Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

திருநீரால் அபிஷேகம் செய்தால் தீராத நோய் தீர்க்கும் சிவனும் ஹரியும்!

$
0
0

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று புகழ்பெற்ற செஞ்சி கோட்டை, பீரங்கிமேட்டில் அருணாசலேஸ்வரர் என்ற பெயருடன் சிவன் அருள் பாலிக்கிறார். இவரைப் பவுணர்மி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் தீர்க்க முடியாத நோய்கள் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் திரும்பலாம் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

ஸ்தலவரலாறு:

siddhar mandapam
1000 ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் வழிபாடு செய்த அருணாசலேஸ்வரர் லிங்கத்திருமேணி ஆகும். அதன்பின்னர் வந்த நாயக்க மன்னர்கள் திருக்கோயில் அமைத்து கும்பாபிஷேகம் செய்தனர். சித்தர்கள் வழி வந்தவர்களால் இக்கோயிலில் சிறப்பாக பூஜை நடைபெற்றது. அப்போது அதே ஊரில் வசித்து வந்த ஒரு பெண்ணிற்கு வலிப்பு நோய் தாக்கியது. அப்பெண் பல மருத்துவரிடம் சென்றும் பலன் கிடைக்கவில்லை. அப்போது அப்பெண் கோவிலுக்கு வந்து கண்கலங்கியதை பார்த்த பூஜை செய்யும் சித்தரிடம் தன் நோயை பற்றி கூறி கண்ணீர்விட்டார். சித்தர் சிவலிங்க திருமேணியில் விபூதி அபிஷேகம் செய்து நெற்றியில் பட்டை இட்டு, கொஞ்சம் விபூதியை வாயில் போட்டுக்கொள்ளுமாறு கூறினார். அப்பெண்ணின் தீர்க்க முடியாத நோயை முற்றிலும் விபூதியால் குணப்படுத்தினார்.
இப்படி சித்தர்களால் சிறப்பு வாய்ந்த கோயில் இயற்கை சீற்றத்தால் சிதிலமடைந்து பல நூற்றாண்டுகளாக வழிபாடு இல்லாமல் முற்றிலும் புதர் மண்டி கிடந்தது. மீண்டும் இத்திருக்கோயிலை புதுப்பிக்க சித்த மருத்துவர் ரவிச்சந்திரன் கமிட்டி செல்வம் என்பவர் தலைமையில் குழு அமைத்து நவீன கால கட்டுமான முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த பழமையான கட்டிடக் கலையை நினைவுபடுத்துவதுபோல் சுண்ணாம்பு, வெள்ளம், கடுக்காய் ஆகியவற்றை அரைத்த கலவைகளை கொண்டு இத்திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சி கொடுக்கிறது. இப்படி பழமை மாறாமல் கட்டப்பட்ட திருக்கோயில் 01.06.2014 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. சித்தர்களால் பூஜை செய்த இத்திருக்கோயில் மீண்டும் அதே காலமுறையில் உருவாக்கியிருப்பது இன்றும் சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும் நம்முடன்தான் வாழ்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம். தியான மண்டபத்தில் அருள்பாலிக்கும் 18 சித்தர்கள் அவரவர் நட்சத்திரத்தில் பூஜித்து வழிபட்டால் தீராத பிரச்சனைகளிலிருந்து நிவர்த்தி பெறலாம்.

திருக்கோயில் அமைப்பு:

மிகவும் அழகான கலை நயத்துடன் காட்சிதரும் ஐந்து நிலை templle font sideராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றதும் தெற்கு நோக்கி கம்பீரமாக காட்சிதரும் ஜேஷ்ட ராஜகணபதி அவருக்கு இடதுபுறம் ஸ்ரீ வெங்கடேஷ பெருமாள் கோயில் கொண்டுள்ளனர். ஜேஷ்டராஜ கணபதிக்கு வலதுபுறம் அமைந்துள்ள தியான மண்டபத்தில் தியான லிங்கத்துடன் 18 சித்தர்கள், நால்வர் வரும் அடியார்களுக்கு அருள்பாலித்து கொண்டுள்ளார். மூன்று நிலை கோபுர வாயிலை உள்ளே கடந்து சென்றதும் பிரகார மூர்த்தங்களாய் விநாயகர், வள்ளி தேவசேன சமேத முருகர், வேணுகோபால் சுவாமி, ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், துர்க்கை நவகிரகம், கால பைரவர், சூரியன், சந்திரன், நந்தியம் பெருமான் அருள்பாலிக்கிறார்கள்.
கோவில் வளாகத்தில் வெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயாருடன் காட்சி தருகிறார். இவரை வணங்கினால் பிரிந்த தம்பதி என்று சேருவதாக ஐதீகம். இவருக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் வளமான வாழ்வு அமையும்.
ஸ்ரீ அபிதகுஜாம்பாள் அம்பாளை மாதாமாதம் வரும் பிரதி வார வெள்ளிக்கிழமைகளில், ஜென்ம நட்சத்திரத்தில் முளைக்கட்டிய பச்சை பயிரை நைவேத்தியம் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியமும், சந்தான பாக்கியமும் கிட்டும். இக்கோவில் சிவா, விஷ்ணு தலமாக உருவாகி சிவன் வேறு விஷ்ணு வேறு இல்லை என்பதை உணர்த்துகிறது.

அமைவிடம் :
திருவண்ணாமலையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. செஞ்சி பேருந்து நிலையம் அருகிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் சிவ.ரவிச்சந்திரன் – 9443987519 மற்றும்

சிவ.செல்வம் தொடர்பு கொள்ள – 9443221623

பி.எஸ்.வசந்த்

The post திருநீரால் அபிஷேகம் செய்தால் தீராத நோய் தீர்க்கும் சிவனும் ஹரியும்! appeared first on Swasthiktv.


புத்திர பாக்யம் அருளும் அழகப்பெருமாள்

$
0
0

பொன்னமராவதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக  விளங்குவது அழகப்பெருமாள்  ஆலயம். முன்னொரு காலத்தில் பொன்னன், அமரன் என்று இரு சகோதரர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தனர்.அவர்கள் பெயரால் இவ்வூர் பொன்னமராவதி என அழைக்கப்பட்டது. சகோதரர்களில் அமரன் நினைவைப் போற்றும் வகையில் ஊரின் மையப் பகுதியில் ‘அமரகண்டம்’ எனப்படும் மிகப்பெரிய ஊருணி அமைக்கப்பட்டுள்ளது. இது சரித்திர முponnamaravathi1க்கியத்துவம் வாய்ந்த இடமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

     வேள்பாரி  எனும் ஒரு வள்ளலால் ஆளப்பட்ட பறம்பு நாட்டின் ஒரு பகுதியாக பொன்னமராவதி நகரம் விளங்கியது. இப்பகுதி பாண்டியரைத் தொடாந்து சோழர்கள், நிக்ஷதராஜாக்கள், வானாதரையர்கள், அறந்தாங்கி  தொண்டைமான்கள், பொம்முநாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள் என வரிசையாக பலரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது இப்பகுதி. இந்தப் பொன்னமராவதி ஆலயமானது கி.பி.1216-ல் மதுரையை ஆண்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. வசந்த மண்டபத்தைத் தாண்டியதும் பலிபீடம், கருடாழ்வார் சன்னதி, உற்சவ  மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. உற்சவ மண்டபம் கேரள பாணி கலையில் அமைக்கப்பட்டுள்ளது  இதன்  சிறப்பு.

     இந்தக் கோயிலின் மகாமண்டபத்தில் உடையவர், ஆஞ்சநேயர், நாகர், விஷ்வக்சேனர் சன்னதிகள் அமைந்துள்ளது. மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகப்பெருமாள் அமர்ந்த கோலத்தில் கருவறையில் எழுந்தருளியுள்ளார். சன்னதியின் வலப்பக்கமாக சௌந்தரவல்லித் தாயார் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் வடக்கே பரமபத வாசல் மற்றும் தீர்த்தக்கிணறு உள்ளன.  இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மூலவருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றுவருகிறது.

புத்திர பாக்யம் உண்டாகும்:

     ஒரு கட்டத்தில் இந்த ஆலயம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காponnamaravathi2ணப்பட்டது. அப்போது ஒரு பக்தர் தன் முயற்சியால் ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்தார். எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைப்பேறு மட்டும் கூடி வராமல் மனம் வருந்திய பக்தர் பொன்னமராவதியில் மகிமையைக் கேள்விப்பட்டு மனதிற்குள் தமது வம்சம் தழைக்க ஒரு குழந்தைச் செல்வத்தை வேண்டிஅப்படி தனக்கு குழந்தைச் செல்வம் கிடைத்தால்  மகாகும்பாபிஷேகம் செய்து முடிப்பதாக பிரார்தித்துக்கொண்டார். வேண்டியபடியே பெருமாளின் அருளால் அவரது வீட்டில் மழலைக்குரல் கேட்கத் துவங்கியது.  தனது பிரார்தனைப்படி திருப்பணியை செய்தார்.

ஆலயத்தின் முக்கிய விசேஷங்கள்:

     அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி, ஆடி திருவிளக்கு பூஜை, சித்ரா பௌர்ணமி, மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி போன்ற வைபவங்கள் இந்தக் கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அமைந்திருக்குமிடம்:

     புதுகோட்டையிலிருந்து கொட்டாம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் 35கி.மீ.தூரத்தில் பொன்னமராவதி அமைந்துள்ளது.

தரிசன நேரம்:

காலை  –  8 மணி   முதல் –  11மணி வரை .

மாலை –  5 மணி  முதல் – இரவு  8 மணி வரை .

நண்பர்களே! குழந்தைப்பேறு அருளும் இந்த பொன்னமராவதி ஆலயத்தை நீங்களும் தரிசித்து,அந்தப் பெருமாளின் ஆசி பெறுவீர்…

The post புத்திர பாக்யம் அருளும் அழகப்பெருமாள் appeared first on Swasthiktv.

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை (1.05.2016) ஞாயிறு காலை 10 மணியளவில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தன்வந்திரி முலவருக்கு தேன் அபிஷேகம், நடைபெறுகிறது.

$
0
0

  வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக தொழிலாளர்களின் உடல் நலம், மன நலம் கருதியும், அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டியும் நாளை (1.05.2016) ஞாயிறு காலை 10.00 மணியளவில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தன்வந்திரி முலவருக்கு தேன் அபிஷேகம், தன்வந்திரி யாகமும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.

  Peedamதொழிலாளர்கள் இந்நாட்டின் முதுகெலும்பாவார்கள். ஏனென்றால் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் கண்டு உலகம் செழித்தோங்க வேண்டுமானால் தொழிலாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். எனவே அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதாற்காக சிறப்பு தன்வந்திரி யாகத்தை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்த உள்ளார்.

   இந்த யாகத்தின் போது உலக தொழிலாளர்களின் நலன்கருதி தன்வந்திரி குடும்பத்தினரும், பீடத்திற்கு வரும் பக்தர்களும் இணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்ய உள்ளனர். ஆகவே அனைவரும் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு ப்ரார்த்திக்கின்றோம். மேலும் சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்

கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,

வாலாஜாபேட்டை. 632513

The post வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை (1.05.2016) ஞாயிறு காலை 10 மணியளவில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தன்வந்திரி முலவருக்கு தேன் அபிஷேகம், நடைபெறுகிறது. appeared first on Swasthiktv.

தொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம்

$
0
0

தொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம், எப்படி செய்ய வேண்டும்? – ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சஸ்திர பந்தம் பற்றி பாப்போம்.

தினமும் சஸ்திர பந்த ஸ்லோகத்தை சொல்லி வர வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும்,எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது சஸ்திர பந்தமாம்.

பக்தியுடன் செய்து பயன் பெருக!


சஸ்திர பந்தம் :

வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா

மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ

மாபாசம் போக மதிதேசார் மாபூதம்

வாபாதந் தாவேலவா.


அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும்.

 

பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.

நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் பஞ்சபூதங்களில் ஒன்றாம் தண்ணீரில் நனைத்து விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

வேல்வாங்க இயலாதவர்கள் மேற்கண்ட சஸ்திர பந்தம் படத்தை ஸ்டிக்கர் தாளில் அச்சிட்டு தொழில் / வியாபாரம் செய்யும் இடத்தில் ஒட்டிவிடவும். சிறிய அளவில் அச்சிட்டு சட்டைப்பையில் வைத்துக்கொள்ளவும்.

ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம். முருகன் அருள் கூடவே வந்து நிற்கும்.

தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி தொழில், வியாபாரம், பதவி சிறக்கப்பெற்று என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

The post தொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம் appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 02/05/2016

$
0
0

  உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் நாம் இன்று எடுத்துக் கொண்ட தலைப்பு,தொகுப்பு என்னவென்றால் புதனின் தாந்திரிக பரிகாரங்கள்.புதன் ஒரு ஜாதகத்திலே மட்டுப்பட்டால் தாய் மாமனின் உறவு அறுந்துவிடும்.புதன் ஒரு ஜாதகத்தில் மட்டுப்பட்டால் வியாபாரத்தில் ஜொலிக்க முடியாது.புதன் ஒரு ஜாதகத்தில் தாழ்ந்த நிலைக்குச் சென்றால் கல்வி கேள்விகளில்,வல்லவராய் இருப்பது அரிது.புதன் அங்கே பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு வணிகத்திலும் நாட்டமிருக்காது,வங்கியிலே கடன் பெறுகின்ற அமைப்பைப் பெற முடியாது.நுண்ணறிவு என்பது அங்கே செயலிழந்து விடும்.ஜோதிட அறிவு என்பது அவர்களுக்கு அறவே வராது.

 kumarபுதன் அங்கே பழுதுபட்டால் அவர்களுக்கு தாயார் உறவும் அங்கே பாதிக்கப்படும்.கவிதை,மேலும் கட்டுரை,எழுதுதல் மேலும் இலக்கிய அறிவு அவர்களுக்கு இருக்காது.அங்கே வியாபாரம் அல்லது தொழில் என்பதை மறந்து விடுகின்ற சூழ்நிலை வருகிறது அப்படிப்பட்டவர்கள் எல்லாம் புதனின் அருளசியைப் பெறவேண்டும் என்றால் அவர்கள் நான் சொன்ன அந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.செந்நாயுருவி என்ற மூலிகையை எடுத்து ஹோமம் செய்து வந்தால் ஒரு புதனன்று இந்த ஹோமத்தை செய்து வந்தால் அவர்களுக்கு வாழ்க்கையிலே அந்த புதன் தசையானது 17வருடம் நல்ல முறையில் இயங்கி அவர்கள் பெயர்,புகழ்,செல்வம் அனைத்தையும் பெறுவார்.மேலும் புதனுடைய அந்த கிழமைகளிலே புதன் ஓரை ஓடிக்கொண்டிருக்கின்ற நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் பச்சைப்பயிரை ஒரு தாம்பாளத்தட்டில் நிரப்பி அதன் மீது ஒரு ஐந்து முக விளக்கை ஏற்றி வணங்கி வர அவர்களுக்கு அற்புதங்கள் நடக்கும்.மேலும் பச்சைப்பயிறு பாயாசத்தை செய்து புதனன்று பெருமாள் கோயிலில் சுதர்சன ஆழ்வாரை வேண்டி அவர்கள் விநியோகம் செய்து வந்தால் அற்புதமான பலனைக் காணலாம்.மேலும் புதன் இரவு அன்று ஒரு பச்சைத் துணியிலே பச்சைப்பயிரை முடிந்து தலையனைக் கீழே வைத்து ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் இதை செய்து அதை ஒரு பெரிய பொட்டலமாகக் கட்டி ஓடுகிற நீரிலே போட்டால் புதன் இவர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவார் மேலும் புதன் என்ற கிரஹத்துக்கு பச்சை துணியை அங்கே வஸ்த்ர தானம் செய்து இவர்கள் வழிபட அருமையான ஒரு மாற்றம் இவர்கள் வாழ்க்கையிலே ஒரு பெரிய ஏற்றம் வருவதை இவர்கள் கண்கூடாக பார்க்க முடியும்.

 மேலும் புதனின் அந்த அருளாசியைப் பெறுவதற்கு இவர்கள் துளசி செடியை வளர்த்து அதைப் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து வர அற்புதமான மாற்றங்கள் இவரது வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கும் என்றால் அது அற்புதத்திலும் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்.தாய் மாமன்கள் உள்ளவர்கள் இவர்கள் வீட்டிற்கு அழைத்து அவருக்கு நல்ல முறையிலே உணவுகளைக் கொடுத்து உபசரித்து அந்த வஸ்த்ர தானம் செய்து அவருக்கு வேண்டிய உதவியை செய்யும் பொழுது புதனால் ஏற்படுகின்ற தீமைகள் அனைத்தும் கட்டுக்குள் அடங்கி நல்ல முறையிலே இவர்களுடைய வாழ்க்கையிலே வருமென்றால் ஒரு தாம்பாளத்தட்டில் பச்சைப்பயிறு,ஒன்பது வெற்றிலை,ஒன்பது பாக்கு,ஒன்பது ஒரு ருபாய் நாணயங்களை வைத்து புதன் இருக்கிற திசை வடக்கு நோக்கி இவர்கள் வழிபட புதன்கிழமைகளிலே இதை செய்து வர நிச்சயமாக ஒரு அருமையான முன்னேற்றத்தை இவர்கள் பெறுவார்கள்.

 ஒவ்வொரு புதனன்றும் தன்வந்த்ரியையும் சுதர்சன ஆழ்வாரையும் பெருமாள் கோயில்களிலும் மாலை வேளையிலே நெய் தீபம் ஏற்றி வர அற்புதமான பலாபலன்களை இந்த 17 வருட புதன் தசை நடக்கும் பொழுது அவர்களுக்கு நடப்பில் வந்துவிடும் சில நேரங்களில் புதன் பாதகமாக இருந்து இவர்களுக்கு எதிராக ஏற்பட்டால் அந்த காலகட்டத்தில் நீங்கள் இவ்விதமான தாந்திரிக பரிகாரங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ செய்து பலனைப் பெறலாம் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் குரு அவருடைய தாந்திரிக பரிகாரம் என்னென்ன எதை எதை செய்தால் அவருடைய அருளாசியைப் பெறலாம் என்பதை விரிவாகவும்,விளக்கமாகவும்,நீங்கள் பார்க்க இருக்கிறீர்கள் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி,வணக்கம்.

ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்

9962081424

The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 02/05/2016 appeared first on Swasthiktv.

ஒரே பாறையில் குடையப் பெற்ற 24 அடி  ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள்

$
0
0

செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்குவால் பூஜித்து வரப்பட்ட பெருமைக்குரியது சிங்கவரம் அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் கோயில். மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழிலோடு காணப்படும் சிங்கவரம் கிராமத்தில் குடைவரக்கோயிலாக இது அமைக்கப்பட்டது.

New Image 555555வடரெங்கம் என ஆன்றோர்களால் புகழப்படும் இத்திருத்தலம் கோயில், கருவறை, பெருமாள் இவை அனைத்தும் ஒரே பாறையில் குடையப் பெற்ற சிறப்பினை உடையது. ஆதிசேடனின் சுருண்ட படுக்கையின் மேல் இந்தப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார். 24 அடிகளைக் கொண்ட பெருமாளின் திருவுருவம் கண்கொள்ளாக் காட்சியாகும்.

பிரம்மாண்டமான இப்பெருமானின் நாமிக் கமலத்தில் பிரம்மா, மார்பிலே மகாலட்சுமி, பிரம்மா அருகில் கருடன் மற்றும் மதுனகடபர்கள், பெருமாளின் பாதத் திருவடிகளைத் தாங்குகிறாற்போல் பூமாதேவி… இத்தனை திருக்கோலங்களையும் ஒரே குடைவரையில் வடித்த சிற்பிகளின் திறமை மிகவும் பாராட்டத்தக்கது.

கல்லெல்லாம் சிலை வடித்த பல்லவ மன்னன் மகேந்திர வர்மாவால் கி.பி. 620ல் குடைவரை உருவாக்கப்பட்டு இருக்கலாமென ஒரு சாராரும், நரசிம்ம வர்ம பல்லவன் காலத்திலேயே உருவாக்கப்பட்தென மறுசாராரும் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

சிங்கவரத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளைப் போன்றே புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் என்ற இடத்திலும் ரங்கநாதப் பெருமாள் குடைவரைக் கோயில் உள்ளது.New Image 11111

பல்லவர்களால் அமைக்கப்பட்ட இந்த இரண்டு குடைவரை சயனபெருமாளில் சிங்கவரம் பெருமாளே திருவுருவத்தால் மிகப்பெரிய பெருமாள் ஆவார்.

எட்டு வகை சயனத் திருக்கோலங்களில் ஒன்றான போகநிலைச் சயனத்தில் இருக்கும் இந்த ரெங்கனை, ஒரே இடத்தில் நின்றவண்ணம் தரிசிக்க முடியாது.
பெருமாளின் திருமுகம், திருவுடல் மற்றும் திருப்பாதங்கள் எனத் தனித்தனியாக மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால் இக்கோயிலில் திருமுகம், திருவுடல் மற்றும் திருப்பாதங்கள் என மூன்று வாயில்களில் ஒரே இடத்தில் இவ்வளவு பெரிய திருமேனி உடைய பெருமாள் இந்தியாவில் வேறெங்குமில்லை. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள பெருமாள் மிகவும் கீர்த்திவாய்ந்த பெருமாள். இந்தப் பெருமாளிடம் அளவற்ற பக்தி கொண்டவனாக தேசிங்குராஜன் இருந்திருக்கிறான்.

ரங்கநாதப் பெருமானின் கீர்த்தி பெற்றவன் என்பதால், பல சிற்றரசர்களால் அடக்க முடியாத தில்லிபாதுஷாவின் முரட்டுக் குதிரையை அடக்கி பாதுஷாவினால் சிறைப்பிடிக்கப்பட்ட தந்தையையும் மீட்டு வந்தான்.

கி.பி. 1797ல் ஆற்காடு நவாப் சாதுல்லாகானை எதிர்த்துப் போரிடச் செல்வதற்கு முன் ராஜாதேசிங்கு பெருமாளைத் தரிசிக்க சென்றான். “வெள்ளிக்கிழமையான இன்று போருக்குச் செல்ல வேண்டாம். பின்னொருநாள் செல்” – எனப் பெருமாளே தேசிங்கிடம் பேசியதாக ஐதீகம். பெருமாளின் அருள்வாக்கை மீறி சென்றதால் சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் தேசிங்கு போரில் வீரமணம் அடைந்தார் என்பதும் வரலாற்று உண்மை.

திருக்கோயிலின் பாதாள அறையில் விஷ்ணு துர்க்கை அருள் பாலிக்கிறார். திருக்கோயில் குடையப்பெற்றுள்ள அதே பாறையில் வடிவமைக்கப்பட்டது இந்தத் துர்க்கை என்பது மிகவும் வியக்கத்தக்கது.

சங்கு, சக்கரம் ஏந்திய துர்க்கையாக ‘மகிஷா சூரமர்த்தினி’ காணக்கிடைப்பது வேறெங்குமின்றி இத்திருத்தலத்தில் உள்ள தனிச்சிறப்பு. குடைவரையட்டி மணிமண்டபம், ராஜகோபுரம், திருக்குளம் மற்றும் தாயார் சந்நிதிகள் பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசுகளால் கட்டப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் கோயில் மாலிக்காபூர் படையெடுப்பால் அழிக்கப்பட்ட நேரத்தில் அங்கிருந்த இரண்டு விக்ரகரங்களை திருப்பதி மற்றும் சிங்கவரம் கோயில்களில் பாதுகாத்து வைத்திருந்து, பின் ஸ்ரீரங்கம் எடுத்துச் சென்று புனருத்தாரணம் செய்து அமைத்தார்கள் என்பதும் இக்கோயிலுக்குள்ள பெருமைகளில் ஒன்று.

குடைவரைக்கோயில் அமைவதற்கு முன்பே இவ்விடத்தில் ‘வராகசுவாமி’ திருத்தலம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கோயிலில் பண்டைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை ஆராய்ந்தால் இன்னும் பல அரிய கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து மகிழ்கின்றனர். இக்கோயில் மலைமீது இருப்பதால் இங்கு பகவானை தரிசிக்கும்பொழுது ஸ்ரீ மகாவிஷ்ணுவை வைகுண்டத்திலும் திருப்பாற்கடலிலும் தரிசிக்கும் புண்ணியத்தை பெறலாம். மாசி மகத்தன்று புதுச்சேரி கடற்கரையில் சிங்கவரம் ரங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறும். 800 ஆண்டுகளாக இந்த வைபவம் சிங்கவரம் செஞ்சி ரங்கநாதருக்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

கோவில் அமைவிடம் : செஞ்சி பேருந்துநிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் சிங்கவரம் உள்ளது.

