்சென்றார் . தம்பு சுவாமி கண்ணம்மாவை பிரம்பால் தொட அவர் குணமடைந்தார்.சாம்பலும் கனியும் பெற்ற அவர்  தன்   உயிரை காப்பாற்றிய கருமாரிக்கு கோயில் எழுப்ப முன் வந்து தன்னுடைய நிலத்தை தானமாக வழங்கி ஒரு சிறு குடிசை அமைத்தார்.  பூந்தமல்லி துனைபதிவாளர் அலுவலகத்தில் 1937 ஆம் ஆண்டு இதற்கான பத்திரமும்  பதிவு செய்யப்பட்டுள்ளது .

அம்மனுக்கு தை மாதத்தில் 19 நாட்கள் ப்ரமொத்சவமும், தீர்த்தவாரியும் , தெப்ப உற்சவமும் மிகப் பிரசித்தி.

 ஆடி மாதத்தில்  செவ்வாய் வெள்ளியில் 1008   பால்குட அபிஷேகமும் திருத்தேர் உலாவும், இசை கச்சேரிகளும் சொர்போழிவுமாக     ஆனி கடைசி ஞாயிறு முதல் தொடர்ந்து 12 வாரங்கள்  அம்மனுக்கு திளைக்க  திளைக்க  திருவிழா கொண்டாடப்படுகிறது மாசிமகம், நவராத்திரி பௌர்னமி  நாட்கலிலும், தமிழ்,ஆங்கில புத்தாண்டு ,பொங்கல், தீபாவளி போன்ற  நாட்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடத்தபடுகிறது .மேற்கண்ட நாட்களில் மக்கள்  வெள்ளமென திரண்டு வந்து அன்னையின் அருளை பெறுகின்றனர் .

The post கருமாரி உருவான கதை appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.


சுந்தரகாண்டத்தை படிப்பதினால் வரும் நன்மைகள்

$
0
0

  ராமநாமம் ஒன்றையே சதா ஜெபிப்பவன் அனுமன். ‘ராமா’ என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம். சீதையின் திருவாக்கால் சிரஞ்சீவி பட்டம்பெற்ற ஆஞ்சநேயன். எந்த யுகத்திலும் ஜீவிக்கக்கூடிய ராமபக்தன். அவரின் ராம பக்தி அளவிட முடியாதது. இவ்வாறாக அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் பெருமை பற்றிக் கூறுகிறது சுந்தர காண்டம். அனுமனுடைய ஆற்றல், அறிவு, செயல்திறன், வீரம், விவேகம், வாக்கு சாதுர்யம், முயற்சி, தன்னடக்கம், ராம பக்தி போன்ற பல உயர்குணங்கள் எல்லாம் சுந்தர காண்டத்தில்தான் முழுமையாக வெளிப்படுகின்றன. அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது.

ஸுந்தரே ஸுந்தரோ ராம:

ஸுந்தரே ஸுந்தரி கதா

ஸுந்தரே ஸுந்தரி ஸீதா

ஸுந்தரே ஸுந்தரம் வநம்

ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்

ஸுந்தரே ஸுந்தரோ கபி:

ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்

ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

 அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு; அன்னை சீதா அழகு; சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்! சுந்தரகாண்டம் படித்தால் தீராத பிரச்னைகளே இல்லை. சகல காரிய சித்தி, தீர்க்க முடியாத நோய்களினின்றும் விடுதலை, சுபகாரியத் தடை நீங்குதல், தனலாபம், தரித்திரம் முடிவுக்கு வந்து அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகுதல் என சுந்தரகாண்டம் தரும் பயன்கள் எண்ணற்றவை.

ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள் முதலியவற்றை தீர்க்கும் சுந்தரகாண்டம்

 சுந்தரகாண்டம் தொடர்ந்து படிப்பதால் மேற்கூறிய நன்மைகள் மட்டுமல்லாது ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள் போன்றவை கூட நீங்கும். சுந்தர காண்டத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்துக்கும், ஒவ்வொரு குறையை தீர்க்கும் சக்தி உண்டு.

 

The post சுந்தரகாண்டத்தை படிப்பதினால் வரும் நன்மைகள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

குழந்தை வரம் தரும் திட்டை குரு பகவான்

$
0
0

   தஞ்சாவூர் மாவட்டம் தென்குடி திட்டையில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது இங்கு சிவ பெருமாண் மங்களாம்பிகை உடன் வசிஸ்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவர்களுக்கு நடுவில் நின்று குரு பகவான் ராஜகுருவாக அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் குழந்தை வரம், கல்வி செல்வம், பொருள் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். வசிஷ்ட முனிவர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து தவம் இருந்து இறைவனை வழிபட்டுள்ளார். ஆதலால் இந்த தலம் வசிஷ்டாஸ்ரமம் என அழைக்கப்படுகிறது. இத்தலத்தை தென்குடித்திட்டை என்றும் அழைக்கின்றனர்.

பஞ்சலிங்கம்:

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ஸ்ரீவயம்பூதேஸ்வரர் என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.

மங்களம் தரும் அம்பாள்:

 மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்று அழைக்கின்றனர். சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.

12
ராசிகளுக்குரிய பல்வேறு சிறப்புகள் பெற்ற அம்பாள் :

 சிவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளார். சிவன் இல்லையேல் சக்தியில்லை. சக்தியில்லையேல் சிவன் இல்லை. ஆண், பெண் சமத்துவத்திற்கு அற்புத உதாரணமாக அம்பாள் இத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார். அம்மன் சன்னிதிக்கு எதிரே விமானத்தில் மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தோஷம் நீங்க தங்கள் ராசிக்கு கீழே நின்று அம்பாளை பிரார்த்தனை செய்து கொண்டால், தோஷங்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவார்கள் என்பது ஐதீகம்.

குரு பார்க்க கோடி நன்மை:

 நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டு. இங்குள்ள குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  இந்த ஆண்டு குரு பெயர்ச்சி ஆகஸ்டு 2–ந் தேதி தொடங்கியது இதையொட்டி, இத்தல ராஜ குருவுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், யாகங்களும் நடைபெறுகின்றன. குரு பெயர்ச்சியை முன்னிட்டு அடுத்த மாதம் 8–ந் தேதி லட்சார்ச்சனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 15–ந் தேதி தொடங்கி 17–ந் தேதி வரை 3 நாட்களுக்கு பரிகார யாக பூஜை நடத்தப்படுகிறது.

மகாவிஷ்ணு உருவாக்கிய சக்கரகுலம்:

இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன.  மகாவிஷ்ணு ஒரு சமயம் யோக நித்திரையில் இருக்கும் போது, மது, கைடவர் என்ற இரு அரக்கர்கள் தோன்றி தேவர்களை துன்புறுத்தினர். நித்திரை அகன்று எழுந்த மகாவிஷ்ணு, அசுரர்களை எதிர்த்து போர் புரிந்தார். அப்போது விஷ்ணு தன் பலம் குறைவதை உணர்ந்தார். தன் பலத்தை புதுப்பித்துக்கொள்ள திட்டையில் தன் சக்ராயுதத்தால் ஒரு குளம் உண்டாக்கி, அதில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் பலம் ஏற்பட்டு அரக்கர்களை அழித்தார். மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட குளம் ‘சக்கர தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்:

 மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார். கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார். திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இங்கு காணமுடிகிறது

 

 

 

The post குழந்தை வரம் தரும் திட்டை குரு பகவான் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

காத்மாண்டுவில் கடன் தீர்க்கும் சயன நாராயண பெருமாள்

$
0
0

 நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 2 ஆண்டுகள் பழமையான சயன நாராயண பெருமாள் கோவில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்து புத்த நீலண்டாவில் உள்ளது. ஐந்து மீட்டர் நீளமுள்ள பெரிய பாறையில் கம்பீரமான சிற்ப வேலை செய்யப்பட்டுள்ளது. இத்தலத்தின் ஜலத்தில் விஷ்ணு சுருண்ட பாம்பில் படுத்த நிலையில் பெரிய கற்சிலையில் அருள்பாலிக்கிறார்  இவரை வணங்கினால் தொழில் வளர்ச்சி பெரும், கடன் சுமை நீங்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை விஷ்ணுவின் சிலை  கிடைக்காத அரிய வகையான ஒரே கருப்பு கற்களில் செதுக்கப்பட்டது.  இந்த சிலை உயிரோட்டத்துடன் இருக்கிறது. விஷ்ணு 5 மீட்டர் 17 அடி உயரமாக 13 மீட்டர் 43 அடி நீள ஜலத்தில் சயன நிலையில் உள்ளார். இவரது கால்கள் நீந்துவதை போல் அமைந்துள்ளது.

 இவருடைய நான்கு கைகளில் வைத்துள்ள சங்கு, சக்கரம், ஜபமாலை மற்றும் தாமரை ஆகியவை விஷ்ணுவின் நான்கு முத்திரைகளை குறிக்கிறது. இச்சிலை 8 ஆம் நூற்றாண்டில் ஆண்ட லிச்சாவி காலத்தில் செதுக்கப்பட்டது. புத்த நீலகண்டன் என்ற பெயர் புதுமையாக உள்ளது. தேவர்கள் பாற்கடலை கடையும் போது வந்த விஷத்தினை சிவன் உட்கொண்டதால் அவரது தொண்டை நீல நிறமாக மாறியது அதனை தணித்து கொள்ள அதனை அவர் கோசயின்குண்ட் என்ற ஏரியில் எறிந்துவிட்டார். அவை புத்த நீலகண்டனின் தொட்டியில் விழுந்தது. இது விஷ்ணுகுரியதாக அர்ப்பணிக்கப்பட்டது.

The post காத்மாண்டுவில் கடன் தீர்க்கும் சயன நாராயண பெருமாள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

Healing Muscular pains with Ayurveda and Yoga – Dr.Gowthaman Krishnamoorthy

$
0
0

CHENNAI : Pain – it become so common in the family irrespective age, job, food habits, race etc. This article analysis the cause, prevention, management of Muscular pains with a holistic approach with Ayurveda medicines and therapies, personalized yoga and physical exercise and personalized diet plans.

Muscle Pain – Commonest affecting all age groups. Pain is related to aggravation of functional element of the body that is termed as “Vata Dosha”. According to the ancient medical system pain could be due to accumulation of toxins which in turn leads to obstruction of circulation which results in pain or painful condition.

CausesCommon causes includes muscle injury, joint pain, joint strain, infection to the joints etc

Pathogenesis according to Ayurveda

As explained previously the toxins which is accumulated the in the body obstruct the nourishing channels of the muscles and joints which in turn reduces the O2 supply and other required nutrients supply gradually leads to stiffness of the muscle or muscular system later in turns as pain.

Ayurveda explains the following are the causes for pain. Meat diet, cheese foods, cakes, pastries, candies, packed and processed foods with less fibers, vitamins and minerals, anti oxidants etc further increase the dryness of the muscles which directly results in pain and stiffness.

Symptoms

  1. Pain in one particular muscles or group of muscles, usually radiated to nearby joints.
  2. Stiffness of muscles
  3. Excruciating pain and stiffness of joints

Classification of Muscular pains according to Ayurveda

Dr Gowthaman Krishnamoorthy B.A.M.S

  1. Vata Type: Nature of pain includes throbbing, cutting, severe which is variable and migrating. Increases in cold condition, exposure to cold, eat or drink cold foods and drinks etc. Other general symptoms includes dry or scaly skin, cracking or stiffness of joints, constipation, gas trouble, nervousness, irritability, fear, anxiety and anemia. Feels better when some hot therapy is applied.
  2. Pitta Type: Pain with burning sensation, redness and inflammation and pain increases in hot weather or exposure to heat. Other general symptoms include diarrhea, loose or frequent stools, anger, sweating, fever, high irritability etc.
  3. Kapha Type: Swelling, stiffness, edema and loss of movement of the affected muscle or group of muscles. Increases in cold, wet weather. Other general symptoms include heaviness, aches, excessive oil secretion, dull and persistent pain, mucus in stool etc.

Ayurveda’s approach to pain management

Ayurveda, the science of life advocates not just management of pain, also address the prevention by advising certain daily rituals which are effective to prevent any kinds of pain.

  1. Abhyanga – Oil application all over the body followed by warm water bath. Ayurveda advises this to be everyday entity to manage the proper blood circulation and nourishment to whole body which in turn prevents the pain and maintain the youth and clear skin. Ayurveda recommends this as a part of day to day entity.
  2. Purification of the body – As per Ayurveda, the accumulation of toxins is primary causes for muscular pain. Ayurveda advises the different purification therapies depends on the seasons like end of the season and beginning of next season etc. Like Purgation type of purification therapy is advised during winter or end of winter.

Ayurveda Therapies for the Management of Pain

Ayurveda recommend personalized therapies for the prevention as well as management of pain.

  1. Abhyanga: Involves a full body massage with Ayurveda oil for 45 minutes. The oil is selected after understanding the patient’s body nature, the season, and disease condition, if any. The number of strokes and pressure vary with the condition of the individual.Benefits: Its rhythmic motion helps to relieve joints and muscles from stiffness and makes all body movements free. This treatment increases blood circulation, which in turn encourages quick removal of metabolic wastes and toxins.Indications: It is used in cases of anxiety, fatigue, circulatory disorders, rheumatism, arthritis, backache and injuries. It also prevents wrinkles and scales, helps in treatment of spondylosis, sleep disorders, paralysis, improves physical consistency, induces sound sleep, increase a general sense of well being and life span. It also helps improve the complexion and texture of the skin, prevents obesity and diabetic gangrene
  2. Pizhichil: Pizhichil, which literally means squeezing, a cloth dipped in warm medicated oil is squeezed over the patient’s body. The patient should be made to adopt the seven standard positions so that no area of the body is left uncovered. Benefits include Relieves body pain and muscle spasms, Helps preserve and promote optimum health, Helps in the healing of fractured bones, Increases immunity and prolongs life span, Promotes development of muscles, Improves skin complexion, Anti aging and rejuvenating, Ensures better blood circulation, Alleviates the burning sensation in the body, A soothing and relaxing procedure, Prescribed in clinical conditions like Paraplegia, Hemiplegia and other degenerative conditions. This treatment is very useful for rheumatic diseases, arthritis, paralysis, sexual weakness, neurological disorders, blood pressure, nervous weakness, diabetes, blood pressure, fits, convulsions, paralysis and helps to arrest the aging process. It is very effective in asthma and even in tuberculosis in early stages.
  3. Navara Kizhi: It involves fomentation of the body with bolus of cooked rice. The rice is first cooked with milk and herbal decoction. Four boluses are made of the cooked rice and are tied up in linen bags. This therapy is done in seven standard positions.This is a strengthening fomentation employed in all kinds of neurological disorders, rheumatism, arthritis congenital deformity of the limbs, dislocation of bones and joints etc. Benefits Strengthens the body, Rejuvenates the tissues, Improves muscle tone, Improves blood supply by cleansing the channels of circulation, Effective in curing diseases of the nervous system and others such as chronic rheumatism, osteoarthritis, gout, emaciation of muscles, numbness and diseases caused by vitiation of blood, Makes the body strong and sturdy, Nourishes the body and increases immunity, Promotes sharpness of vision and functions of other sense organs Slows down aging, premature graying of hair, baldness, appearance of wrinkles over the body, Gives softness to the body by improving the health of the skin.
  4. Ela Kizhi/ Podi Kizhi: Leaves & powders of medicinal herbs are fried in medicated oil and applied over the body in rhythmic massage. Good for arthritic conditions, lumbago, cervical spondylosis, frozen shoulder, sciatica, pain and stiffness of joints, post paralytic spasm, other spastic and inflammatory conditions etc. Benefits includes relieves pain, numbness and edema, controls vitiated Vata, Improves peripheral blood supply, cures diseases like arthritis, paralysis and convulsions, stimulates the nerve endings, treatment for Spondlitis and Sports injuries
  5. Kati Vasti: Lukewarm Ayurvedic / herbal oils are poured into a artificial bridge created around the affected area (Knee, Lower back, Neck etc). The healing properties of herbal oils used for this massage enriches the blood and builds and maintains strong muscle and connective tissues.Loosens stiff joints, helps to cure cervical spondlitis, neck pain, paralysis and numbness of hands, Stimulates and nourishes nerves relieving pain and numbness, This treatment is very effective in treating different conditions of the knee joints like arthritis, degenerative conditions etc.
  6. Pichu: A thick layer of cotton soaked with warm medicated oil is applied over the affected area. The oil is recycled periodically to make it warm. Very effective for degenerative and painful problems like back pain, Osteo-arthritis, Spondlitis, injuries, etc.Recommended for Neurological disorders like Paralysis, facial palsy etc.
  7. Ksheera Dhoomam: A fomentation process, medicated milk is heated and the steam is passed over the entire body.It is effective for numbness, headache, allergies, nervous disorder and paralysis.Helps eliminating facial paralysis disorders and other nervous disorders of the face and speech disorders, cervical spondylosis, spastic disorders and neurological problems
  8. Vasti: This is a treatment in which prescribed medicated oils, decoctions, herbal preparations, extracts are applied through the rectum.Good for arthritis, paralysis, hemiplegia, numbness and constant constipation, degenerative, neurological problems, chronic back pain, infertility, sciatica, obesity, digestive disorders, ulcer. It purifies the body, maintains health and longevity.

Ayurveda herbs good for pain

  1. Guggulu (Commiphoramukul- gum) :It is the most effect herb used in the Ayurvedic treatment of arthritis. Guggulu has strong rejuvenating, purifying, medicinal and healing qualities. Guggulu is perhaps used more than any other herb in Ayurveda. Guggulu increases the white blood cell count, dis-infects secretions in the body. Guggulu has been used extensively for similar health disorders such as rheumatism, gout and lumbago.
  2. Rasna (Vanda roxburghii): The root of the plant is found Effective in inflammations, rheumatic disorders, osteoarthritis and allied disorders.
  3. Garlic (Allium sativum) :Garlic has been demonstrated as effective for high blood pressure, high blood cholesterol and as an anti-infection agent.  It has more recently been found to be effective against rheumatoid arthritis.  It may used singularly or in combination with the usual medications.
  4. Indian Gooseberry (Emblica Officinalis) :To treat rheumatism a teaspoon of the powder of the dry fruit mixed with 2 teaspoons of Jaggery can be taken twice daily for a month.
  5. Indian Aloe (Aloe vera):Indian aloe is useful in lumbago, sciatica, gout and rheumatism. The pulp of one leaf is taken daily for relief.

Diet: Avoid curd & all sour items pulses (except moong dal), rice, meat, fish, white bread, sugar, refined cereals, fried foods, tea or coffee, potato & lemon juice. Celery seeds, bitter gourd are highly beneficial.

Yoga Asana good for prevention and management of pain

  1. Padma Asana
  2. Bujanga Asana
  3. Chalapa Asana
  4. Nauka Asana
  5. Dhanur Asana
  6. Parvata Asana
  7. Koorma Asana

A Holistic approach with Ayurveda therapies and medicines, Life style changes, Diet and exercises, Yoga can help both prevention and management of Muscular pains.

In Ayurveda, we analyze the causes and create a personalized healing plan with Ayurveda therapies and medicines, Yoga and diet which are very effective in eliminating the pain completely and permanently.

You Can Write to Dr.Gowthaman at drkgowthaman@gmail.com

You can Mail Your Feedback at editor@swasthiktv.com

The post Healing Muscular pains with Ayurveda and Yoga – Dr.Gowthaman Krishnamoorthy appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

கஞ்சி குடித்தால் நோய் தீர்க்கும் வேள்விமலை முருகன்

$
0
0

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள வேள்வி மலையில் பழமையான முருகன் கோவில் உள்ளது இங்கு முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் திருமணம் நடந்த போது அதற்காக வேள்வி நடந்த இடம் வேள்வி மலை என்று கூறப்படுகிறு. இப் போது மாறி வேளிமலை என்று அழைக்கப்படுகிறது வேலி என்றால் திருமணம் என்று பொருள் பழனியில் எப்படி பஞ்சாமிரதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறதே ! அதேபோல் இங்குள்ள முருக பெருமானுக்கு  வெள்ளிக் கிழமை தோரும் கஞ்சி இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதமாக தரும் கஞசியை குடித்தாள் நோய் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