தொடர்புக்கு – ஏழுமலை செல் : 9486911916
இளம்கீர்த்தி, செல் : 9345879028

ப.பரசுராமன்
ப. வசந்த்

The post ஒரே பாறையில் குடையப் பெற்ற 24 அடி  ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 03/05/2016

$
0
0

  உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் நாம் இன்று எடுத்துக் கொண்ட தலைப்பு குருவிற்குரிய தாந்திரிக பரிகாரங்கள்.ஒருவருடைய ஜனன ஜாதகத்தை எடுத்து விசாரிக்கும் பொழுது குருவினுடைய அந்த காலம் என்னவென்றால் 16 வருட காலம்.குரு பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு குருவின் காரதத்துவம் என்னவென்றால் புத்திரன்,தனம்,அவரை தன ஸ்தானாதிபதி என்றும் கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர் ஒரு ஜனன ஜாதகத்திலே பாதிக்கப்பட்டால் பொருளாதாரத் தொல்லைகள் அவர்களுக்கு வந்துவிடும்.புகழ், பெயர், இவை அனைத்தும் கெட்டு விடும்.மேலும் குழந்தைகளால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.குடல் நோய் உருவாகும்.மேலும் இந்த காலகட்டத்தில் ஆபத்து விபத்து மரணப் படுக்கை உண்டாகும்.குரு பேரறிவைக் காட்டுகின்றதாலே கல்வியிலே படிக்கின்ற நேரத்திலே அவர்களுக்கு பிரச்சனைகள் இருக்கும்.அப்படிப்பட்ட அந்த அம்சங்களை ஒரு மனிதன் எதிர்கொள்ளும் போது அதன் தாந்திரிக பரிகாரங்களை அவன் செய்ய வேண்டும்.

 குருவிற்கு வசியத்தை ஏற்படுத்துகின்ற கொண்டைக்கடலை வியாழனன்று கொண்டைக்கடலையைத் தயாரித்து மாலை வேளையிலே நெய் தீபம் ஏற்றி அதை விநியோகம் செய்ய வேண்டும்.இரண்டாவது நமக்கு யார்யாரெல்லாம் நல்லபடியாக இருந்து ஆசிரியர்களாக இருந்து நம்மை வழி நடத்துகிறார்களோ அவர்களை எல்லாம் நாம் நம் வீட்டிற்கு அழைத்து அவர்கள் காலில் விழுந்து வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களுடைய அருளாசியைப் பெறலாம்.மேலும் திருவண்ணாமலையைச் சுற்றி குருக்கள் ஏகப்பட்ட ஆன்மீக குருக்கள் இருப்பதால் அந்த மலையை நாம் கிரிவலம் வருகின்ற அந்த நேரத்திலே ஒரு அகர்பத்தியை ஏற்றிக் கொண்டு நமசிவாய என்ற மந்திரத்தைச் சொல்லி அந்த கிரிவலம் வருகின்ற அந்த நேரத்திலே நமக்கு பலவிதமான மாற்றங்கள் உண்டாகும்.மேலும் ஒரு வியாழனன்று இரவு 8 மணியிலிருந்து 9 மணிவரை அந்த குரு ஓரை ஓடிக்கொண்டிருக்கும் நேரத்திலே மஞ்சள் துணியிலே இந்த கொண்டைக்கடலையை முடிந்து அதை தலையணை கீழே வைத்து படுத்து உறங்கி வர ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக இதை செய்து ஓடுகின்ற நீரிலே இதை கடத்தும் பொழுது நிச்சயமாக குருவின் அருளாசி நமக்கு கிடைக்கிறது.குருவை வசியம் செய்ய முல்லை மலரின் வேரில் சாப நிவர்த்தி செய்து அதை தாயத்தாக அணிந்து வர பலவிதமான நன்மைகள் நமக்கு உண்டாகிறது.

 மேலும் குரு ஓரை ஓடிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் தாம்பாளத்தட்டில் இந்த கொண்டைக்கடலையைப் பரப்பி அதிலே நெய் தீபம் ஏற்றி ஒன்பது வெற்றிலை,ஒன்பது பாக்கு,ஒன்பது ஒரு ருபாய் நாணயங்களை வைத்து வணங்கி வர குருவின் அருளாசி நமக்கு கிடைக்கிறது மேலும் இந்த 16 வருட காலத்திலே குரு மகரத்தில் நீச்சம் பெற்று தசை நடத்தினால் அவர்களுக்கு பலவிதமான சோதனைகள் வரும் அப்பொழுது நான் சொன்ன இந்த பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை செய்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்,மகிழ்ச்சி பெறலாம்.இந்த குருவின் பாதக நிலையை நாம் மாற்றலாம் என்று கூறுவதே தாந்திரிக பரிகாரம் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் சுக்கிரனின் தாந்திரிக பரிகாரங்கள் என்னென்ன என்பதை விரிவாகவும் விளக்கமாகவும்,பார்க்க இருக்கிறோம் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி,வணக்கம்.

ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்

9962081424

The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 03/05/2016 appeared first on Swasthiktv.

“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!

$
0
0

புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள சனீஸ்வரர் பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிப்பட்டால்7 ½ ரையும் விலகி 8 ஆகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

‘நன்றிதமு சனிகவச நாள்தோறும்
அன்பினொடு நவின்று போற்றில்
வென்றிதரும் விறல் உதவும் புகழ் அளிக்கும்
பெருவாழ்வு மேவ நல்கும்
கன்றுபவத் துயரொழிக்கும் வினை ஒழிக்கும்
பணி ஒழிக்கும் கவலி போக்கும்
அன்றியும் உள் நினைந்தவெல்லாம் அங்கை நெல்லி
யம்கனியாம் அவனி யோர்க்கே”

(சனி கவசத்திலிருந்து சில வரிகள்)

‘நவம்” என்றால் ஒன்பது. கிரகங்கள் என்பது கோள்களைக் குறிக்கும், ஒன்பது கிரகங்களாகிய, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), சுக்கிரன், ராகு, கேது மற்றும் சனி ஆகியவற்றின் சுழற்சியின்போது இயற்கையிலும் மாறுதல் நடைபெறுகிறது. அதேபோன்று, மனிதர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிப்பதைக் காணலாம் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய ஜோதிடர்கள் கணித்துக் கூறி உள்ளனர்.images (1)

கோள்கள் இடம் விட்டு இடம் மாறும் சமயம், மனிதர்களுக்கும் அவர்கள் பிறந்த நேரத்தின்படி, அவர்களது ஜன்ம நட்சத்திரத்தின் பலன்களை துல்லியமாக கணிக்க முடியும். அடுத்த சுழற்சியின்பொழுது, அதற்கேற்றபடி ஏற்ற இறக்கங்களை காண முடியும் என்கின்றனர். உரிய பரிகாரம் செய்ய தாக்கத்தின் உக்கிரம் குறைந்து தாங்கிக் கொள்ள சூழ்நிலை உண்டாவதை அறியலாம். தொழில்களிலும், பணியாற்றும் இடத்திலும், கல்வி பயிற்சியிலும் மாற்றம் ஏற்படும்.
நவக்கிரகங்களுக்கு உரிய தலங்கள் பல இருந்தாலும் பிரசித்தி பெற்றவையாக திருநள்ளாறு இவைகளில் அநேக கோவில்கள் கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். அவைகளை வரிசைப்படுத்தி உள்ளோம்.

1. ஆலங்குடி குரு – (வியாழன்)
2. திங்கர்                  – சந்திரன்
3. திருநாகேஸ்வரம் – ராகு
4. சூரியனார் கோவில் – சூரியன்
5. கஞ்சனூர் – சுக்கிரன்
6. வைத்தீஸ்வரன் கோவில்- செவ்வாய்
7. திருவெண்காடு – புதன்
8. கீழ்பெரும்பள்ளம் – கேது
9. திருநள்ளாறு – சனி

இப்பொது அருள்மிகு தர்ப்பனேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளாறு, சனீஸ்வரரை பற்றி தெரிந்து கொள்வோமா?

இது சிவ தலமாக இருந்தாலும், சனி பகவானே மிகவும் பிரசித்தி பெற்றவராக உள்ளார். இந்த கோவிலின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த தலம் வந்து வழிபட்டவர்களில் திருமால், பிரம்மா, இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் உள்ளனர். இந்த தலத்தில் இருக்கும் விநாயகபெருமான் சொர்ணவிநாயகர் என்ற நாமத்துடன் விளங்குகிறார். இந்த கோவில் சுமார் 1900 வருடம் பழமை வாய்ந்தது.

சூரியனுடைய மனைவியின் பெயர் உஷா. அவர் சூரியனின் வெப்பம் தாளாது, அவளது நிழலில் ஒரு பெண்ணை உருவாக்கி அதற்கு சாயா தேவி என்ற பெயருடன் இருந்துவந்தார். இது அறியாமல் அவருடன் சூரியன் உறவாடி பிறந்தவர்தான் சனிபகவான். குழந்தை பிறந்த பின்பு இதை அறிந்த சூரியன் இருவரையும் வெறுத்தார். சனி பகவான் இதன் பின்பு காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு, கிரகங்களின் வழி வந்தால், நவகிரகத்திற்கு சென்று அடைந்தார்.

hqdefault (1)

திருநள்ளாற்று தர்ப்பனேஸ்வரர், அன்னை பிராணேஸ்வரியும், இங்கு அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். திருமாலுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இந்த தலத்து தர்ப்பனேஸ்வரரையும் அன்னையும் வழிபட மன்மதனை குழந்தையாகப் பெற்றார்.

திருநள்ளாறு செல்பவர்கள் கோவிலுக்குள் நுழையும் பொழுது, வாசல் படியை தொட்டு வணங்கிச்செல்கின்றனர். இந்த இடத்தில் சனீஸ்வரன் தங்கி இருப்பதாக ஐதீகம்.

நளன் தனது இன்னல்கள் தீர தர்ப்பனேஸ்வரரை தஞ்சம் அடைய இக்கோவிலில் நுழைந்த சமயம், அவரைத் தொடர்ந்து வந்த சனி பகவான், சிவபெருமான் தன் மீது கோபம் கொள்வாரோ என்று பயந்து, வாசல் படியிலேயே இருந்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால், சிவபெருமான், சனி பகவானின் பாரபட்சம் இல்லாத சேவையைப்பாராட்டி, அவருக்கு ஈஸ்வர பட்டம் தந்து தன் கோவிலின், நுழைவாயிலேயே இடம் கொடுத்து தங்க வைத்தார்.

இந்த தலத்து வரலாற்றை அறிந்தால், புராண காலத்திலேயே காதலுக்கு கொடுக்கப்பட்ட மாரியாதை தெரிகிறது. நிடத நாட்டு மன்னன் நளன். சேதி நாட்டு இளவரசி தமயந்தி. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி மணம் புரிந்து கொண்டனர். ஆனால் தேவர்கள் தமயந்தியை மணம் புரிய விரும்பினர். ஆகவே இந்த திருமணத்திற்கு பிறகு, நளன் மீது பொறாமையும் கோபமும், கொண்டு சனிபகவானை இதற்கு உதவி புரிய வேண்டினர்.

ஆனால் சனி பகவான், இவர்களது தூய்மையான அன்பை அறிந்து, நளனின் உண்மையான அன்பை அவர்களுக்கு உணர்த்த 71/2 ஆண்டுகளாக பல தொல்லைகள் கொடுத்தும், மனம் தளராத உறுதியுடன் தர்ப்பனேஸ்வரரை வந்து அடைந்து சாப விமோசனம் பெற்றார். இதை தேவர்கள் அறிந்து கொள்ளவே கலங்காத உள்ளம் கொண்ட நளனின் பொறுமையையும் தூய காதலையும் வெளிப்படுத்தச் செய்தார்.

9676539773_8f76c87e33
சனீஸ்வரரை வணங்கி வழிபட, சில முறைகளை பின்பற்றி வருகின்றனர். அதுவே பரிகாரம் தேடுவதில் நல்ல பலன் கிட்டும் என்கின்றனர்.
அதிகாலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையில் உள்ள நள விநாயகர் மற்றும் பைரவரை வழிபட்டு பின்னர் கோவிலில் உள்ள கங்காதீர்த்துக்குளத்தை வணங்க வேண்டும். அதன் பின்னர், ராஜகோபுரத்தை முழுவதுமாக பார்த்து வணங்க வேண்டும். சனீஸ்வரரின் இருப்பிடமான படிக்கட்டை வணங்க வேண்டும்.

முதல் பிரகாரத்தில் நள சரித்திரத்தை பார்த்து வணங்கவும், காளத்தி நாதரை வணங்க வேண்டும். அடுத்து கருவறையில் உள்ள மூலவர் அருள்மிகு தர்பனேஸ்வரரை தரிசிக்க வேண்டும். அதன்பின்னர் தியாகவிடங்கர் சன்னதிக்க சென்று பக்தி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் மரகதலிங்கதையும் அர்த்தநரரீஸ்வரரையும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், தரிசித்து வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும்.