வள்ளியைக் கரம் பற்றியத் தலம்:

  valli_vedar_muruganஇந்த ஆலயத்தின் தல மரம் வேங்கை மரமாகும். முருகப்பெருமான் புள்ளிமானைத் தேடி வந்து, விநாயகர் அருளால் வள்ளியைக் கானகத்தில் கரம் பற்றியத் தலம் இது. மலைக்கோவிலான இந்த ஆலயத்திற்குச் செல்ல 38 திருப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள முருகப்பெருமானின் வலது திருக்கரம் வரத ஹஸ்த முத்திரையுடன் அருள, இடது திருக்கரம் தொங்கவிட்டவாறு காட்சி தருகிறது. வேடனாய் வந்த முருகப்பெருமான், வள்ளியை கவர்ந்து சென்றபோது, அவருடன் போரிட்ட மலைக்குறவர்களுக்கு முருகன் வேடன் உருவிலேயே காட்சி கொடுத்தார். நமக்கும் அதே கோலத்திலேயே வள்ளி மணாளனாக, காண்போரை கவரும் கந்தசுவாமியாக காட்சியளித்து அருள்புரிகிறார். மூலவர் முருகப்பெருமான் குமாரசுவாமி என்னும் திருப்பெயரில், 9 அடி உயரத்தில் தென் கிழக்குப் பக்கமாக வீற்றிருக்கிறார். அருகில் வள்ளியம்மை காட்சி தருகிறார். இந்த மூலவர் சுதையால் ஆனவர். உற்சவர் முருகப் பெருமானுக்கு, மணவாள குமரன் என்று பெயர். ஆலயத்தின் வலது புறம் ஆலயத் திருக்குளமும், அதன் முன்புறம் விநாயகப்பெருமான் சன்னிதியும் உள்ளன. மூலவரின் சன்னிதியை அடுத்த,

வேங்கை மரமாக மாறி திருவிளையாடல் புரிந்தார்:

 சிவபெருமான் நந்தியோடு காட்சி தருகிறார். ஆறுமுக நயினார் மற்றும் நடராஜ பெருமானும் தெற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக் கிறார்கள். முருகன், வள்ளியைக் காதலித்த காலத்தில், மலைக்குறவர் கூட்டம் முருகனைத் துரத்தியது. அப்போது முருகப்பெருமான் வேங்கை மரமாக மாறி திருவிளையாடல் புரிந்தார். எனவே ஆலயத்தில் உள்ள தல மரமாக வேங்கை மரம், முருகப்பெருமானாகவே பாவிக்கப்படுகிறது. தல மரத்திற்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டு, தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. விரும்பிய வண்ணம் திருமணம் கைகூட விரும்புபவர்கள், கருத்து வேறுபாடு கொண்ட தம்பதியர் ஆகியோர் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டால் வளம் கூடும்; வாழ்வு சிறக்கும்.

ஆட்டுத் தலையுடன் உள்ள தட்சன்:

  இந்தக் கோவிலில் தட்சனுக்கு தனி சன்னிதி உள்ளது. சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் செய்தான். அவனது ஆணவத்தால் யாகம் அழிந்ததும், தட்சனும் அழிந்து ஆட்டுத் தலையுடன் விமோசனம் அடைந்தான். ஆட்டுத் தலையுடன் உள்ள தட்சனே இந்த சன்னிதியில் காட்சி தரு கிறார். இங்குள்ள தூண் ஒன்றில் பின்னிப் பிணைந்திருக்கும் இரு பெரிய பாம்புகளுக்கு நடுவில் சிவலிங்கம் ஒன்று எழிலாக காட்சி தருகிறது. இதற்கு முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ராகு காலத்தில் வழிபட்டால், நாக தோஷம் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் வள்ளியை முருகப்பெருமான் மணம் செய்த மண்டபம் காணப்படுகிறது. அதன் அருகில் விநாயகருக்கு ஒரு கோவிலும், வள்ளியம்மை குகைக்கோவிலும் உள்ளன. குகைக் கோவிலுக்கு அருகில் தினைப்புனம், வள்ளிச் சோலை, கிழவன் சோலை, வட்டச் சோலை முதலியன உள்ளன. வள்ளி நீராடிய சுனைக்கு அருகில் உள்ள பாறையில், விநாயகர், முருகன் மற்றும் வள்ளியின் சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன.

திருவிழாக்கள்: 
கார்த்திகை தினத்தில் மாலையில் இந்த ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கப்படுகிறது. அந்த நிகழ்வின் போது கலந்துகொண்டால், நமது முன் ஜென்ம பாவ வினைகளும் எரிந்து போகும் என்பது நம்பிக்கை. பங்குனி மாதம் அனுஷ நட்சத்திரம் அன்று, இரவில் இங்கு வள்ளி திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, தேனும், தினை மாவும், குங்குமமும் பிரசாதமாக வழங்கு கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் நடை பெறும் தேரோட்டத்தின் போது, இத்தல குமாரசாமி பல்லக்கில் புறப்பட்டு, அன்று இரவு கிருஷ்ணன் கோவில் ஆலயத்தில் தங்குவார். மறு நாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுசீந்திரம் சென்று அங்குள்ள பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் குமாரகோவில் திரும்புகிறார். அதே போல் நவராத்திரி விழாவின் போதும், குமாரகோவில் முருகப்பெருமான் பல்லக்கில் பத்மநாபபுரம் சென்று, அங்கிருந்து சரஸ்வதி அம்மன் மற்றும் சுசீந்திரத்தில் இருந்து வரும் முன்னுதித்த நங்கை அம்மன் சகிதம் திருவனந்தபுரத்திற்கு எழுந்தருள்கிறார். பின்னர் அன்றிரவு குழித் துறையில் தங்கி, மறுநாள் புறப்பட்டு கரமனை என்னும் ஊரில் வெள்ளிக் குதிரையேறி திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் காட்சியளிக் கிறார்.

The post கஞ்சி குடித்தால் நோய் தீர்க்கும் வேள்விமலை முருகன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

Thiruppugazh Episode – 5

ஷீரடி சாய்பாபாவின் அருளைப்பெற விரதம் அனுஷ்டிக்கும் முறைகள்

$
0
0

 சீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு

சாய் சத்யவிரத பூஜை:

 சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி நவவித பக்தியாலும் அவரை ஆராதிக்கலாம். பாபாவின் வழிபாட்டு முறையில் ஒன்று, சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும். 21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருக்க வேண்டும். மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும். டெண்டுல்கர் அத்தியாயம் படித்தல்

பாபா சத்சரித்திரத்தில்:

 டெண்டுல்கர் அத்தியாயம் என்று ஒரு பகுதி உள்ளது. அந்த அத்தியாத்தை படித்து விட்டு கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது. 11 மட்டைத்தேங்காய் பிரார்த்தனை கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டைத் தேங்காய்களை எடுத்துக் கொண்டு பாபா ஆலயத்திற்குச் சென்று, அவற்றில் 10 தேங்காய்களை ‘துனி’ (அணையா நெருப்பு) முன் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும். மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து தமக்குத் தெரிந்த ஏதேனும் இனிப்பைச் செய்து பாபாவிற்கு நிவேதிக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு, மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும்.

துனி விரத பூஜை:

  நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். அதாவது தன்னிடமிருந்த சட்கா எனும் குச்சியால் பாபா உருவாக்கிய அணையா துனி நெருப்பை 21, 48, 54 அல்லது 108 முறை என அவரவர் சௌகரியம் போல் செய்யலாம். பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். ‘புக்கே’ எனும் (தேங்காய் துருவல், அவல், சர்க்கரை) கலந்த இனிப்பை நிவேதிக்க வேண்டும். 9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும். மேற்காணும் வழிபாட்டு முறைகளில் அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை செய்து சகல வளங்களும் பெறலாம். நாம் தினமும் பார்த்து அதன்படி திட்டமிட உதவும் காலண்டர் வேறு; பாபா வைத்திருக்கும் காலண்டர் வேறு. நம் பிரார்த்தனைகள் நம் காலண்டர்படி இன்ன தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்காமல் அவர் மீது நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டும். ஏனென்றால் நமக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை அவர் தன் காலண்டர்படி தீர்மானித்து அப்படித்தான் நமக்கு அருள்வார்.

ஜெய் சாய்ராம்

The post ஷீரடி சாய்பாபாவின் அருளைப்பெற விரதம் அனுஷ்டிக்கும் முறைகள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.


வாழ்வை வளமாக்கும் வரலட்சுமி நோன்பு

$
0
0

  லட்சுமி தேவியை வழிபடும் சிறப்புமிகு விரதம் ‘வரலட்சுமி நோன்பு’ திருப்பாற்கடலை கடைந்த போது பூரண கும்பத்துடன் தோன்றியவர் லட்சுமி. இவரை மகா விஷ்ணு காதலித்து மணந்து கொண்டார். தர்மங்களை காப்பதற்காக அவதாரங்கள் எடுத்த போது, அவரோடு பல வடிவங்கள் எடுத்தார். திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும் வரலட்சுமி விரதத்தை இன்று  ஆடி வெள்ளிகிழமை கடைபிடிப்பார்கள்

திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம்:

  பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வர். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடை பெறும்.  சுமங்கலி பெண்கள் தம் குடும்பம் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழவும், செல்வங்கள் பெருக வேண்டும் என்றும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்றும், குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டியும், தேவியிடம் வரங்களை வேண்டி வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப் படுகிறது. என்னை துதித்து வரலட்சுமி விரதம் இருந்தால் இல்லத்தில் நான் வசிப்பேன்.

மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் வாழ்ந்த பெண் சாருமதி. இவள் தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல் இறைவனாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்புரிந்தார். ‘என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி விரதமுறையை கூறி அதை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் படி கேட்டுக் கொண்டாள்.  அதை அப்படியே செய்தாள் சாருமதி. அவள் பெற்ற நன்மைகளை கண்ட பெண்கள் தாங்களும் மகாலட்சுமிக்காக விரதம் இருக்கத் தொடங்கினர். விரைவில் அந்த நாட்டு மக்கள் முழுவதும் விரதம் இருக்கத் தொடங்கினர். நாடு வலம் பெற்றது.

விரத முறை:

பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை மெழுகி, கோலமிட்டு, வெள்ளை அடிக்க வேண்டும். வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அதை அலங்கரிக்க வேண்டும். மண்டபத்தில் இரு பக்கங்களிலும் வாழைக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்ட வேண்டும். அதில் தங்கம், வெள்ளி அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் படத்தை வைத்து வழிபடலாம். இலையை மலர்களால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.

லட்சுமிக்கு மஞ்சள் ஆடை:

 ஒரு வாழை இலைபோட்டு அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் ஆகியவற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கலசத்தை எடுத்து அதன்மேல் முழுத்தேங்காயை வைக்க வேண்டும். கலசத்தை சுற்றி மஞ்சள் நிறக்கயிற்றை இணைத்துக் கட்ட வேண்டும். தேங்காயின் மேல் குங்குமம் இட வேண்டும். அதை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு  முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். மலர்களால் அன்னையை அர்ச்சித்து, அஷ்ட லட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை இலையின் மீது தூவி பூஜை செய்து தூப தீபங்கள் காட்ட வேண்டும். அன்னம், பாயாசம், பழ வகைகள், நிவேதனம் செய்ய வேண்டும். ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். பின் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.

சுமங்கலி பெண்கள்:

 சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும். வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண் களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பாள் அருளால் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைத்து வாழ்வே வளமாகும்.

The post வாழ்வை வளமாக்கும் வரலட்சுமி நோன்பு appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

வரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும்

$
0
0

 வெள்ளிக்கிழமை முழுவதும் பூஜையில் இருக்கும் அம்மன் அலங்காரம் சனிக்கிழமை காலையில் வடக்கு திசையில் சற்று நகர்த்தி வைக்கப்படும். இரவில் அம்மன் முகத்தை எடுத்து அரிசி பானையில் வைத்து விட்டு அலங்காரத்தை கலைப்பார்கள். வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 வரலட்சுமி விரத நாளான இன்று சுமங்கலிப் பெண்கள் வீடுகளை அலங்கரித்து அம்மனுக்கு படையலிட்டு உற்சாகமாக கொண்டாடினர். செல்வ வளம் தரும் வரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனைக் கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லட்சுமி. மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவள் லட்சுமி தேவி. மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர். இவ்வாறு அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம். எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.

 வரலட்சுமி விரதத்தின் மேன்மையைச் சொல்லும் புராணக் கதைகள் நிறைய உண்டு. சௌராஷ்டிர நாட்டின் ராணியாக இருந்த சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால் ஒருமுறை மகாலட்சுமியை அவமதித்தாள். கர்வம் கொண்டு அன்னை லட்சுமியை அவமதித்ததால், செல்வம் அனைத்தும் இழந்து வாடினாள். ராணி சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வாதீனமாக ஒருமுறை வரலட்சுமி விரதம் பற்றி அறிந்தாள். அதுமுதல் அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். சாருமதியின் இந்த விரதத்தால் மகிழ்ந்த அன்னை லட்சுமி, அவளுக்கு நலன்கள் அனைத்தும் அருளினாள். தன் மகளின் நிலையைப் பார்த்து, அவள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தை தானும் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றாள் சுசந்திரா. அவள் வாழ்வு மீண்டும் வளம் நிறைந்ததாக ஆனது என்கிறது புராணகதை.

 வரலட்சுமி விரதத்தை ஒட்டி வியாழக்கிழமை மாலையே அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் கும்பத்தில் தேங்காய் வைத்து அதில் மஞ்சளில் முகம் உருவாக்கி வைத்திருந்தனர். அம்மனுக்கு நகைகள், பூமாலைகள் அணிவித்து பிரமாண்டமாக அலங்காரம் செய்து வைத்திருந்தனர். அம்மனுக்கு பிடித்தமான பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு போன்ற பல பொருட்களை நிவேதனமாக படைத்திருந்தனர். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை உள்ளிட்ட நிவேதனப் பொருள்களை கலசத்துக்கு முன்னர் வைத்து வழிபட்டனர். பின்னர் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம், மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முழுவதும் பூஜையில் இருக்கும் அம்மன் அலங்காரம் சனிக்கிழமை காலையில் வடக்கு திசையில் சற்று நகர்த்தி வைக்கப்படும். இரவில் அம்மன் முகத்தை எடுத்து அரிசி பானையில் வைத்து விட்டு அலங்காரத்தை கலைப்பார்கள். வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

The post வரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

வாலியைக் கொன்ற பாவம் தீர ராமன் பூஜித்த அன்னியூர் ஈசன்

$
0
0

  விழுப்புரம் மாவட்டம் சூரப்பட்டு அடுத்துள்ள அன்னியூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு வாலியைக் கொன்ற பாவம்தீர ராமன் பூஜித்த ராமநாதீஸ்வரர் உடன் திருப்புர சுந்தரி அம்பாளுடன் சிவபெருமான் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் நெடுநாள் திருமணத்தடை நீங்கும் மற்றும் குடும்பம் பிரச்சனைகள் விலகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

சீதையை  மீட்டுத் திரும்பியபோது :

 திருஞானசம்பந்தர் இத்தல ஈசனை ‘அன்னியூர் மண்ணு சோதியே’ என்று போற்றி வழிபட்டிருக்கிறார். வாலியைக் கொன்ற பாவம் தீர, ராமபிரான் இத்தல ஈசனை பூஜித்ததால் இங்குள்ள சிவபெருமானுக்கு ‘ராமநாதீஸ்வரர்’ என்கிற பெயர் வந்தது. ராமபிரான் சீதாதேவியை மீட்டுத் திரும்பியபோது இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டுச் சென்றிருக்கிறார். இத்தல நாயகி திரிபுரசுந்தரி. வேண்டிய வரம் யாவும் தந்தருளும் வரப்பிரசாதி.

சீதை மாயமானைக் கண்ட இடம்:

  இத்தலம் மட்டுமின்றி, இதனைச் சுற்றியுள்ள எல்லா தலங்களுமே ராமாயண நிகழ்வுகளோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன. ராமனுடன் ஜானகி தங்கிய இடம் ‘ஜானகிபுரம்’ என்றும், சீதை மாயமானைக் கண்ட இடம் ‘கண்டமான்டி’ என்றும், மரகத நிறத்திலிருந்த அந்த மாயமான் ஓடிய இடம் ‘மரகதபுரம்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

நெடுநாள் திருமணம்:

  நெடுநாள் திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் தொடர்ந்து இங்கு வந்து முறைப்படி வழிபட்டால் திருமணம் நடப்பது உறுதி. நவகிரக சந்நதியிலுள்ள சனீஸ்வரர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். தன் வாகனமான காகத்தின் மேல் கால்வைத்து நின்று காட்சியளிக்கிறார். இதுபோல் அரகண்டநல்லுரிலும், கன்னியாகுமரி அருகில் உள்ளது வடலூர் வள்ளல் பெருமான் இங்கு வந்து வணங்கிச் சென்ற வரலாற்றுச் சிறப்பும் இந்த அன்னியூர் ராமநாதீஸ்வரருக்கு உண்டு. ‘அன்னையூர்’ என்பதே அன்னியூர் எனமருவியதாகவும், கோயிலின் தல விருட்சமான வன்னி மரத்தின் பெயரால் ‘வன்னியூர்’ என்று வழங்கி, அதுவே பின்னர் ‘அன்னியூர்’ ஆனதென்றும் கூறுகின்றனர்.

 

The post வாலியைக் கொன்ற பாவம் தீர ராமன் பூஜித்த அன்னியூர் ஈசன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

திருக்கழிகுன்றத்தை கழுகுகளாக சுற்றி வரும் முனிவர்கள்

$
0
0

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழிகுன்றத்தில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது இங்கு திரிபுர சுந்தரியுடன் வேதகிரிஸ்வரர், பக்தவசலேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். முனிவர்கள் 8 பேர் கழுகு உருவில், இத்தலத்து இறைவனை வழிபட்டதால் ‘திருக்கழுக்குன்றம்’ என்று பெயர் பெற்றது. இவரை வணங்கினால் மனநிம்மதியும், முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. சிவனின் தேவராப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 261-வது தேவாரத்தலம்.

கழு-கழுகு-கங்கம் :2002080200950601

 கழுகு வழிப்பட்டதால், வழிபடுகின்றதால் இத்தலத்திற்கு திருக்கழிகுன்றம் என்று பெயர் வந்தது. பிரம்மனின் எட்டு மானச புத்திராகள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம், முடிவில் சாருப்ய எனவரம் கேட்பதற்குபதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம் எனவே நான்கு யுகத்திற்கு இருவர்களாக  என கழகுகளாக இங்கு வரும் அவர்கள் சர்க்கரை பெங்கல் பிரசாதம் உண்டு விட்டு செல்வார்கள் இப்போதும் நன்பகல் நேரத்தில் இந்த காட்சியினை பார்க்கலாம்.

மகாமகம் போல்:

 இங்கு கும்பகோணத்தில்  நடைபெறும் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்னும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. பொதுவாக உவர்நீரில்தான் சங்கு தோன்றும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் உள்ள நன்நீர் நிறைந்த குளத்தில், ஒரே ஒரு சங்கு பிறந்து வெளி வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். அவ்வாறு தோன்றும் சங்கைதான், சங்குதீர்த்த புஷ்கர மேளாவின் போது, இறைவனை அபிஷேகம் செய்ய பயன்படுத்துவார்கள்.

மலைவடிவில் 4 வேதங்கள்:

 ஒரு சமயம் வேதங்கள் அனைத்தும் சிவபெருமானிடம் வந்து தொழுதன. ‘இறைவா! இந்த உலகம் அழியும் காலத்திலும், வேதங்களாகிய நாங்கள் அழியாமல் உங்கள் திருவடியின் கீழ் நிலைபெற்றிருக்க வேண்டும்’ என்று வேண்டின. அதற்கு சிவபெருமான், ‘நீங்கள் ஒரு மலை வடிவாய் நில்லுங்கள். அங்கு நான் சிவலிங்க வடிவில் நீங்கள் செய்யும் பூஜையை ஏற்றுக் கொண்டு ஞான சொரூபமாய் இருந்து அருள்வேன். அந்த இடம் வேதகிரி என வழங்கப்படும்’ என்றார். அதன்படி ருக்வேதம் அடியாகவும், யஜூர்வேதம் மத்தியிலும், சாமவேதம் மேற்பகுதியாகவும், அதர்வணவேதம் மலையின் சிகரமாகவும் அமைந்தன.

சிவலிங்கத்தை இறுக கட்டிகொண்ட மார்கண்டேயர்:

 மிருகண்டு முனிவர்- மருத்துவதி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ‘உங்களுக்கு நீண்ட காலம் வாழும் புத்தி குறைவான மகன் வேண்டுமா?, நிறைந்த புத்தியோடு குறைந்த காலம் வாழும் மகன் வேண்டுமா?’ எனக் கேட்டார். இறைவனிடம் புத்தியோடுள்ள குறைந்த காலம் வாழும் மகனை வேண்டினர் அந்த தம்பதியர். எனவே மார்கண்டேயர் 16 வயது ஆயுளோடு பிறந்து, சிவ பக்தியோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு 16 வயது ஆனபோது அவரது உயிரைப் பறிக்க எமதூதர்கள் வந்தனர். அப்போது மார்கண்டேயர் சிவனை நினைத்து கடும் பூஜை செய்து கொண்டிருந்தார். இதனால் அவரது உயிரை கவர முடியாமல் எமதூதர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து எமனே நேரடியாக அங்கு வந்தான். எமனைக் கண்டதும் மார்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக்கொண்டார்.