அங்குள்ள தெய்வங்களுக்கு வழிபாடு செய்து பின்பு, கட்டைக் கோபுரத்துள் அருள்பாலிக்கம், அன்னை பிராணேஸ்வரியை வணங்கி அதன் பின்னர் தான் சனீஸ்வரரிடம் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரர் சன்னதிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறை அல்ல என்றும், சனிதோஷ நிவர்த்தி கிட்டாது என்றும் கூறுகின்றனர்.
இங்கு நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தக்குளங்கள் இருக்கின்றன. சனித்தொல்லை தீர, நள தீர்த்ததிலும், முந்திய சாபங்களுக்கு விமோசம் பெற பிரம்ம தீர்த்ததிலும், கல்வி மேன்மை பெற, சரஸ்வதி தீர்த்தத்திலும், நீராடி ஈசனை வழிபட பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடும்திறமை பெறுவாராம். இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்கள், மகாசிவராத்திரி, மார்கழி திருவிழா, ஐப்பசி அன்னாபிஷேகம், பிரதோஷம், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, சனிப்பெயர்ச்சி ஆகியவை ஆகும்.
சனிப்பெயர்ச்சியின் போது தங்க வாகனத்தில், தங்க கவசம் அணிந்து சனீஸ்வரர் வருவது மிகவும் ரம்மியமான காட்சி ஆகும். சனிபகவானைக்கண்டாலே பின் வாங்கும் நிலைமையில், இங்கு அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும், தமிழ்நாட்டு மக்களுக்கு இணையாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் இங்கு பலர் வருகை தருகின்றனர்.images (1) (1)

சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன் என்றும் அதற்கு அடுத்து சனிகிரகம் என்றும், வான் மண்டல அறிவியல் தகவல் வெளிப்படுத்துகிறது. சனீஸ்வாருக்கு பிடித்த தானியம் எள், ராசி மகரம், கும்பம், நிறம் கருப்பு, மலர் கருங்குவளை, திசை மேற்கு ஆகும்.
மூலவர் சுயம்பு மூர்த்தியாக தர்ப்பையில் இருந்து வெளி வந்தவராக உள்ளார். இப்பொழுதும் லிங்கத்தின் மீது தர்ப்பை முளைத்த தழும்பைக் காணலாம். இங்கு நந்தியும் பலி பீடமும், சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று விலகி இருப்பதை இந்த தலத்தில் மட்டுமே காணமுடிகிறது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடல் பெற்றதலம் இது.
நடை திறப்பு.. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.

அமைவிடம்: அருள்மிகு. தர்ப்பனேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி மாநிலம்

தொடர்புக்கு:  04368- 236530, 236504, 9442236504.

செய்தி: ப.பரசுராமன்
படங்கள் : ப.வசந்த்

The post “உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !! appeared first on Swasthiktv.


மே மாத ராசி பலனை வழங்குபவர் ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்

$
0
0

 ஓம் நமோ நாராயணாய.ஸ்வஸ்திக் டிவி.காம் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. காரணம் நாம் இப்பொழுது ஒவ்வொரு மாதத்திற்குமான பலாபலன்களைப் பார்க்கப் போகிறோம்.இப்பொழுது மே மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை கிரஹத்துடைய தாக்கம் என்ன கிரிஹத்துடைய சுழற்சி என்ன என்பதை பார்ப்போம்.

மேஷம்:

1 மேஷ ராசி அன்பர்களே இப்போது நாம் 1-05-16 முதல் 31-05-16 வரை என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.இந்த மாதம் 15ஆம் தேதிக்கு மேல் 21,22,23ம் தேதி நண்பகல் வரையில் சந்திராஷ்டமம்.அது வரையில் எப்படி இருக்கும் என்னென்ன நிகழ்வுகள் வரும் என்று பார்க்கும் பொழுது எதிர்பாராத நன்மைகளும் தனப் ப்ராப்தமும் பொருள் சேர்க்கையும் நடைபெறும்.மேஷ ராசி பொருத்தவரை செவ்வாய் தான் சுவாமி.செவ்வாயின் சார பலன் நமக்கு எப்படி இருக்கின்றது. ஒன்பது கிரஹங்களில் ஆறு கிரகங்கள் சாதகமாக உள்ளது. முதல் வாரத்தில் நாம் எதிலுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் சண்டை,சச்சரவுகள் இருக்கும். முதல் வாரம் தடுமாற்றமாக இருந்தாலும், இரண்டாம் வாரம் விசேஷமாக இருக்கும்.அந்த நேரத்தில் வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.கடன் தொல்லைகள் தீரும். மன ரீதியான தடுமாற்றங்கள் வரலாம். பெண்களுக்கு மன அமைதி குறையும். இரண்டாம் வாரம் பெண்களுக்கு மனக் கஷ்டங்கள் வரும். மூன்றாம் வாரத்தில் 21,22,23 நண்பகல் வரையில் சந்திராஷ்டமம் கவனம் தேவை. மூன்றாம் வாரம் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். சொந்த வீடு,வாகனம் அமையும்.இறுதியில் நான்காம் வாரம் நதியில் தீர்த்தமாடுவது இறைவனின் அருளாசி கிடைக்கும்.இந்த மாதம் பொறுத்த வரை மேஷ ராசிக்கு 100%க்கு 86% நன்மையே நடக்கும்.

ரிஷபம்:

2 ரிஷப ராசி அன்பர்கள் அனைவரையும் நமஸ்கரிக்கிறேன்,மே மாத பலன்களை நாம் இப்போது காண்போம்.இப்போது நடப்பது எல்லாம் நன்மையே,இருந்தாலும் ஆகஸ்ட் 2ம் தேதி குரு பெயர்ச்சி மிகவும் விசேஷமாக இருக்கும்.மே 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஒரு சில விஷயங்கள் தடுமாற்றத்தைக் கொடுக்கும்.இருந்தாலும் ஒவ்வொருவாரமும் எப்படி இருக்கும் என்பதை இப்போது நாம் பார்ப்போம்.முதல் வாரம் ஒரு சிலத் தடுமாற்றங்கள் இருந்தாலும் கூட ஒன்பது கிரகங்களில் 6 கிரகங்கள் சாதகமாக உள்ளது.நினைத்த காரியங்கள் கைகூடும்.ரிஷப ராசி நேயர்கள் தினமும் காலையில் 24 நிமிடங்கள் இறைவனைப் பிரார்த்தனை செய்யவேண்டும்.கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் கூடாது.முதல் வாரத்தில் ஒரு சில தடுமாற்றங்கள் இருக்கும் இருந்தாலும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும்.இரண்டாவது வாரம் மிகவும் நன்மை தரும்.எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.தன்னம்பிக்கையும்,மன உறுதியும் வேண்டும்.மற்றவர்களை மதிக்க வேண்டும்.ரிஷப ராசிக்கு சுக்ரன் தான் சுவாமி.இரண்டாவது வாரத்தில் 9 கிரகங்களுக்கு 6 கிரகங்கள் சௌகியத்தைக் கொடுக்கிறது.கவலை வேண்டாம்.22-05-2016 முதல் 23,24,நண்பகல் வரையிலும் சந்திராஷ்டமம்.இந்த கால கட்டத்தில் கவனம் தேவை.மூன்றாவது வாரம் கொஞ்சம் தெளிவாக இருக்கும்,கொஞ்சம் தெளிவில்லாமலும் இருக்கும்.நான்காவது வாரம் மிகச் சிறப்பாக இருக்கும்.எடுத்த காரியங்கள் வெற்றி பெரும்.வெளியூர்,வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.தாய்வழியில் நன்மைகள் நடக்கும்.இந்த மாதத்தைப் பொருத்தவரை 100%க்கு 81% நன்மைகளே நடக்கும்.

மிதுனம்:

3 மிதுன ராசி அன்பர்களே மே மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை எப்படி இருக்கும் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.கவலை வேண்டாம் சந்திராஷ்டமம் கடைசியில் தான் வருகிறது.25,26 தேதிகளில் மிகவும் கவனம் தேவை.முதல் வாரத்தில் சற்று தடுமாற்றமாக இருக்கும்.நடையிலும்,பேச்சிலும்,சற்று நிதானம் தேவை.கடன்கள் தீர வாய்ப்புகள் உண்டு.இரண்டாம் வாரம் பிரமாதமாக இருக்கும்.மூன்றாம் வாரம் பல இன்னல்கள் தீரும்.சிலருக்கு கோர்ட் வழக்குகள் பிரச்சனைகள் தீரும்.ஒரு சிலருக்கு குறிப்பாக பெண்களுக்கு வயிறு உபாதைகள்,கர்பப்பை கோளாறுகள் வரும்.கீரைகள் உணவில் சேர்பதால் நன்மை உண்டாகும். மிதுன ராசி நேயர்களில் சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பார். மூன்றாம் வரம் தடுமாற்றத்துடன் முடிந்தாலும் கூட நான்காம் வாரம் சந்திராஷ்டமம் இருந்தாலும் கூட நன்றாகவே இருக்கும் கவலை வேண்டாம்.இந்த மாதத்தைப் பொருத்தவரை 100%க்கு 89% உங்களுக்கு நன்மையே நடக்கும் என்று சொல்லி இரவு உறங்கும் முன் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நன்மையையப் பெறுவீர்.

கடகம்:

4 கடக ராசியைப் பொருத்தவரை இந்த மாதம் 1-05-16 முதல் 31-05-16 வரை என்னென்ன நடக்க இருக்கிறது  என்பதைப்  பார்ப்போம்.அந்த வகையில் முதல் வாரத்தில் தடுமாற்றம் இல்லாத நிலை இருக்கும். காரணம் இந்த மாதம் கடைசியில் தான் சந்திராஷ்டமம்.27-05-16 முதல் 28,29 நண்பகல் கொஞ்சம் சர்வ ஜாக்கிரதை இந்த இரண்டரை நாட்கள். இதைத் தவிர்த்து மட்டற்ற அனைத்து நாட்களுமே சுபிக்ஷக்தை கொடுக்கக் கூடிய நாள்.கடக ராசிக்கு இந்த முதல் வாரத்தில் எல்லா நாட்களுமே நன்மைகள் கிடைக்கும்.சுயதொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.ஆயில்ய  நட்சத்திரத்தில் பிறந்வர்களுக்கு சில தடுமாற்றம் இருக்கும்.கடக ராசிக்கு சந்திரன் தான் சுவாமி, சந்திரன் பல நன்மைகளைச் செய்வார். அதே நேரத்தில் இந்த முதல் வாரத்தில் வெளியூர்,வெளிநாடு செல்ல முயற்சிப்போர் கட்டாயம் வெற்றி பெறலாம்.இரண்டாவது வாரத்தில் நன்மையே நடக்கும்.கடக ராசியில் சிலருக்கு சுயநலம் இருக்கும்.ஒன்பது கிரகத்தில் ஏழு கிரகங்கள் சாதகமாக உள்ளது.மூன்றாவது  வாரத்தில் ஒரு சில தடுமட்ட்ரங்கள் இருந்தாலும் காரிய சித்தி இருக்கும்.தொழிலில் ஈடுபட்டோருக்கு நன்மைகள் நடக்கும்.திருமணத் தடைகள் நீங்கி கைகூடும்.சொந்த வீடு அமையும்.ஒரு சிலப் பெண்களுக்கு மனத்தடுமாற்றம் அதிகமாக இருக்கும்.நான்காவது வாரத்தில் அனைத்து நன்மைகளும் நடக்கும்.கடைசி வாரத்தில் மனத் தடுமாற்றம் மனக் குழப்பங்கள் இருக்கும் கரணம் 27,28,29 நண்பகல் வரை சந்திராஷ்டமம்.இந்த நேரத்தில் கவனம் தேவை.100%க்கு 75% நன்மையே நடக்கக் கூடிய மாதமிது.

சிம்மம்:

5 சிம்ம ராசி நேயர்களே மே மாசம் 1-05-16 முதல் 31-05-16 வரை எப்படி இருக்கு என்று பார்ப்போம்.கிரஹத்துடைய சுழற்சி, நவக்ரிஹத்துடைய சுழற்சி,எப்படி என்று பார்ப்போம்.சிம்ம ராசியில் ஒரு சிலருக்கு மனத் தடுமாற்றம் நிறைய இருக்கும்.சிம்ம ராசியில் ஒருசிலருக்கு அளவுக்கதிகமாக தீய பழக்கங்கள் இருக்கும்.இதை குறைத்துக்கொள்வது நல்லது. முதல் வாரம் சில தடுமாற்றங்கள் கொடுத்தாலும் இரண்டாம்,மூன்றாம் வாரங்களில் கைக் கொடுக்கும்.ஒன்பது கிரஹங்களில்,ஆறு கிரகங்கள் சாதகமாக உள்ளது.சொந்த தொழில் துடங்கலாம்.கல்வியில் சிறந்து விளங்குவர், அலுவலில் அதிகாரநிலையில் இருப்பார்கள்.இரண்டாவது மூன்றாவது வாரம் குழந்தைகளுக்கு அற்புதமாக இருக்கும். மணம் ஆகாதவர்களுக்கு மண வாழ்க்கை தன்னால தேடி வரும்.கடைசி வாரம் சுபிக்ஷமாக இருக்கும் 30ம் தேதி 31ம் தேதி கவனம் தேவை. ஏனென்றால் சந்திராஷ்டமம்.எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும்.சொந்த வீடு மனைகள் அமையும்.வாகனங்கள் அமையும்.சிம்ம ராசியைப் பொருத்தவரை 100%க்கு 69% நன்மையே நடக்கும் மாதமிது.

கன்னி:

6 கன்னியா ராசி அன்பர்களே 1-05-16 முதல் 31-05-16 வரை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.ஹஸ்த நட்சத்திரம்,சித்ரா நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு சில தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.முதல் வாரத்தில் 5ம் தேதி மற்றும் 6ம் தேதி அமைதியாக இருக்கவேண்டும்.காரணம் சந்திராஷ்டமம்.முதல் வாரத்தை தவிர்த்து விட்டால் மற்ற மூன்று வாரங்களும் சாதகமாக இருக்கிறது.கன்னி ரசி பொருத்தவரை குரு பகவான் ஜன்மத்தில் வர இருக்கிறார். 02-08-2016 அன்று குரு பகவான் வந்து ஜன்மத்தில் உட்காரப்போகிறார்.அதே நேரத்தில் 19-12-2017இல் சனிப்பெயர்ச்சி வரப் போகிறது. இரண்டாவது வாரம் வெளியூர் வெளிநாடு பிரயாணங்கள் செல்ல வாய்ப்புண்டு. ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்கள் சாதகமாக உள்ளது.வீடு,மனைகள் வாங்கலாம். விவசாயிகளுக்கு அற்புதமான நேரம்.வீட்டிற்கு வேண்டிய பொருள்கள் வந்து சேரும்.தனப் ப்ராப்தம்,பொருள் சேர்க்கை,எதிர்பாராத நன்மைகள் இந்த இரண்டாம் வாரத்தில் உண்டு.கன்னியா ராசி பெண்கள் பயந்த சுபாவம் உடையவர்கள்.மூன்றாவது வாரத்தில் ஒரு சில தடுமாற்றம் இருக்கும்.உற்றார் உணவிர்களிடம் அவமானப் படும் சூழ்நிலை வரும். காரணம் கன்னி ராசி நேயர்கள் உண்மையே பேசிக்கொண்டிருப்பார்கள்.இந்த மாதக் கடைசியில் நன்மைகளே நடக்கும்.சொந்த வீடு, வாகனம்,சொத்து,தொழில் செய்பவர்கள் பெண்கள் அனைவருக்கும் நன்மையே நடக்கும்.ஒன்பது கிரஹங்களில் ஆறு கிரகங்கள் சாதகமாக அமைந்துள்ளது.100%க்கு 86%நன்மையே நடக்கக் கூடிய மாதமிது.

துலாம்:

7 துலாராசி அன்பர்களே 1-05-16 முதல் 31-05-16 வரை கிரஹநிலைகள் எப்படி இருக்கு என்பதைப் பார்ப்போம்.முதல் வாரத்தில் 6,7,8 தேதிகளில் கவனமாக இருக்க வேண்டும்.துலா ராசிக்கு சுக்ரன் தான் கடவுள்.காலையில் 24 நிமிடங்கள் இறைவனைப் பிரார்த்தனை செய்யவும்.மன நிம்மதி இருக்காது.வெளியூர் வெளிநாடு பிரயாணங்கள் நன்மை தரும்.குறிப்பாக பெண்களுக்கு நன்மையே செய்யக் கூடிய மாதம்.குழந்தைகளுக்கு குதூகலம் கொண்டு வரும் மாதம்.இந்த மாதத்துல கடைசி வாரத்தில் நன்மைகள் எல்லாம் நடக்கும்.குருபெயர்ச்சி ஆகட்டும்,சனிப்பெயர்ச்சி ஆகட்டும் துலா ராசி பொருத்தவரை நன்மைகள் வரும் தீமைகள் தராது. இந்த மாதத்தைப் பொறுத்த வரை 100%க்கு 88% நன்மைகளே தரக்கூடிய மாதம் இது.

விருச்சிகம்:

8 விருச்சிக ராசி அன்பர்களே 1-05-16 முதல் 31-05-16 வரை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.முதல் வாரத்தில் தடுமாற்றம் இருந்தாலும் ஓரளவுக்கு நன்மைகள் தான் நடக்கும்.விருச்சிக ராசி பொருத்தவரை கடந்த ஆறு வருட காலமாகவே ஏற்றத் தாழ்வுகள் தான் ஒண்ணுமே புரியவில்லை.கூட்டுக் குடும்பமாக வாழ்வது உத்தமம் காரணம் விருச்சிக ராசிக்கு சந்திரன் சுவாமி.இரண்டாவது வாரம் சந்திராஷ்டமம்.9ம் தேதி,10ம் தேதி கவனம் தேவை. வெளியூர்,வெளிநாடுகள் செல்ல வேண்டுவோர் செல்லலாம்.சொந்தத் தொழில்,கலைத் தொழில் செய்வோர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.விருச்சிக ராசிக் காரர்களுக்கு பக்தி அதிகமாக இருக்கும். மே மாதத்தை பொருத்தவரை மூன்றாவது வாரம் சிறப்பாக இருக்கும். நான்காவது வாரம் அதை விட சிறப்பாக இருக்கும்.ஒன்பது கிரஹங்களில் ஆறு கிரகங்கள் சாதகமாக இருப்பதால் மாதம் தோரும் செய்யாத நன்மைகளை இந்த கடைசி வாரம் செய்து விடும்.வெளியூர்,வெளிநாடு பிரயாணம் உண்டு,குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.மகான்களுக்கு,சாதுக் களுக்கு அன்னதானம் செய்யவும்.இந்த மாதம் 100%க்கு 72% உங்களுக்கு நன்மையே நடக்ககூடிய மாதம்.

தனுசு:

9 தனுசு ராசி நேயர்களே 01-05-16 முதல் 31-05-16 வரை இந்த மாதம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.இந்த மாதம் 11ம் தேதி 12ம் தேதி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கரணம் சந்திராஷ்டமம்.சொந்த தொழில் சுய தொழில் இந்த முதல் வாரத்தில் துடங்கலாம்.இரண்டாவது வாரம் சிறப்பாக இருக்கும் குறிப்பாக கடைசி நான்கு நாட்கள் மிகவும் சிறப்பாக  இருக்கும்.மூன்றாவது வாரம் ரொம்ப அமோகமாக இருக்கும்.வீடு,வாகனம் சொந்த தொழில் சுய தொழில் நன்றாக இருக்கும்.ஒரு சிலர் பக்தியில் சிறந்து விளங்குவார்கள்.ஒரு சிலர் மனத் தடுமாற்றத்தோடு இருப்பார்கள்.ஒரு சிலருக்கு இந்த மாதக் கடைசியில் மிகவும் நன்மைகள் நடக்க வாய்ப்பு உள்ளது.வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதத்தில் 100%க்கு 99% நல்ல நிறைவான ஒரு மாதம்னு சொல்லலாம்.

மகரம்:

10 மகர ராசி அன்பர்களே இந்த மாதம் 01-05-16 முதல் 31-05-16 வரை உள்ள பழங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.குருவுடைய தாக்கமாக இருக்கட்டும்,சனியுடைய தாக்கமாக இருக்கட்டும் ராகு கேதுவுடைய தாகமாக இருக்கட்டும் கொஞ்சம் குறைந்து தான் இருக்கிறது.அஷ்டமத்தில் இருக்கும் ராகு குரு கெடுதல் செய்யாது.மே மாதம் பொருத்தவரை நன்மைகளே கிடைக்கக் கூடிய மாதமிது.சுபிக்ஷமான காலமிதுன்னு சொல்லலாம்.முதல் வாரத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தால் கூட 13ம் தேதி 14,15 பிற்பகல் வரை கவனம் தேவை.காரணம் சந்திராஷ்டமம்.மனத் தடுமாற்றங்கள் இருந்தாலும் கூட சுபிக்ஷமான நேரம் என்றே சொல்லலாம்.எதிர்பாராத நன்மைகள் வாய்ப்புகள் தனசெர்க்கை எல்லாமே கிடைக்கும்.மூன்றாவது,நான்காவது வாரத்தில் எல்லாமே உயர்வாக இருக்கும் காரணம் ஒன்பது கிரஹங்களில் ஏழு கிரகங்கள் நன்றாக இருக்கிறது.பெண்களுக்கு வயிறு உபாதைகள் இருக்கும்.மகர ராசியின் சுவாமி சனி.ஒரு சில பெண்களுக்கு தலைவலி வந்து கொண்டே இருக்கும்.காரணம் சனி.இந்த மாதத்தில் 100%க்கு 80% நன்மையே நடக்கக் கூடிய மாதம் இது.பெண்களுக்கு விவாகம் கூடிவரும், அருகாமையில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டுவரவும்.

கும்பம்:

11 கும்பா ராசி நேயர்களே இந்த மாதம் 01-05-16 முதல் 31-05-16 வரை என்ன பலன்கள் பார்ப்போம்.முதல் வாரத்தில் குழப்பங்கள் இருந்தாலும்,இரண்டாவது வாரத்தில் தடுமாற்றங்கள் மறைந்துவிடும்.இந்த மாதத்தில் 16ம் தேதியும் 17,18ம் தேதி பகல் பொழுது முடிய சந்திராஷ்டமம்.எதிலும் கவனமாக இருக்கவேண்டும்.வம்பு வழக்குகள் தேடி வரும்.பக்தி,பிரார்த்தனை இவைகள் வேண்டும்.கும்ப ராசியில் ஒரு சிலர் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.மூன்றாவது வாரம் சிறப்பாக இருக்கும் அதைவிட நான்காவது வாரம் மிகச் சொரப்பாக இருக்கும் கவலை வேண்டாம்.எதிர்பாராத நன்மைகள் தனசேர்க்கை எல்லாமே இந்த நாலாவது வாரத்தில் வந்து சேரும்.100%க்கு 86% நன்மையே நடக்கும்.மகான்களின் தரிசனம் கிடைக்கும்.புண்ணியதீர்த்தம் ஆடவேண்டும்.இந்த மாதம் நன்மையே தரும் மாதம்.

மீனம்:

index மீன ராசி அன்பர்களே 01-05-16 முதல் 31-05-16 வரை உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.இந்த மாதத்தில் 18ம் தேதி,19ம் தேதி,20ம் தேதி பகல் வரையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.காரணம் சந்திராஷ்டமம்.இறைவனிடம் பிரார்த்தனை செய்து வர வேண்டும்.முதல் வாரத்தில் சுபிக்ஷமாக இருக்கும்.சொந்தத் தொழில் சுய தொழில் செய்பவர்கள் நன்மை அடைவார்கள்.வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் தொல்லைகள் வரலாம்.மீன ராசி பொருத்தவரை ஒரு சிலருக்கு காது கேட்காது.சிலருக்கு மூச்சுத் தொல்லைகள் வரும்.மே மாதத்தைப் பொறுத்த வரை உங்களுக்கு நன்மையே நடக்கும்.100%க்கு 93% நன்மையே நடக்கும் மாதமிது.

ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்

9324087044 , 9320417957

The post மே மாத ராசி பலனை வழங்குபவர் ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் appeared first on Swasthiktv.

தீப ஜோதியாக அருள்பாலிக்கும் பரணி தீப தரிசனத்தின் சிறப்பு

$
0
0

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான ஜோதியே எல்லாவற்றுக்கும் மூலமாகும்.தீப ஜோதியாக அருள்பாலிக்கும் பரஞ்சோதியை தரிசிப்பதே பரணி தீப தரிசனமாகும். ஏகன் அனேகனாக அருள்புரிகிறார் எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது.deepammmnm

கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவுநாளன்று, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் நடைபெறும் விழா என்பதால் பரணி தீபம் என அழைக்கப்படுகிறது. அதிகாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் கோயில் கருவறையில் கற்பூர தீபமேற்றி, உலக இயக்கத்தை நடப்பிப்பதும், உயிர்களை காப்பதும் இந்த ஜோதிதான் என சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்குவார்கள். பின்னர், அந்த சுடரை கொண்டு மண் மடக்கில் உள்ள நெய்தீபம் ஏற்றப்படும்.பின்னர், ஓரு தீபம் ஏற்றப்பட்ட மடக்கில் இருந்து, ஏகனாக திகழும் இறைவன் அனேகனாக திகழ்வதை உணர்த்துவதற்காக நந்தி தேவர் முன்பு ஐந்து மடக்குகளில் நெய் தீபம் ஏற்றப்படும். இது பஞ்ச மூர்த்திகளை குறிக்கும்.

முதலில் ஏற்றப்பட்ட நெய் தீபத்தை கொண்டு , அம்மன் சன்னதியில் ஐந்து மடக்குகளில் நெய் விளக்கு ஏற்றப்படும். அது பஞ்ச சக்திகளை உணர்த்தும். அதை தொடர்ந்து, சிவ சக்தியில் இருந்துதான் எல்லா இயக்கமும் நடைபெறுகிறது என்பதை உணர்த்தும் வகையில், எல்லா சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்படும்.

deepam_113265f

திருக்கோயிலில் சிவாச்சாரியார்கள் 108 நாட்கள் விரதமிருந்து பரணி தீபத்தை ஏற்றுவது காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. மடக்கில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை, கருவறையையொட்டி அமைந்துள்ள வைகுந்த வாயிலில் நின்றபடி சுயம்பு வடிவான அண்ணாமலையை நோக்கி சிவாச்சாரியார்கள் காண்பிக்கும் போது அண்ணாமலையாருக்கு அரோகரா எனும் சப்தம் விண்ணதிரும்.