 ஆனால் எமன், பாசக்கயிறை மார்கண்டேயர் மேல் வீசினான். அந்த கயிறு மார்கண்டேயரோடு சிவலிங்கத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், உக்கிரமூர்த்தியாய் தோன்றி எமனை எட்டி உதைத்தார். எமதர்மன் மூர்ச்சையாகி விழுந்தான். பின்னர் மார்கண்டேயரை என்றும் 16 வயதுடன் இருக்க அருள்புரிந்தார். இதையடுத்து மார்கண்டேயர் பல சிவதலங்களுக்கு சென்று வழிபட்டார். அப்படி அவர் வந்த திருத்தலத்தில் ஒன்றுதான் திருக்கழுக்குன்றம்.

சிவன் கொடுத்த சங்கு:

 அவர் இந்த ஆலயத்திற்கு, குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில் வந்தார். இத்தல வேதகிரீஸ்வரரை வழிபடும் முன்பாக அங்குள்ள குளத்தில் நீராடினார். சிவபூஜை செய்யும் முன்பாக அங்கு விநாயகர் ஒருவரை பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு அபிஷேகம் செய்ய, நீர் எடுக்க பாத்திரம் எதுவும் இல்லாததால், சிவபெருமானை நினைத்து வேண்டினார் மார்கண்டேயர். இதையடுத்து அங்குள்ள நன்நீர் குளத்தில் ஒரு சங்கு உருவாகி வெளிவந்தது. இறைவனால் தரப்பட்ட அந்த சங்கை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். இறைவனுக்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு ‘சங்கு தீர்த்தம்’ என்று பெயர் உண்டானது. இந்த நிகழ்வே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக் கழுக்குன்றம் திருத்தலத்தில் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமளவில் பக்தர்கள் பெருமலவில் கலந்து கொண்டு சங்கு தீர்த்தக் குளத்தில் நீராடி மகிழ்வார்கள்.

 சங்கின் இத்திருப்பிறப்பு முதன்முதலில் குரு பகவான் கன்னி ராசியில் செல்லும் போது நடந்தது. ஆகவே குரு பகவான் கன்னி ராசிக்குச் செல்லும் நாள் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ வாக கொண்டாடப்படுகிறது.  அந்நாளில் குரு பகவான், இத்தல இறைவனை லட்சதீபம் ஏற்றி வழிபடுவதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இன்று வரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இங்குள்ள குளத்தில் சங்கு பிறக்கிறது. கடைசியாக கடந்த 1.9.2011 அன்று சங்கு பிறந்தது.

இந்தாண்டு கடந்த 02.08.2016-ல் சங்கு பிறப்பு நிகழ்ந்த்து:

 சங்கு பிறப்பதற்கு முதல் நாள் குளம் முழுவதும் நுரையாகக் கிளம்பும். பின்னர் அக்குளத்தில் தோன்றும் சங்கு, ஒரு ஓரமாக மிதந்து வரும். அதை கோவிலிலுக்குள் மேள தாளம் முழங்க எடுத்துச் சென்று, இறைவனின் சிறப்பு அபிஷேகங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

நால்வர் கோவில்:

 சைவ சமயக் குரவர்கள் திருக்கழுக்குன்றம் அடைந்து வேதகிரி மலையில் ஏற நிதானித்து, கீழேயே நின்று பாடல் பாடினர். இந்த இடம் நால்வர் கோவில் என்று வழங்கப்படுகிறது.

The post திருக்கழிகுன்றத்தை கழுகுகளாக சுற்றி வரும் முனிவர்கள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

மூட்டு வலிகளுக்கு ஆயுர்வேத மருத்துவம்

$
0
0

சென்னை: மூட்டுவலிகள்,இன்று எல்லோருடைய வீட்டிலும் பொதுவாக சொல்லக்கூடிய ஒருபிரச்னையாக உள்ளது. ஒரு காலத்தில் வயதான பெரியவர்களுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனை இன்று வயது வித்தியாசம் இல்லாமல் இளம் வயதினருக்கும் ஏற்படக்கூடியதாக உள்ளது.இந்த மூட்டு வலிகள் எதனால் ஏற்படுகிறது மற்றும் இந்த மூட்டு வலிகளுக்கான குறிகள் என்ன?எந்த வகையான இயற்கை சிகிட்சையில் இந்த மூட்டுவலிகள் வேகமாக மற்றும் நிரந்தரமாக குணமாகின்றன என்பதை விவரமாக இந்த தொடரில் பார்க்கலாம்.

முதியவர்களை அதிகமாக பாதிக்கும் ஆஸ்டியோ ஆர்த்ரைடீஸ் எனப்படும் சந்திவாதம்.

மூட்டுகளில் உள்ள எண்ணெய் பசை குறைவினால் வரக்கூடியது. முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒரு வித ஜவ்வு இருக்கும். இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. முழங்கால்மூட்டும், எலும்பும் ஒன்றோடொன்று ஊராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு ஜவ்வு அவசியம். ஒருவேளை இந்த ஜவ்வு தேய்ந்து போகும் போது தான் வலி உண்டாகிறது.நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமானசவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசுஇருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கி விடுவதன் மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலி மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது

பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரலாம் .எந்த விதமான காரணமும் இல்லாமலும் வயதின் காரணமாகவும் வரலாம். அதிகமாக வாகனம் ஓட்டுவதாலோ,  ஹார்மோன்கோளாறுகளாலோ, பெண்களுக்கு கர்ப்பபை எடுத்தால் எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறையும்.  மாதவிடாய் நின்ற பின்னும் இந்த எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறைந்துவிடும்.  இது எலும்பில் கால்சியம் சத்தை தக்க வைத்துக் கொள்வதில் பிரச்சினை உண்டு பண்ணி எலும்பை வலுவிக்க வைக்கும் வியாதியான osteoporosis  (கடல் காற்றில பக்கத்தில் இருக்கிற இரும்புத் தகரம் தானாக அரிக்கப்பட்டு ஓட்டை விழுகிற மாதிரி பெரிய எலும்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகளை உண்டு பண்ணும்) உருவாக காரணமாக அமைந்துவிடும்.

அதிக எடை போட்டாலும் (குண்டாக) இது சீக்கிரமாக வரலாம்.  நடக்கும் போது கூட வலி ஏற்படலாம்.  இந்த நோய்எந்த மூட்டில் வேண்டுமானாலும் வரலாம்.  உடல் எடையை தாங்கக் கூடிய மூட்டுகள் அதிகமாக பாதிக்கப்படும்.  படிக்கட்டில் ஏறும் போது இந்த நோயாளிகள்அதிகமாக சிரமத்தை உணர்வார்கள்.

Rhematioid Arhtritis – முடக்குவாதம் என்னும்ஆமவாதம்

20 வயது முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரலாம். பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.தூங்கி எழுந்தவுடன் மூட்டுகளில் இறுக்கமும் – வலியும் கூடுதல் தெரியும். இது வாதநீரில் ஒரு வகையும்ணு கூட சொல்லலாம். குளிர்ந்த நேரங்களில் அதிகவலி தெரியும். பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகள் பாதிக்கப்படுகிறது. கை மூட்டுகளை, கால்கள் என்றால் இரண்டு கால் மூட்டும் பாதிக்கப்படுகிறது. (Symmetrical Arthritis) – RA Factor – Positive ஆகரத்தப் பரிசோதனையில்  தெரியும்.பரம்பரையாகவும், அடிபடுவதாலுமம், மன உளைச்சலாலும் கூட இது வரலாம். மூட்டுகளை தவிரநுரையீரல், இருதயம், கண்களைக்கூட இது பாதிக்கும். வயிற்றுக்கோளாறுகள் பிற்காலங்களில் ஏற்படலாம்.   தோள்பட்டைவலியும், கால்மூட்டுவலியும், மூட்டுகளின் அமைப்பும்மாறி விடலாம்.  விரல்கள்வாத்துகழுத்துப்போலவும், கட்டைவிரல் ‘Z’ போலவும்மாறிவிடலாம்.

குழந்தைகளுக்கும்சிறுவர்களுக்கும்வரக்கூடிய மூட்டுவியாதி

 16 வயதுக்கும் குறைவாக இருப்பவர்களைதாக்கும் ஒரு மூட்டோ அல்லது பல மூட்டுகளோ பாதிக்கப்பட்டிருக்கலாம். வலியும், மூட்டுகளின் இயக்கமும் குறையலாம். மூட்டுகள் சூடாகவும் இருக்கும். சுரத்தினாலோ, அடிபட்டதினாலோ, காசநோய், பொன்னுக்குவீங்கி, ஜெர்மன் அம்மை நோய்கள் வந்த குழந்தைகளுக்கும் இது வரலாம். 6 வாரத்திலிருந்து 3 மாதம் வரை இருக்கலாம். மூட்டுவலியும், கல்லீரல்வீக்கமும், விட்டுவிட்டு வரும். இந்நோயை நிர்ணயம் செய்து தகுந்த மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தாவிட்டால் மூட்டு வலியும், மூட்டு வேலை செய்யாமல் போவதையும் தடுக்க முடியாது. அதனால் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் பாக்டீரியாவினால் தொண்டை அலர்ஜி ஏற்பட்டுருமாட்டிக் சுரத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனையும். ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிகிச்சைஅளிப்பது மிகவும் முக்கியம்.

Gout arthritis  முட்டுகளில் உப்புநீரால் உண்டாகும் மூட்டுவலி வாதரக்தம்

மூட்டுவலி யூரிக் அமிலபடிவுகள் மூட்டுகளின் உள்ளேயும், வெளியேயும் படிவதினால் ஏற்படுகிறது. 70 சதவிகிதம் யூரிக் அமிலம் சிறுநீர் மூலமும், செரிமான உறுப்புகள் மூலமும் வெளியேற்றப்படுகிறது. அதிகமாக வெளியேற்றப்படாமல் இருக்கும் போது வாதரக்தம் ஏற்பட்டுவிடுகிறது.  அடிபடுவதினாலோ, அதிக மது அருந்துவதாலோ நிறைய அசைவ உணவுவகைகள் சாப்பிடுவதாலோ, இனிப்பு ரொட்டிகள் சாப்பிடுவதாலோ,   காளாண்களை உண்ணுவதாலோ, காலி பிளவர்களை சாப்பிடுவதால் கூட உண்டாகலாம், எடை அதிகரிப்பு, பரம்பரை, சுற்றுப்புற சூழ்நிலைகள் முதலியவையும் இதனை உண்டாக்கலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் போது 40-50 வயது வரை உள்ளவர்களுக்கும் அதிகம் வாய்ப்புண்டு என்றாலும், எந்த வயதிலும் இது ஏற்படலாம்.  இது ஆண்களை அதிகமாகபாதிக்கிறது.  சிறிய மூட்டுகள் முதற்கொண்டு பெரிய மூட்டுகள் வரை எல்லாமும் இதனால் பாதிக்கப்படலாம்.  இதற்காக கொடுக்கப்படும் ஆங்கில மருந்துகள் சமயங்களில் சுத்தமாக பலனளிக்காமல் போகின்றது. உணவுகட்டுப்பாடு இல்லாமல் எந்த மருந்தும் உதவாது. மூட்டுகளில்அதிக வீக்கமும் இருக்கும். பாராதைராய்டு சுரப்பிகள் அதிக வேலையும், தைராய்டு சுரப்பிகளின் குறைவான வேலையும் இதற்கு காரணமாக அமையலாம்.

தொற்று கிருமிகளால் வரும் மூட்டுவலி (Infective Arthritis)

பாக்டீரியா, வைரஸ், கொனோரியா ,சிபிலீஸ், எயிட்ஸ் போன்ற பல வியாதிகளும், சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களாலும் இந்த மூட்டுவலி உருவாகலாம். மூட்டு வலியும் வீக்கமும் மூட்டைச் சுற்றி சி வந்து காணப்படும். காய்ச்சல், குளிர், பொதுவான உடல் சோர்வு,வலி தோன்றும்

நிவாரணி பொருட்கள் பயன்படுத்துபவர்கள் , சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள், சில வகை புற்றுநோய் உள்ளவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் ,மணல்வாரிஅம்மை.  Hepatitis – B  வைரஸ் போன்றவைகளாலும் பாதிக்கப்படும் போது இந்நோய் மூட்டுகளில் வலிகளை உண்டாக்கி பிறகு மூலகாரணமான தொற்று நோய் குணமாகும் போது இதுவும் தானாகவே குணமாகிறது.

 SLE (Systemic Lupus Erythematosus)

நோய் கிருமிகளும் மூட்டு வலிக்கு காரணமாகலாம்.  பெண்களை இது அதிகம் பாதிக்கும்.  தோல், மூட்டுகள், சிறுநீரகம், முதலியவை இதனால் பாதிக்கப்படுகிறது.  பல மூட்டுகளும் பாதிப்படையலாம்.  முகத்தில் வண்ணத்துப்பூச்சி போன்ற தழும்பு ஏற்படலாம்.  வெயில் அலர்ஜி, வாய் புண்ணும் இதில் வரவாய்ப்புண்டு.

 Ankylosing Spondylosis  –தனுர்வாதம்

HLA-B 27இ என்ற ரத்தப்பரிசோதனை மூலம் கண்டுபிடித்து உறுதி செய்யப்படும் இந்த நோய் முதுகுவலி, கழுத்து வலியில் ஆரம்பிக்கும். இந்த நோய் முதுகெலும்பில் நடுவிலே இருக்கும் மிக மெல்லிய சவ்வு போன்ற Disc  எனப்படும் தட்டுப் போன்ற Shock Observer போல வேலை செய்யும் அமைப்பை கெடுத்து தடிமனாகி Disc –  சவ்வு கடினமாகி ஒன்றுமேல் ஒட்டிக்கொண்டு திரும்ப இயலாத அளவுக்கு சிரமத்தை கொடுக்கும் பயங்கரமான வியாதி இது.

அடுத்து – பொதுவாக மூட்டு வலி ஏற்பட காரணம் என்ன ? – தொடரும்……

You Can Write to Dr.Gowthaman at drkgowthaman@gmail.com

You can Mail Your Feedback at editor@swasthiktv.com

The post மூட்டு வலிகளுக்கு ஆயுர்வேத மருத்துவம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

துன்பங்களை விலக்கி நன்மை தரும் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்

$
0
0

 தஞ்சாவூர்  மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வரத்தில் பழமை வாய்ந்த 6 அடி உயரம் கொண்ட துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள அம்மனை செவ்வாய் கிழமைகளில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிப்பட்டால் துன்பங்கள் விலகி, நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை

தேவி வனம், சக்திவனம்:

 அன்னை பராசக்தி கும்பகோணம் பட்டீஸ்வரம் தலத்தில் தவம் செய்த போது காமதேனு தன் மகள் பட்டியை தேவிக்கு துணையாக பணிவிடைகள் செய்ய அனுப்பியது. அப்போது பட்டியும் மணலில் லிங்கம் அமைத்து வழிபட்டதால் பட்டீஸ்வரம் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. என்ற திருப்பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. இத்தலத்தை நோக்கி சைவ செம்மல் திருஞானசம்பந்தர் நடந்து வந்த போது வெயில் கடுமையாக இருந்தது. இந்த வெம்மைக்கு மாற்றாக பட்டீஸ்வரர் முத்து பந்தலை தமது அடியார்க்கு அளித்த திருத்தலம் இதுவேயாகும். ஐந்து கோபுரங்களையுடைய சிவாலயமாக திகழந்தாலும் துர்க்கைதான் இத்தலத்தில் சிறப்புடன் விளங்குகிறாள். வடபுறவாயிலில் நுழைந்ததும் நமக்கு முதலில் காட்சியளிப்பது துர்காதேவிதான்.

கோட்டை வாயில் துர்க்கை:

 dhurgaiஆறடி உயரத்தில் கம்பீரமாக நின்ற கோலத்தில் தனிக்கோயில் கொண்டு விளங்குகிறாள். இவ்வூரார், கோட்டை வாயில் துர்க்கை என்றே அழைக்கின்றனர். இத்துர்க்கையம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள். திருமணமாகாத ஆண்களும், பெண்களும், நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலின் ஞான வாவியில் நீராடி அம்மனை வழிபட்டு குறை நீங்கி நலமடைவார்கள் நெய்விளக்கு எப்போழுதும்  எரிந்து கொண்டே இருக்கும். இதனால் இக்கிழமைகளில் பக்தர் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. துர்க்கையம்மனின் உடம்பில் வேண்டுதலுக்குரிய மஞ்சள் கயிறுகளும், எலுமிச்சம் பழங்களும் ஏராளமாக இருக்கும். கோயிலில் நெய்விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். இவ்வாலயத்தின் நந்திகள் இடப்புறம் அல்லது வலப்புறம் விலகியே இருக்கும். திருவலஞ்சுழியிலிருந்து பட்டீஸ்வரம் வந்த ஞானசம்பந்தருக்கு வழிவிட சொல்லி இறைவர் இட்ட கட்டளையால் நந்தி இவ்வாறுள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் மாலை 3.00 – 4.30 ராகு காலத்தில் துர்க்கைக்கு ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்ற வேண்டும். குடும்பத்திர்க்காண, வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேறும்.

The post துன்பங்களை விலக்கி நன்மை தரும் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

குல தெய்வ சக்தியை வீட்டிற்க்குள் அழைக்கும் வழி

$
0
0

வீட்டிற்குள் குல தெய்வ சக்தியை அழைக்க எளிய வழி உண்டு ;

மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.

வெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் – இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு பன்னீர் எந்த அளவோ அதே அளவு தண்ணீர் ஊற்றி, கலச சொம்பை சுற்றி நூல் சுற்ற தெரிந்தவர்கள் சுற்றலாம். நூல் சுற்ற தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றி விடலாம் ( துணிக்கடையில் கலசத்திற்கு சுற்றும் பட்டு துணி என்று கேட்டால் கிடைக்கும்).
பூஜையறையில் ஒரு பலகையை வைத்து, அதில் வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கலச செம்பை வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைத்து (நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.) வாழைப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைக்கவும்.

வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ (கிராமங்களில் சிறுவர்கள் ரேடியோ பூ என்று சொல்வார்கள்) அர்ச்சனை செய்யவும். வாழைப்பூ மூன்று நாட்கள் வரை தாங்கும். பூஜை மூன்று நாட்களே போதும். மேலும் தொடர்ந்து செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும் மாற்றினால் போதுமானது. பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
கலசத்தில் உளளவற்றை வீட்டில் தெளித்துவிட்டும், குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும்.

பூஜைக்குறிய மந்திரம்:-
ஓம் பவாய நம ஓம் சர்வாய நம ஓம்
ருத்ராய நம ஓம் பசுபதே நம ஓம் உக்ராய நம
ஓம் மஹாதேவாய நம ஓம் பீமாய நம ஓம்
ஈசாய நம

தினமும் 108 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள் என்பது நம்பிக்கை..

The post குல தெய்வ சக்தியை வீட்டிற்க்குள் அழைக்கும் வழி appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.


Navagraha Sthalangal (In and around chennai)

$
0
0

There are 9 temples at the outskirts of Chennai dedicated to the Navagrahams. These are similar to Kumbakonam, where our ancestors have built temples for all 9 planets in the Thondai Mandalam. Navagraha temples are all situated close to Porur-Kunrathur road. It is possible to cover them all in a day. All of them belong to the Chozha period with brilliant architecture and divinity.

The main deities of all these temples are Lord Shiva in different names. In few places the main deity, Lord Shiva Himself, represent the planet and so there is no separate shrine for the respective Graham in the temple.

Timing:  7 AM – 12 NOON and 4 PM to 7 PM.

Sri Ramanaadheswarar Temple- Porur

(Jupitor- Guru)

eporurramana

In chennai this temple stays to be a very special temple for Sri Guru and can also be called as Guru Sthalam. It is located in Porur, Uthara Raameswaram, Eswaran Koil Street, Chennai 600116

This ancient temple is dedicated to Sri Ramanaadheswarar. This ancient temple is connected with the Ramayana period. According to history, Sri Rama on his way to Sri Lanka rested here in this place which was then a forest. While resting under an Amla tree (‘Nelli’ in Thamizh), He realized that there was a Shiva Lingam underground and his feet had touched the head of the Lingam unknowingly.

Sri Agatheeswarar Temple- Kolappaakkam

(Sun-  Suryan)

agasthi

This temple is situated in Kolapaakam and is treated as Navagraha Sthalam with the specialty of Sri Suriyan (SUN) which is the supreme power for all the other Grahas.