கார்த்திகை மாதப் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் லட்சோப லட்சம் பக்தர்கள் திரண்டு பரணி தீபத்தை தரிசனம் செய்வது தனிச்சிறப்பு. பரணி தீப தரிசனத்தன்று அண்ணாமலையார் திருக்கோயிலில் இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்.

செய்தி : ப.பரசுராமன்
படங்கள்: ப.வசந்த்

The post தீப ஜோதியாக அருள்பாலிக்கும் பரணி தீப தரிசனத்தின் சிறப்பு appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 04/05/2016

$
0
0

           உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் இன்று நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு தொகுப்பு என்னவென்றால் சுக்ரனின் தாந்திரிக பரிகாரம்.சுக்ரன் ஒரு ஜாதகத்திலே பழுதுபட்டால் அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கை கெட்டுப் போகும்.சுக்ரன் கெட்டு விட்டால் திருமண அமைப்பு அவர்களுக்கு பறிபோகும்.சுக்ரன் கெட்டுவிட்டால் அவர்களுக்கு வாகனம் அமையாது.சுக்ரன் கெட்டுவிட்டால் அவர்களுக்கு கட்டிடம் அமையாது.சுக்ரன் கெட்டுவிட்டால் மாமியாரால் தொல்லை வரும்.சுக்ரன் கெட்டுவிட்டால் கருப்பைத் தொல்லை வரும்.சுக்ரன் கெட்டுவிட்டால் சிறுநீரகத் தொல்லை வரும்.சுக்ரன் கெட்டுவிட்டால் அவர்களுக்கு சர்க்கரை வியாதி வரும்.

kumar பழுதுபட்டால் அவர்களது வாழ்கையிலே அர்த்தமில்லாமல் ஆகிவிடும்.அப்படிப்பட்டவர்கள் சுக்ரன் அவருடைய கால தத்துவம் என்னவென்றால் கட்டிடக்காரன்,பாதகக்காரன்,கலத்திரக்காரன் என்று அழைக்கிறார்கள்.அப்படிப்பட்ட சுக்ரனை வசப்படுத்த வசியப்படுத்த தாந்திரிக பரிகாரங்கள் பலமான வழியிலே நமக்கு உதவி செய்கிறது.அவை யாவை என்று பார்க்கும் பொழுது,சுக்கிரனை வசியம் செய்ய கரு ஊமத்தம் செடியை அதன் வேரை எடுத்து சுத்தப்படுத்தி சாப நிவர்த்தி செய்து அதை வைத்து பூஜை செய்யலாம் அல்லது நாம் தாயத்தாக அணிந்து வரலாம்.சுக்ரனை வசியம் செய்கின்ற வென்மொச்சையை அவருடைய அகத்த பாகமான கிழக்கிலே வைத்து அந்த தாம்பாளத்தட்டில் பரப்பி நெய் தீபம் ஏற்றி வெள்ளிக்கிழமையில் 6 மணி முதல் 7 மணி வரை சுக்ர ஓரை ஓடிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் நாம் வணக்கம் செய்து நாம் பூஜை செய்தால் சுக்ரன் வசியம் ஆவார்.மேலும் பெண் தெய்வங்களை நாம் வணங்கி வர சுக்ர தசை அந்த 20 ஆண்டு காலத்தில் எந்த வித பிரச்சனைகளும் இன்றி நம்முடைய விருட்சம் எதை என்று தெரிந்து அந்த விருச்சத்திற்கு  தினசரி தண்ணீர் ஊற்றி வந்தால் மிகப்பெரிய ஒரு நன்மையை இந்த சுக்ர தசை காலகட்டத்தில் மேலும் நம்முடைய ஜன்ம நட்சத்திரத்தன்று லக்ஷ்மி ஆலயங்களுக்குச் சென்று நாம் நம் மீது அர்ச்சனைகள் செய்து கொண்டால் அருமையான சுக்ர வசியம் அங்கே ஏற்படும்.மேலும் மனைவியுடைய வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் மாமியார்க்கும் நல்ல முறையில் மதித்து அவர்களுக்கு வஸ்த்ர தானம் செய்து வந்தால் சுக்ரன் மிக அழகான நிலையிலே நமக்கு பயன் கொடுக்க ஆரம்பித்து விடுவார்.

    வெள்ளியன்று இரவிலே ஒரு மினி மினுப்பாக இருக்கின்ற ஒரு வெள்ளைத் துணியிலே அந்த வேன்மொச்சையை நிரப்பி ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக தலையணையின் கீழே வைத்து வணங்கி அதை ஓடுகின்ற நீரிலே கலந்து விட அருமையான ஒரு நல்ல பயன் இந்த சுக்ர தசையிலே நமக்கு தெரியும்.சுக்ரனின் அம்சமாக இருக்கின்ற அழகான அந்த சிறுமிகளுக்கு நாம் உதவிகளை செய்து வந்தால் அல்லது அவர்களுக்கு கல்வியிலே நாம் பல விதமான உதவிகளை செய்து வந்தால் அல்லது கன்னியர்களுக்கு,சுமங்கலிகளுக்கு தாலி தானம் செய்து வந்தால் சுக்ரன் எளிதில் நம்மிடம் வசியமாகி நமக்கு நற்பலன்களைக் கொடுக்க ஆரம்பித்து விடுவார்.ஒரு மனிதனுக்கு அவனுடைய ஜனன ஜாதகத்தை எடுத்து விசாரிக்கும் பொழுது 20 வருட காலம் சுக்ர தசை நடப்பிலே இருக்கும் பொழுது அது சாதகமாக இருந்தால் அவனுக்கு வேண்டிய பொருள் அனைத்தும் கிடைத்து வருகிறது.பாதகமாக இருந்தால் எப்பொழுது முடியும் இந்த தசை என்று கேட்பதைக் காட்டிலும் இந்த தாந்திரிகப் பரிகாரங்களை ஏதாவது ஒன்றையோ அல்லது பலவற்றையோ அதாவது சம்பரானியிலே லவங்கப் பட்டையைப் தூளாக்கிப் போட்டு நம் வீடு முழுவதும் அந்த தூபத்தை காட்டி வரும் போது சுக்ரனின் வசியம் ஏற்பட்டு மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் ஏற்பட்டு அந்த வீட்டிலே நல்லதொரு செல்வநிலை ஏற்படுகிறது என்றால் மகாலட்சுமிக்கு கட்டுப்பட்டவனாகத் தான் அந்த சுக்ரன் இருக்கிறான் என்பதை நம் ஜோதிட சாஸ்திரம் கூறிய ஒரு பெரிய ரகசியமாகும்.

      வெள்ளிக்கிழமையிலே காலை வேளையிலே 6 மணியிலிருந்து 7 மணி வரை ஓடிக்கொண்டிருக்கும் அந்த சுக்ர உறியிலே தாம்பாளத் தட்டில் வேன்மொச்சையை பரப்பி ஒன்பது வெற்றிலை ஒன்பது கொட்டைப் பாக்கு ஒன்பது ஒரு ருபாய் நாணயங்களை வைத்து நாம் பூஜை செய்து வரும்போது மகாலக்ஷ்மியுடைய கடாக்ஷம் நமக்கு கிடைக்கிறது என்றால் மிகையல்ல என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் சனி அவருக்குரிய தாந்திரிகப் பரிகாரங்கள் என்ன அவரால் ஏற்படுகின்ற அந்த மோசமான நிலைகளை இந்த தாந்திரிக பரிகாரம் செய்து கட்டுப் படுத்துவது எப்படி என்பதையெல்லாம் நாம் அறிய இருக்கிறோம் என்று சொல்லி இந்தப் பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி வணக்கம்.

ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்

9962081424

The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 04/05/2016 appeared first on Swasthiktv.

பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும் அதன் பயன்களும்:

$
0
0

பிரதோஷம் என்பது சிவனுக்குரிய நாட்களில் மிகவும் முக்கியமான நாளாகும்.இந்தப் பிரதோஷமானது மாதம் இருமுறை அதாவது வளர்பிறையில் ஒரு முறையும்,தேய் பிறையில் ஒருமுறையும் வரும்.அப்படி வரும் 15 நாட்களில் பதிமூன்றாவது நாளான த்ரயோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை இருக்கும் நேரத்தை பிரதோஷ காலம் என்று கூறுவர். பிரதோஷ விரதம் சிவனுக்கு உரிய பலவித விரதங்களில் தலையாயது. இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களிலிருந்து நீக்கி இன்பத்தை எய்துவார்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை:Siva Lingam

வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களில் வரும் திரயோதசி திதி அன்று அதிகாலையிலும் எழுந்து நீராடி,நித்ய கடன்களை முடிக்க வேண்டும்.சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும்.திருமுறைகள் ஒத வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவாலயம் சென்று (சிவாயநம)ஓதி வழிபட வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சிவனுடன் கூடவே அவரது வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும்.இவருக்கும் பால்,தயிர்,சந்தனம்,எண்ணெய்,நெய்,இளநீர்,போன்றவற்றால் அபிஷேகங்கள் நடைபெறும்.பின் பூ,வில்வம் முதலியவற்றால் அர்ச்சனைகள் நடக்கும்.

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:-

1. பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் – பல வளமும் உண்டாகும்

3. தேன் – இனிய சாரீரம் கிட்டும்

4. பழங்கள் – விளைச்சல் பெருகும்

5. பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்

6. நெய் – முக்தி பேறு கிட்டும்

7. இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்

8. சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்

9. எண்ணெய் – சுகவாழ்வு

10. சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்

11. மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்

முதலில் நந்தி தேவருக்கு தீபாராதனை காட்டப்படும். பின்பு தான் மூலவரான லிங்கத்திற்கு பூஜை நடக்கும். அப்படி நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். நமக்கு நன்மைகளே நடக்கும் என்பது நம்பிக்கை.

நந்தி ஸ்லோகம்:

நந்திகேச மஹா பாகா சிவ த்யான பராயணா

உமா சங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் தாது மர்ஹசி

 நந்தியின் சிறப்பு:

பிரதோஷ காலத்தில் sivaசிவனுடன் கூடவே அவரது வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கும்  பால்,தயிர்,சந்தனம், எண்ணெய், நெய், இளநீர், போன்றவற்றால் அபிஷேகங்கள் நடைபெறும்.பின் பூ,வில்வம் முதலியவற்றால் அர்ச்சனைகள் நடக்கும். முதலில் நந்தி தேவருக்கு தீபாராதனை காட்டப்படும். பின்பு தான் மூலவரான லிங்கத்திற்கு பூஜை நடக்கும்.அப்படி நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.நமக்கு நன்மைகளே நடக்கும் என்பது நம்பிக்கை.

நந்தி அபிஷேகத்தின் போது சொல்லும் ஸ்லோகம்:

நந்திகேச மஹா பாகா சிவ த்யான பராயணா

உமா சங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் தாது மர்ஹசி

பொருள்:

சிவத்யானத்தில் சதா ஈடுபட்டுள்ள நந்தி பகவானே! நான் சிவ பார்வதி சேவை செய்ய அனுமதி அளிப்பாயாக!!

இவ்வாறு இந்த நந்தி ஸ்லோகத்தை சொல்லி வழி பட்டால் சிவனின் அருள் நமக்கு பிரதோஷகாலத்தில் கிடைக்கும்.

 

குறிப்பு:  இப்படியாக இந்த பிரதோஷத்தன்று விரதங்களை அனுஷ்டித்து பின்பு அன்றிரவு பால் பழம் போன்ற ஆகாரத்துடன் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

 

 

 

 

The post பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும் அதன் பயன்களும்: appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 05/05/2016

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு மாபெரும் அமாவாசை யாகம்.

$
0
0

 வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி மற்றும் ப்ரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று நலமுடன் வாழ சிறப்பு அபிஷேகத்துடன் மாபெரும் அமாவாசை யாகம் 06.05.2016 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது..மிக உக்ரம் படைத்த ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவியை அதர்வண காளி ,சிங்கமுக காளி என்றும் அழைப்பார்கள். இந்த தேவியை சாந்தப்படுத்த விஷேசமான நாளான அமாவாசையில் இவளுக்கு பிடித்தமான சிவப்பு மிளகாய், உப்பு, மிளகு மேலும் 108 வகை ஹோமதிரவியங்கள்,குண்டத்தில் இடப்பட்டு மேலும் பட்டு புடவை, பழவகைகள், வேப்பிலை,நெய்,நெய்யில் செய்த  இனிப்பு பட்சணங்களையும் யாக குண்டத்தில் சேர்க்கப்பட உள்ளது.இந்த யாகம் சிறந்த வேதவிற்பனர்களை கொண்டு நடைபெறுகிறது.

    ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவியை வழிபடுவதால் பில்லி,சூனியம்,ஏவல்,துர் தேவதைகள் மற்றும் துஷ்டர்களையும் அழித்து தன் பக்தர்களை காப்பாற்றி,நல்ல பலவிதமான செல்வங்களையும்,மக்கட் செல்வத்தையும், மன நிம்மதியும், குடும்ப ஒற்றுமையும், ஆரோக்கத்தையும் கொடுப்பாள் மேலும் பல விதமான நன்மைகளையும் அருள்பாலிப்பாள்.என்பது நிச்சயம். இந்த ப்ரத்யேகமான யாகத்தை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னின்று நடத்துகிறார்.இதில் பக்த கோடிகள் அனைவரும் இந்த யாகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவி மற்றும் சகல விதமான தெய்வங்களின் அருளையும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் நல்லாசிகளையும் பெற்று நலமுடன் வாழ விழைகிறோம். சனிபகவானின் மகன் குளிகன் இங்கு வழிபாடு செய்துள்ளதால் ஜாதகரீதியாக சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்குபெறலாம்.

மேலும் விவரங்களுக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,கீழ்புதுப்பேட்டை,

அனந்தலை மதுரா,

வாலாஜாபேட்டை.632513

The post ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு மாபெரும் அமாவாசை யாகம். appeared first on Swasthiktv.

தொலைந்த பொருளையும் தொலைந்தவர்களையும் மீட்டுத்தரும் திருவழுந்தூர் பெருமான்

$
0
0

திருவழுந்தூர் என்னும் இந்த புண்ணிய ஸ்தலம், மாயவரம் குத்தாலம் கோமல் செல்லும் வழியில் 21 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்திற்கு அழுந்தூர், கிருஷ்ணாரண்யம் என மற்ற பெயர்களும் உண்டு.பொதுவாக அனைத்து கோயிலிலும் இரண்டு கைகளுடன் காட்சி அளிக்கும் கிருஷ்ண பெருமான் இந்தக் கோயிலில் மட்டும் ருக்மணி,பாமாவுடன் பசுக்கன்றோடு, நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார்.

இக்கோயில் காவிரிக் கரையின் ஓரத்தில் மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்துடன், தேவாதிராஜன் என்கிற மூலவருடன், உற்சவர் ஆமருவியப்பன், தாயார் செங்கமவல்லி, போன்ற கடவுள்களைக் கொண்டுள்ளது. இந்த தீர்த்தம் தரிசன புஷ்கரணி. இதன் விமானம் கருட விமானம். பஞ்ச கிருஷ்ண க்ஷேக்த4hands123ரத்தில் இதுவும் ஒன்று. இத்தலத்தின் கீழ் தான் அகத்திய முனிவர் அமர்ந்து தவம் புரிந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஊர்ந்து வரதன் என்னும் அரசன் வான்வெளியில் தேரைச் செலுத்தினான்.தன் தவத்தின் பலத்தால் அகத்தியர் தேரை மேலே செல்லாமல்
அழுத்தினார். வானிலிருந்த தேர் அகத்தியர் அழுத்தியதால் கீழே விழுந்து மண்ணில் அழுந்தியது. ஆகவே, இந்த ஸ்தலம் தேரழுந்தூர் என்ற பெயர் பெற்றது.ஒரு முறை கண்ணபிரான் ஆசையோடு பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான்.அப்பொழுது நான்முகனான பிரம்மன் அந்தப் பசுக்களை அவனுக்குத் தெரியாமல் இங்கே ஒலித்துவிட்டான்.இதை அறிந்த கண்ணன் கோபம் கொண்டு தன் சக்தியால் நிறையப் பசுக்களை படைத்து விட்டான். பிரம்ம தேவனோ வியப்புற்று,கதிகலங்கி கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டான். அது மட்டும் அல்லாது கிருஷ்ணனே இங்கு நிரந்தரமாக ஆட்கொள்ளவேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.பகவான் கிருஷ்ணன் ஆமருவியப்பன் என்ற பெயரைக் கொண்டு இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். மேலும் இந்த ஸ்தலத்தை திருமங்கையாழ்வார் மற்றும் மணவாள மாமுனிவர் போற்றி பாடியுள்ளார்.

பரிகாரம்:

தொலைந்து போன பொருட்கள் மீண்டும் கிடைக்க, காணாமல் 4 hands3போன ஒருவர் வீட்டிற்கு திரும்ப,மற்றவர்களால் நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள்,துன்பங்கள் தீர இங்கு வந்து இத தேவாதிராஜப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டால் உங்கள் துன்பங்கள் மற்றும் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷமாக வாழ முடியும்.

இருப்பிடம்:

 இந்த ஸ்தலம் மாயவரம் குத்தாலம் கோமல் செல்லும் வழியில் சுமார் 21கி.மீ. தூரத்தில் திருவழுந்தூர் எனும் ஊரில் உள்ளது.பஸ் வசதியும்,ரயில் வசதியும் உண்டு.

தரிசன நேரம்:

காலை 6 மணி முதல் நண்பகல் 12 வரை

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

The post தொலைந்த பொருளையும் தொலைந்தவர்களையும் மீட்டுத்தரும் திருவழுந்தூர் பெருமான் appeared first on Swasthiktv.


கல்வி,கேள்வி மற்றும் பொருட்செல்வம் பெருக –ஸ்ரவண சுண்டல்

$
0
0

ஸ்ரவண விரதம் என்பது மாதத்தில் வரும் திருவோண நக்ஷத்திரத் தன்று பெருமாளுக்கு மேற்கொள்ளும் ஒரு விரதம்.இந்த விரதம் இருப்பதால் கல்விச் செல்வம், கேள்விச் செல்வம் மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் பெருகும். இப்படிப் பட்ட அந்த திருவோண ஸ்ரவண விரதத்தன்று நாம் இறைவனுக்கு நெய்வேதனம் செய்வது வழக்கம்.இந்த சுண்டல் பிரசாதமாக பெருமாளுக்கு படைத்தால் நன்மைகள் நடக்கும்.இப்பொழுது அந்த சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 தேவையான பொருட்கள்:

வேகவைத்த கடலைப் பருப்பு – 200 கிராம்

வெல்லம் – 100 கிராம்

ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை

நெய் – 1 ஸ்பூன்.

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வேகவைத்த கடலைப் பருப்பு,வெல்லம் சேர்த்து கிளறவும். பின்பு ஏலக்காய்ப் பொடியை போட்டு கிளறி கெட்டியாக சுண்டல் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்த சுண்டலை செய்து திருவோணமாகிய பெருமாள் நக்ஷத்திரத்தன்று இறைவனுக்கு படைத்துப் பலன் பெறலாமே!

The post கல்வி,கேள்வி மற்றும் பொருட்செல்வம் பெருக – ஸ்ரவண சுண்டல் appeared first on Swasthiktv.

சிவராத்திரி உருவானது எப்படி?

$
0
0

     சிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள். மாதம் தோறும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மாத சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

 ஐவகை சிவராத்திரிகள்:

சிவராத்திரி எனப்படுவது

     நித்திய சிவராத்திரி,

     பட்ச சிவராத்திரி,

     மாத சிவராத்திரி,

     யோக சிவராத்திரி,

     மஹா சிவராத்திரி

என ஐந்து வகைப்படும்.

சிவராத்திரி உருவானக் கதை:

      ஒரு நாள் பிரம்மாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. என்னவென்றால் தானே இவ்வுலகைப் படைப்பதாகவும்,தன்னைக் காட்டிலும் இவ்வுலகில் உயர்ந்தவன் இல்லை என்றும் தோன்றியது.உடனே,தனது தந்தையான விஷ்ணுவிடம் சென்று உன்னை விட நானே உயர்ந்தவன் என்றார். அதைக் கேட்ட விஷ்ணுவிற்கு கோபம் வந்தது. நீ படைப்பவனாயினும் ,இவ்வுலகை காப்பவன் நான் தான். எனவே நான் தான் உன்னைவிட பெரியவன் என்றார். இவர்களின் வாக்குவாதம் முற்றி பெரும் சண்டையாக மாறியது. அப்பொழுது அவர்களிsivannன் அருகே ஒரு பெரிய பேரொளி தோன்றி ” இந்த ஒளியின் அடியையும், முடியையும் யார் காண்கிறீர்களோ அவரே உயர்ந்தவர் ” என்ற குரல் கேட்டது. உடனே பிரம்மா அன்னப் பறவையாக மாறி வானில் பறந்தார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்தார். இருந்தபோதும் ஈசனின் அடியையும்,முடியையும் அவர்களால் காண முடியவில்லை.ஆனால் பிரம்ம தேவனோ தான் அந்த ஒளியின் திருமுடியைக் கண்டதாகவும், தாழம்பூவே அதற்கு சாட்சி என்றும் கூறினார்.

       பேரொளி வெடித்ததில் ஈசன் மிகுந்த கோபத்துடன் அதிலிருந்து வெளிப்பட்டார். அவர் பிரம்மனை நோக்கி பிரம்மனே! பொய் கூறிய உனக்கு இனி இந்த உலகில் கோவில்களும் பூஜைகளும், வழிபாடுகளும், இருக்காது என்று சாபம் இட்டார். அதுமட்டும் அல்லாது பொய் சாட்சி கூறிய தாழம்பூவிடம் இனி உன்னை என் பக்தர்கள் யாரும் பூஜைக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்றார்.சாபம் இட்டும் சினம் குறையாத ஈசன் அக்னிப் பிழம்பாகத் தகிக்க அதைக் கண்டு மிரண்டு போன பிரம்மனும், விஷ்ணுவும், தங்களை மன்னித்து அருளுமாறு வேண்டினர். அப்பொழுது ஈசனின் சினம் குறைய முனிவர்கள் வேதம் ஓதினார்கள். தேவர்கள் சிவனைப் பாடித் துதித்தனர். ஈசன் சினம் குறைந்து மனம் குளிர்ந்தார். அப்படிக் குளிர்ந்த ஈசன் அண்ணாமலையாய் அருணாசல லிங்கமாய் அமர்ந்தார். ஈசன் இப்படி ஜோதிப் பிழம்பாய்த் தோன்றி பிரம்மா மற்றும் விஷ்ணுவின் ஆணவம் அகற்றி இவ்வுலகை மாபெரும் அழிவிலிருந்து காத்தருளிய அந்த இரவு தான் மஹா சிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரியின் விரதம்:

      சிவராத்திரி நாளன்று சிவன் கோயிலுக்கு நாம் வில்வ இலைகள் எடுத்துச் செல்ல வேண்டும். அன்று இரவு நடைபெறும் கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருந்து சிவாய நம என உச்சரிக்க வேண்டும். சிவராத்திரி தினத்தன்று எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பது நல்லதாகும். முதல் கட்ட பூஜைக்கு பால், இரண்டாம் கட்ட பூஜைக்கு தயிர், மூன்றாம் கட்ட பூஜைக்கு வெண்ணெய், நான்காம் கட்ட பூஜைக்கு தேன் ஆகியவற்றை கோயிலில் அபிஷேகத்திற்க்காக காணிக்கை செலுத்தலாம். சிவராத்திரியன்று கண் விழித்து சிவபுராணம் படிக்கலாம். சிவனின் பாடல்களைப் பாடலாம் அல்லது ஓம் நமசிவாய எனும் சிவநாமத்தை ஜபித்துக் கொண்டிருக்கலாம். மறுநாள் காலையில் சிவாலயத்தில் அன்னதானம் செய்து அதற்குப் பின் விரதத்தை முடிப்பது விசேஷமாகும்.

The post சிவராத்திரி உருவானது எப்படி? appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 06/05/2016

ஜமுனாமரத்தூர்க்கு வருபவர்களை வாவென்று அழைக்கும் இரட்டை சிவாலயம்

$
0
0

     திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து 4 கி.மீ. மேற்கே, ஜமுனாமரத்தூர் ஜவ்வாது மலைக்கு செல்லும் சாலையில் மாம்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இவ்வூருக்கு வருபவர்களை வாவென்று அழைப்பதைப் போன்று, அண்ணாமலையார் மற்றும் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் என இரட்டை சிவாலயம் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது.

ஆலய தரிசனம் ஆயிரம் புண்ணியம் என்பார்கள். அதேபோல் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆம், இராஜகோபுர திருப்பணியை எதிர்நோக்கி இருக்கும். இத்திருத்தலம் சுமார் 2.85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் ஆகம முறைப்படி 25 செண்ட் பரப்பளவில் தெற்கு நோக்கிய நுழைவு வாயிலுடன் எழுநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த அருள்மிகு. பெரியநாயகி ஊடனுறை ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.DSC_0742

நுழைவு வாயிலின் எதிரே 22 அடி உயரத்தில் துவஜஸ்தம்பாக: கார்த்திகை தீபக்கற்தூண் காட்சி தருகின்றது. இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களும் திருக்கோயிலின் துவஜஸ்தம்பாக நினைத்து தரிசித்து வணங்குகின்றனர். வடக்கு நோக்கியவாறு அமைந்துள்ள நுழைவு வாயிலின் வழியே உள்ளே சென்றால் இரட்டை சிவப்பதிகளை தனது கருவறைகளாக அமைத்துக் கொண்டு காட்சி தரும் சிவபெருமானை தரிசித்து மகிழலாம்.