Agasthya and Vaageesa Munivar worshipped here. The eastern side has a separate Suryanar sannidhi which has prominence and is seen above. It is believed that Surya bhagawan came here to pray to lord Shiva. The Bhairavar is also very powerful and every sunday special poojas are done for Bhairavar during rahu kalam and 6 weeks will get our ishta karyam. The Peacock is sculpted out of green granite and is called Maragadha Mayil.

Sri Somanaadheeswarar Temple – Somangalam

(Moon – Chandran)

somana

This is a Chandran Sthalam located in Somangalam, a village close to Chennai is the seat of Kamakshi Amman Sametha Somanatheswarar Koil. The village itself gets its name from Chandran or Soman as he prayed to The Lord at this temple to get rid of his sin.

This temple has been reconstructed several times over the years. Somaskanthan the local king was one of those who constructed this temple. The King had channelled all his resources to the temple construction. While in the midst of the temple construction, an enemy King saw the opportunity and mounted an attack. The king was totally taken back and was absolutely not expecting or prepared for this. He prayed to The Lord here to save him and his kingdom. The Lord immediately obliged by directing his vehicle Nandhi to fight the advancing army of the enemy. Nandhi is supposed to have blown away the enemy with one big snort. Lord Shiva then directed Nandhi to face east permanently and guard the kingdom against future attacks. The Nandhi is seen with his back to Lord Shiva and facing East. This is a rare feature in any Shiva temple.

Sri Vaidheeswarar Temple –  Poondhamalli

Mars – Chevvai

evaithe

This temple is situated Poonamalli near bus stand and this temple is more famous for Angaaragan. This temple is very similar to the Vaidheeswaran Koil temple near Kumbakonam (Tamil Nadu). It is also said that the special pooja performed in the southern part of temple can also be done in this particular temple as well. This temple for Lord Shiva is more than 1000 years old. The main deity here is Sri Vaidheeswarar and Goddess Sri Thaiyyal Naayagi.

There are some beautiful carvings on either sides of the entrance. The Sthala Viruksham for this temple is Thaazhi Panai Maram (Palm tree). The temple pond (called Vinai Theertha Kulam) is located on the eastern side of the temple, which needs attention.

Sri Sundhareswarar Temple- Kovur

(Mercury- Budhan)

esundra

This temple is situated in Kovur in Chennai. Sundhareswarar temple is a special temple for Sri Budhan. The special poojas and Parikaras related to Sri Budhan are done in this temple.  The legend goes that goddess kamakshi was in penance at neighbouring mangadu to win the hand of the lord shiva in marriage. The intensity of penance was so high that it radiated lot of heat and it was unbearable. Lord shiva too was in penance at that time and did not respond to Goddess kamakshi.  The sages and devas approached Mahavishnu and sought his help. He directed his consort to Goddess Mahalakshmi to do the needful and save the people. She was born as a cow and worshipped lord shiva and hence he opened his eyes and the place was saved from the heat.

Sri Velleeswarar Temple- Maangaadu

(Venus- Sukran)

Sri-Velleswarar-temple

In chennai Velleeswarar temple is popularly known as the Sukran Sthalam. This temple is situated in Mangadu. Mother Parvathi had to land on Earth due to the curse of Lord Shiva as she covered his eyes in playful mood resulting in a standstill of the activities of the world. She came to this place, stood on one leg amidst five types of fire, seeking the grace of Lord to take her back. It was at the same time, planet Venus-Shukra too performed penance on Lord Shiva in this place to have his eye back which he lost for blocking the charity offered by Mahabali

Sri Agatheeswarar Temple- Pozhichalur 

(Saturn – Sani)

ePozhichalur Sri Agatheeswarar

Saneeswarar temple is very famous all over India as Saneeswarar plays a vital role in the astrology of every person. This Saneeswarar temple is located in Pozhichalur. In this temple, when offerings of food is done to God Sani, the crows that are said to be his vehicles come in large numbers and eat the food given to them. During this time, those who want to get rid of the adverse impact of God Sani, gather in large numbers and feed the crows, cattle, dog and get themselves relieved from their sins.

Sri Neelakandeswarar Temple- Gerugambaakkam

(KETHU)

eSri Neelakandeswarar Temple

This temple is situated in Gerugambaakam which also comes under the Thondai Naadu of the olden days. This temple is famous for the Navagraha Sri Kethu and also called as Neelakandeswarar temple which means the blue necked lord shiva.

 Sri Naageswarar Temple- Kunrathur

(RAGHU)

eSri Naageswarar Temple- Kunrathur

Sri Nageswarar templeis dedicated to raaghu is located in the city of Tirunageswaram. This temple is said to have been built by Kulothunga Chozha in 1073 AD during his 3rd year of reign. According to inscriptions found here, this place was referred as ‘Jayankonda Chozha Mandalathu Senkaattu Kottathu Maaganoor Naattu Somangalamaana Rajasigaamani Chathurvedhi Mangalam”. This place was gifted (tax free) to Vedic Brahmins by ancient kings were called Chathurvedhi Mangalams.

A few years ago, the Shiva Linga installed by Sekkizhar was damaged. Devotees removed it and put it in the Surya Theertha and replaced it with a new Linga. At night, Lord Shiva appeared in the dream of a Shiva devotee and directed him to install the original Linga itself again in the sanctum sanctorum. The order of the Lord was duly carried out and the new Linga was placed behind the shrine. The new Linga named Lord Arunachaleswarar is also revered as the presiding deity.

The post Navagraha Sthalangal (In and around chennai) appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

எந்த பிரச்சனைக்கு என்ன மூலிகை நீர் அருந்தவேண்டும்?

$
0
0

சென்னை : நம் முன்னோர்கள் சொல்லியபடி எந்தெந்த உடல் உபாதைகளுக்கு எந்தெந்த மூலிகை நீர் அருந்தினால் அந்த நோய் நம் உடலை விட்டு நீங்கும் , இதோ ஸ்வஸ்திக் டிவி .காம் வாசகர்களுக்காக

எந்த பிரச்சனைக்கு என்ன மூலிகை நீர் அருந்தவேண்டும்?

ஆவாரம்பூ நீர்:

“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்:
சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்:
செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்:
“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்:
குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

swasthiktv.com

வல்லாரை நீர்:
யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.

ஸ்வஸ்திக் டிவி .காம்

#spirituality #spiritual #spiritualgrowth #devotional #devotion #swasthik #swasthiktv .com #swasthiktv #spiritiualwebtv #devotionalwebtv #hinduspiritualwebtv #hindudevotionalwebtv #lordshivan #swarnalingam  #bairavar #mooligaineer #herbalwater

The post எந்த பிரச்சனைக்கு என்ன மூலிகை நீர் அருந்தவேண்டும்? appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்

$
0
0

சென்னை: எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த பைரவரை வணங்கலாம்? – நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்

அசுவினி – சரஸ்வதி – ஞான பைரவர் – பேரூர்

பரணி – துர்க்கை – மஹா பைரவர் – பெரிச்சியூர்

கார்த்திகை – அக்கினி – அண்ணாமலை பைரவர் – திருவண்ணாமலை

ரோகினி – பிரம்மன் – பிரம்மசிரகண்டீஸ்வரர் – திருகண்டியூர்

மிருகசீரிஷம் – சந்திரன் – க்ஷேத்திரபால பைரவர் – ஷேத்ரபாலபுரம்

திருவாதிரை – சிவன் – விடுக பைரவர் – வடுகூர்

புனர்பூசம் – அதிதி – விஜய பைரவர் – பழனி

பூசம் – பிரஹஸ்பதி – ஆஸின பைரவர் – ஸ்ரீ வாஞ்சியம்

ஆயில்யம் – ஆதிசேஷன் – பாதாள பைரவர் – காளஹஸ்தி

மகம் – சுக்கிரன் – நர்த்தன பைரவர் – வேலூர்

பூரம் – பார்வதி – பைரவர் – பட்டீஸ்வரம்

உத்திரம் – சூரியன் – ஜடாமண்டல பைரவர் – சேரன்மகாதேவி

அஸ்தம் – சாஸ்தா – யோகாசன பைரவர் – திருப்பத்தூர்

சித்திரை – விஸ்வகர்மா – சக்கர பைரவர் – தர்மபுரி

சுவாதி – வாயு ஜடாமுனி – பைரவர் – போர்பனைக்கோட்டை

விசாகம் – முருகன் – கோட்டை பைரவர் – திருமெய்யம்

அனுஷம் – லக்ஷ்மி – சொர்ண பைரவர் – சிதம்பரம்

கேட்டை – இந்திரன் – கதாயுத பைரவர் – சூரக்குடி

திருக்கோஷ்டியூர் – வயிரவன்பட்டி

திருவாவடுதுறை – தபசுமலை

மூலம் – அசுரர் – சட்டைநாதர் – சீர்காழி

பூராடம் – வருணன் – வீர பைரவர் – அவிநாசி , ஒழுகமங்கலம்

உத்திராடம் – கணபதி – முத்தலைவேல்வடுவர் – கரூர்

திருவோணம் – விஷ்ணு – மாரிதாண்ட பைரவர் – வயிரவன்பட்டி

அவிட்டம் – வசுக்கள் – பலிபீட மூர்த்தி – சீர்காழி ஆறுகமூர்
(அஷ்ட பைரவர்கள் உறையும் பலிபீடம் )

www.swasthiktv.com

சதயம் – யமன் – சர்ப்ப பைரவர் – சங்கரன்கோவில்

பூரட்டாதி – குபேரன் – அஷ்டபுஜ பைரவர் – கொக்கரையான்கோட்டை, தஞ்சாவூர்

உத்திரட்டாதி – காமதேனு – வெண்கல ஓசை பைரவர் – சேஞ்ஞலூர்

ரேவதி – சனி – சம்ஹார பைரவர் – தாத்தையங்கார்பேட்டை

ஒவ்வொரு நட்சத்திர தாரரும் அவரவர் நட்சத்திரத்திற்கு குறிபிட்டுள்ள பைரவரை வணங்கிவர ஸ்ரீ பைரவமூர்த்தியின் பரிபூரண திருவருளை பெற்று கொள்ளுங்கள்.