ஈசன் எம்பெருமானை தரிசிக்க வருகை தரும் அன்பர்கள் ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் கண்ணில் படும் முதல் சிவப்பதியை அடுத்து, இலயத்தின் மையத்தில் அமைந்துள்ள தொன்மையும் புராதனமும் மிக்க ஆலய மூலவ முதல்வர் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் என்று திருநாமத்தில் சர்வேசன் சுயம்பு லிங்க சொரூபராய் சிவப்பதி கொண்டு காட்சி தருவதை காணலாம்.

     இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் மூலவரின் திருநாமங்கள் ஸ்ரீதான்தோன்றீஸ்வரமுடைய நாயனார், ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் என்றும் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் என்றும் கூறப்பட்டுள்ளன. அவ்வாறே மக்களும் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் என்ற திருநாமத்திலேயே ஈசனை இன்று வணங்கி வருகின்றனர்.

      இச்சிவப்பதி ஆகம முறைப்படி கோஷ்ட தெய்வங்கள் சூழ மூலவர் கருவறையும், உமையாளை இடபாகம் வைத்த ஈசன் இங்கும் அம்பாள் அருள்மிகு.பெரியநாயகிக்கு, தனது ஆலய இடதுபுறம் தனிச்சந்நிதி கொடுத்து அம்மையப்பராய் காட்சி தந்தருள்கின்றனர்.

   அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு மூர்த்தகம்,தலம்,தீர்த்தம் மூன்றும் அமைத்து பூலோகத்தில் ஒம்பூதத் தலங்கள், பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள், தன் அடியார்களால் போற்றிப் பாடப்பட்ட திருமுறைத் தலங்கள் என பாரதத்தில் ஆங்காங்கே ஆலயங்கள் அமைந்துள்ளன. மேலும் காரண காரியமாகவும் பூலோகத்தில் சுயம்பு மூர்த்தமாய் (அருவுருவமாய்) எழுந்தருளி ஆலயங்கள் கொண்டும் ஈசன் அருள்பாலிக்கிறார்.

அந்த வகையில் சிவபெருமானின் அபயம், வரதம், அருளும் அஸ்தங்களில் உள்ள மான், மழு, ஊடுக்கை, சூலம், அங்க அணிகலன்களாக உள்ள பிறை,நாகம்,ருத்ராட்சம்,சலங்கை ஆகிய முத்திரைகளின் பெயர்களில் ஈசன் இடப்பிறையூர் (ஏடப்பிறை), திரிசூலபுரம் (திரிசூரி), மழுவம்பாடி (மாம்பட்டு) என ஏர் பெயர்களுடன், இப்பகுதி கிராமங்களில் சிவாலயங்கள் அமைந்துள்ளதை காணலாம். இதில் மழுவம்பாடி, எழுவாம்பாடி என்றழைக்கப்படும் மாம்பட்டு என்னும் கிராமத்தில் தொன்மையான காலத்தில் சிறுபாறைக் கல்லின் மேல் சிவபெருமான் சுயம்புவாய் (அருவுருவமாய்) தோன்றி மக்களுக்கு காட்சித் தந்தருளினார். மக்களும் இறைவனுக்கு சிறு ஆலயம் அமைத்து பூஜித்து வழிபட்டு வந்தனர். மலைகள், இரண்யங்கள் (காடுகள்) சூழ்ந்த இம்மண்ணிய பூமி ஈசன் சுயம்புDSC_0738வாய் தோன்றியதால் புண்ணிய பூமியானது. இப்புண்ணிய பூமியில் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் ஏழுந்தருளி வரும் சிவத்தலம் ஏப்படி? சைவம் வளர்த்த சான்றோர்களான நந்தி அருள் பெற்ற நாதர்கள், தொகையடியார்கள், பதிணெண் சித்தர், 63 நாயன்மார்களின் பன்னிரு திருமுறை தந்த இருபத்தி எழுவர், இதில் சமயக்குரவர் நால்வர், சந்தானக்குரவர் நால்வர் உள்ளிட்ட சமய சான்றோர்களின் கண்களில் படாமல் போனது என்று தெரியவில்லை. இருப்பினும், இத்திருத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். நமக்கு ஆலயம் கட்டித் தந்த காலம் 700 ஆண்டுகளுக்கு முன் என்பது மட்டும் கிடைக்கப் பெற்றுள்ள செய்தியாகும்.

    தமிழகத்தை ஆட்சி செய்த கரிகால சோழ மன்னன் வடக்கு பகுதியை 24 நான்கு கோட்டங்களை கொண்ட தொண்டை மண்டலமாக அமைத்து ஆட்சி செய்தார். பின்னர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த களப்பிரர், பல்லவர், சோழர், பாண்டிய மன்னர்கள் மற்றும் படவேடு இராஜ்ஜியம் அமைத்து ஆட்சி செய்த சம்புவராய மன்னர்கள் மற்றும் விரிஞ்சாபுரம், வேலூர் நகரம் ஆகியவற்றை கைப்பற்றி ஆட்சி செய்த விஜயநகர நாயக்க மன்னர்கள் பல்குன்றக் கோட்ட போளூர் பகுதியையும் ஆட்சி செய்து வந்தனர்.

     படவேடு இராஜ்ஜியம் அமைத்து ஆட்சி செய்த சம்புவராய மன்னர்களில் சகலோக சக்கரவர்த்தி வென்று மண்கொண்ட ஏகாம்பர சம்புவராய மன்னர் கி.பி.1321 முதல் கி.பி.1339 வரை ஆட்சி செய்தார். பாண்டிய பேரரசு கி.பி.1321-ல் வீழ்ச்சியுற்று சிதைந்தது. அதுவரை குறுநில மன்னர்களாக இருந்த சம்புவராயர்களின் ஆட்சி இவரது ஆட்சிக்காலத்தில் கி.பி.1323-ல் சுதந்திரமாக கோலோச்சத் தொடங்கினார். படவேடு இராஜ்ஜியம் எழுச்சிப் பெற்றது. இவரது ஆட்சிக் காலத்தில் இப்பகுதியில் மண்டகொளத்தூர், வட மாதிமங்கலம், சம்புவராயநல்லூர், ஐகாம்பர நல்லூர், அய்யம்பாளையம், மற்றும் மாம்பட்டு போன்ற கற்பாறையினை ஆவுடையராகக் கொண்டு அதன் மேல் அருவுருவ லிங்க பாண ரூபராய் எழுந்தருளி காட்சித் தந்து வரும் ஈசனை கண்டு தரிசித்தார். இப்பகுதி வாழ்மக்களின் வேண்டுகோளை ஏற்று கி.பி.1338-ல் சந்நிதிகள், கோஷ்ட தெய்வங்கள், பிரகார சந்நிதிகள் சூழ மதில் சுவருடன் கூடிய திருக்கோயிலை கட்டித் தந்தார்.

     வென்று மண்கொண்ட ஏகாம்பரநாத சம்புவராய மன்னர் மாம்பட்டு திருத்தல திருப்பணியை செய்த போது, ஈசன் சுயம்புவாய் தோன்றிய இடத்திலேயே ஆலய கருவறையும் அதே ஆவுடையார் கல்லை குடைந்து ; அதே சுயம்பு மூர்த்தத்தையே அதனுள் அமைத்து அஷ்டபந்தனம் சாத்தி, மகா கும்பாபிஷேகம் நடத்தினார். அன்று முதல் நிலமான்யம் நன்கொடைகளின் வருவாயைக் கொண்டும், திருவிழாக்கள் நடத்தியும் இறைவனை வணங்கி வந்துள்ளனர்.

தொடர்புக்கு : ஜெயவேல், : 09788697495
முருகன் : 8754423430
படமும் செய்தியும்
ப. பரசுராமன்

The post ஜமுனாமரத்தூர்க்கு வருபவர்களை வாவென்று அழைக்கும் இரட்டை சிவாலயம் appeared first on Swasthiktv.

அமானுஷ்யக் கனவுகளை போக்க நெட்டூரி பகவதி அம்மனை வேண்டுங்கள்

$
0
0

     நாம் கனவு காண்பதும்,கனவில் நல்ல கனவு,கெட்ட கனவு என்று வருவதும் இயல்பே.சிலருக்கு தெய்வம் கனவில் வரும்.சிலருக்கு அமானுஷ்யக் கனவுகள் வரும். பலருக்கும் அடிக்கடி பாம்பு கனவில் வரும்.கனவில் மட்டுமல்ல, நிஜத்திலும் பாம்பு என்றால் பயம் ஏற்படுவது இயல்பு. இப்படிப் பட்ட பாம்பு பயம் போக நாம் என்ன செய்யலாம்?

    கேரள மாநிலம் சிட்டிலன்சேரி என்னும் ஊரில் செரு நெட்டூரி பகவதி அம்மன் கோயில் உள்ளது.அங்கு சென்று அம்மனை வழிபட்டால்,பயங்கள் எல்லாம் பயந்தோடும், நாக தோஷங்கள் நிவர்த்தியாகி நன்மைகள் நடக்கும்.இந்த அம்மன் தங்கத்தில் செய்யப்பட்ட விக்ரஹமாக ஜொலிக்கின்றது. செரு நெட்டூரி பகவதிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் படிக்கட்டணம் வைத்து தரிசித்து வழிபடுவதும்,செம்பருத்தி மலர்களைக் கொண்டு பூஜிப் பதும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. விக்னேஸ்வரர், சிவபெருமான் மற்றும் நவகன்னிகைகளும் வீற்றிருந்து அருள்செய்கிறார்கள். ஆதிசேஷனைப் போல் காட்சியளிக்கும் ஐந்து தலை நாகம் இவ்வாலயத்தின் சிறப்பாகும். இந்நாகத்திற்கும் தினமும் வழிபாடு நடக்கின்றது. நாகத்தின் அடியில் நாகதேவதைகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பகவதி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்து தீவினைகளை தீர்த்துக் கொள்ளலாம். ஆலயத்தில் பெரும் பாலான பூனைகள் பகவதியின் அருகே சென்று வருகின்றன. அவைகளுக்கு தடையேதுமில்லை. கோயில் முழுவதும் மாலை நேரத்தில் தீபங்கள் ஏற்றி வைக்கப்படுகின்றன. அப்படி ஏற்றப்படும் தீபத்தின் ஒளியிலும்,கற்பூர ஆரத்தியின் ஒளியிலும் அம்மன் ஜொலித்துத் தோன்றும் காட்சி காணக் கிடைக்காதது.

அருளும் பிரசாதம்:

      பாயசம் தான் இங்கு தரும் பிரசாதம். முன்கூட்டியே பணம் கட்டுவோருக்கு மட்டுமே இந்தப் பாயசம் வழங்கப்படுகிறது.

வழிபாடுகள்:

    ஒவ்வொரு ஆண்டும் மகரமாதத்தில் (தை மாதம்) இந்தக் கோயிலில் ஆராட்டு உற்சவம் நடைபெறுகின்றது. இந்த உற்சவம் உத்திர நட்சத்திர நாள் அன்று கோடி ஏற்றத்துடன் தொடங்கும். உற்சவ காலத்தில் வேத மந்திரங்கள் ஓதப்படும் மற்றும் கலைநிகழ்சிகளும் நடத்தப்படுகின்றன. பலருக்கும் குல தெய்வமாக விளங்கும் இந்த பகவதியை ‘அம்மே பகவதி’ என்று அழைக்கும் பக்தர்களுக்கு வேண்டியதைத் தந்து அருளுவதாகக் கருத்து. இந்த பகவதி மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் பாம்பு போன்ற ஜந்துக்கள் பயத்தை நீக்கும் என்றும் பலரும் நம்புகிறார்கள்.

அமைந்திருக்கும் இடம்:

  கேரளாவில் பாலக் காட்டிலிருந்து சுமார் 20கி.மீ  தூரத்தில் ஆலத்தூர் அருகே சிட்டிலன்சேரியில் அமைந்துள்ளது இந்த செரு நெட்டூரி பகவதி அம்மன் ஆலயம். பாலக் காட்டிலிருந்து நிறைய பஸ் வசதி மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

தரிசன நேரம்:

காலை 6 மணி – 10 மணி வரை.

மாலை 5 மணி – இரவு 8 மணி வரை.

The post அமானுஷ்யக் கனவுகளை போக்க நெட்டூரி பகவதி அம்மனை வேண்டுங்கள் appeared first on Swasthiktv.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>