ஸ்வஸ்திக் டிவி .காம்

#spirituality #spiritual #spiritualgrowth #devotional #devotion #swasthik #swasthiktv .com #swasthiktv #spiritiualwebtv #devotionalwebtv #hinduspiritualwebtv #hindudevotionalwebtv #lordshivan #swarnalingam  #bairavar #ashtabairavar #bairavarpoojai #kalabairavar

The post நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

தாயாக இருந்து பிரசவம் பார்த்த தாயுமானவர்

$
0
0

 திருச்சி மலைகோட்டையில் உள்ள தாயுமானவர் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது இங்கு சிவபெருமான் மாட்டுவார் குழலியுடன் தாயுமானவர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் தாயை பிறிந்தவர்கள் இவரை வேண்டிகொண்டால் தாயாக இருந்து வழிநடத்துவார் மேலும், பெண்கள் கர்பகாலத்தில் இவரை வணங்கினால் சுகப்பிரசவம் நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை சிவனின் தோவரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69-வது தோவரத்தலம் ஆகும்.

பெண்ணுக்கு திருமணம்:

 காவிரிப்பூம் பட்டினத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் ரத்தின குப்தன் என்ற வணிகன். இவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. ரத்தினாவதி என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்தப் பெண், பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சிராப்பள்ளியில் இருந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு தன் பெண்ணை சிறப்புற திருமணம் செய்து கொடுத்தனர். ரத்தினாவதி தனது கணவருடன், திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் தெற்கு வீதியில் அமைந்த ஒரு இல்லத்தில் வாழ்ந்து  வந்தனர்.

மழை வெள்ளத்தில் சிக்கிய தாய்:

 சிவ பக்தையான ரத்தினாவதி, தினந்தோறும் சிவ பெருமானை வழிபட்டு வந்தாள். இந்த நிலையில் ரத்தினாவதி கருவுற்றாள். சில மாதங்கள் சென்ற நிலையில் அவளது கர்ப்ப காலம் முடிந்து, பேறு காலம் வந்தது. ரத்தினாவதியின் தாயார், தன் மகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, பேறு காலத்தில் தேவைப்படும் காய மருந்து, தைலம் போன்ற பொருட் களுடன் பூம்புகாரில் இருந்து, காவிரியின் வடகரை வழியாக திருச்சியை நோக்கி பயணித்தார். பல ஊர்களைக் கடந்து வரும்போது, பலத்த மழை கொட்டியது. பெரு மழையின் காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. ஆகவே ரத்தினாவதியின் தாயாரால் அக்கரைக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் தன்னுடைய பேறு காலத்தின்போது, தாயார் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணிய ரத்தினாவதி, அவரது வருகைக்காக காத்திருந்தாள். பல நாட்கள் ஆகியும் தாய் வராததால் வருத்தம் அடைந்தாள். அவளது மனம் தாயின் வருகைக்காக ஏங்கியது. தாயின் துணை இல்லாததால், தான் தினமும் வழிபடும் திருச்சி செவ்வந்திநாதரையும், மட்டுவார் குழல் அம்பாளையும் நினைத்து பிரார்த்தித்து வந்தாள்.

தாயை போல் வந்த சிவபெருமான்:

 பக்தையின் மன வேதனையைப் பொறுக்க முடியாத ஈசன், ரத்தினாவதியின் தாய் போன்ற நரைத்த தலை, தளர்ந்த நடை என்று, கையில் கோலூன்றியபடி, பேறு கால மருந்து பொருட்களுடனும், தாய் வீட்டுச் சீருடனும் அங்கு வந்து சேர்ந்தார். தன் தாயின் வருகையைக் கண்டு ரத்தினாவதி மனம் மகிழ்ந்தாள். தாயைப் போல் வந்த இறைவனும், ரத்தினாவதிக்கு தைலம் தடவி, மருந்து போன்றவற்றைக் கொடுத்து பேறு கால உதவிகள் அனைத்தையும் செய்தார். ஒரு நாள் ரத்தினாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவள் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயுமான இறைவன், ரத்தினாவதிக்கும், அவள் பெற்ற குழந்தைக்கும் வேண்டிய பணிவிடைகளைத் தாயாக இருந்து செய்து வந்தார். குழந்தையை தினமும் குளிப்பாட்டி, தொட்டிலில் இட்டு, கண்ணும் கருத்துமாக காத்து வந்தார். குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்துவிட்டன. அப்போது இயற்கையின் சூழல் மாறிவிட்டது. புயல், மழை நின்று, ஆற்றில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதனால் ரத்தினாவதியின் உண்மையானத் தாயார், அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ‘ஏற்கனவே வீட்டில் தன்னுடைய தாய் இருக்கும் நிலையில், வந்திருப்பது யார் என்று குழம்பிப்போனாள் ரத்தினாவதி. அவனது கணவன் தனகுப்தனும் திகைத்துப் போய் நின்றான். அப்போது தாயுமானவராக வந்த இறைவன் மறைந்து, ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார்.

தாயாக மாறிய தாயுமானவர்:

 பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ள சிவபெருமான், இந்தத் திருத்தலத்தில் தாயாக வந்து தங்கியிருந்து, ஒரு மானுடப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தது அதிசயத்திலும் அதிசயம் அல்லவா. காவிரியின் தென்கரையில் சிறு குன்றின் மீது குடியிருந்து மலைக்கொழுந்து ஈசர் என்றும், சாரமா முனிவரால் செவ்வந்தி நந்தவனம் அமைக்கப்பட்டு, அந்தக் பூக்களை விரும்பிச் சூடிக்கொண்டதால் ‘செவ்வந்திநாதர்’ என்றும் அழைக்கப்பட்டு வந்த இத்தல ஈசன், இந்த நிகழ்வுக்குப்பிறகு ‘தாயுமானவர்’ என்றே அழைக்கப்பட்டார். சாரமான முனிவரை, உறையூர் சோழ மன்னன் உதாசீனப்படுத்தினான் என்பதற்காக, மேற்குப்புறமாக திரும்பி உறையூரில் மண் மழையைப் பெய்ய வைத்து மன்னனுக்கு தண்டனை கொடுத்த இறைவன், தன் பக்தையான ரத்தினாவதிக்கு தாயாக வந்து தலைப்பிரசவம் பார்த்தார் என்று சொல்லும்போது, இறைவன் தனது பக்தர்களுக் காக எதையும் செய்வார் என்பது புரிகிறது.

மலை அடிவாரத்தில்:

  மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ளது. படி ஏறிச் சென்றால் அங்கு பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாய் எழுந்துள்ள இறைவன் மேற்குப் பார்த்த சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், ஐயடிகள் காடவர்கோனும், பிற்காலத்தில் தாயுமான அடிகளும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். தேவாரப்பாடல் பெற்ற 69-வது திருத்தலமாக திகழ்கிறது.

 

‘நன்றுமையானைத் தீயதில்லாணை நரைவெள்ளேறு

ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானை

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூற என்உள்ளம் குளிரூம்மே திருஞான சம்பந்தர் பாடினார்.

இத்தல அம்பாள் ‘மட்டுவார் குழல் அம்மை’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் கிழக்கு பார்த்தபடி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமானும், எட்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் ஆதிகுருவாக தட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கிறார்கள். இந்தக் குடைவரைக் கோவில், ஒரு கலைக்கோவில் மட்டுமல்ல, பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது.

வாழைத்தார் காணிக்கை:

  கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாழைத்தார்களைக் கொண்டு வந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தி, வாழையடி வாழையாக தங்கள் வம்சம் விருத்தியாக வேண்டும் என்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள், திருஞான சம்பந்தர் அருளிய பதினோரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் வழங்கி, இருப்பில் உள்ள நான்கு திருக்குறுத்தொகை பதிகங்களையும் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தால் நல்லபடியாக பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

 

 

 

The post தாயாக இருந்து பிரசவம் பார்த்த தாயுமானவர் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

குழந்தை வரம் தரும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

$
0
0

 பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் 2000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இங்கு 4அடி உயரத்தில் மதுரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். காளியம்மனுக்கு காவல் தெய்வமாக அய்யணார் உள்ளார். இங்கு உள்ள காளியம்மனை வணங்கினால் குழந்தை வரம், கல்யாண வரம் தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோவில் ஏரி, குளம், வயல்களுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளது வான்உயர்ந்த ராஜ கோபுரம் அனைவரையும் வா வென்று அழைக்கின்றது.

தொல்லை தந்த மந்திரவாதி:

 சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மனஅமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து அமைதி கொண்டாள் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. சிறுவாச்சூரின் வழிபடு தெய்வம் செல்லியம்மன் ஆகும்.ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான். மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்கிறாள். செல்லியம்மனுடன் இரவு தங்க இடம் கேட்கிறாள். செல்லியம்மனோ தன்னை மந்திர வலிமையால் தொல்லைப்படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனோ தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறித் தங்குகிறாள். வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள்.

சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுர காளியம்மன்:

 T_500_813செல்லியம்மன் அன்னை திறன் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். தான் அருகிலிருக்கும் பெரியசாமி மலைக்கு சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக்கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள். சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவேதான் திங்கள் வெள்ளி மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.

 கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலிவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது. பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து தொழ விலகிச் சென்று விடுகின்றன. குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிடக் கரைந்து காணாமற்போய் விடுகின்றன. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வாமாக இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை.

கை,கால் மாவிளக்கு:

 மாவிளக்கு ஏற்றுதல் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன் ஆகும். வயிறு, நெற்றி, நெஞ்சு, கால், கை என்று நேர்ந்து கொண்டு அந்த பாகத்தில் மாவிளக்கு வைத்து அம்மனிடம் பிராத்தனை செய்கிறார்கள். சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே இந்த மாவிளக்கு நேர்த்திகடன் என்பதுதான் மிகவும் பிரபலம். இவை தவிர இத்தலத்தில் அங்கபிரதட்ணம் செய்வதும் பக்தர்களால் செய்யப்படும் புகழ்பெற்ற நேர்த்திகடன் ஆகும். இவை தவிர பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிசேகம், அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்கிறார்கள். அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

சித்திரைத் திருவிழா :

 ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அம்மாவாசைக்குப் பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாய் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இத்திருவிழாவில் மலை வழிபாடு, திருக்கல்யாணம், வெள்ளிக் குதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கிய திருவிழா நாட்களாகும். இத்திருவிழா நாட்களில் ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். சிறப்பு வழிபாடுகள் தமிழ் ஆங்கிலப்புத்தாண்டு நாட்கள், ஆடி 18 ம் பெருக்கு புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், ஐப்பசியில் தீபாவளித் திருநாள்.கார்த்திகையில் தீபத்திருநாள், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதேசி, தைப் பொங்கல், தைப்பூசம், மாசியில் சிவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களிலும் ஆலயம் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.

 

The post குழந்தை வரம் தரும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>