1.தினமும் இரவில் உறங்கும் பொழுது தலையணையின் கீழ் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்துக் கொள்ளவும்.மறுநாள் காலையில் விழித்த்து எழுந்த பின் அதை வீட்டில் சுத்தம் செய்யும் வேலை செய்பவர் அல்லது வீட்டு வேலை செய்பவர்களிடம் கொடுத்து விடவும்.இப்படித் தொடர்ந்து 45 நாட்கள் செய்து வர நாம் அனுபவித்து தீமைகள் விலகும்.
2.ஒரு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவும்.காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அந்த வெள்ளைப்பூண்டு காய்ந்து வறண்டு இருந்தாலோ அல்லது அடர்மஞ்சள் நிறமாக இருந்தாலோ உங்களுக்கு மாந்த்ரீக ரீதியாக ஏதோ தீமை செய்யப்பட்டுள்ளது அல்லது அதிகமான கண்திருஷ்டி உள்ளது என்று அர்த்தம்.தகுந்த பரிகாரம் செய்து கொள்ளவும்.
3.ஹனுமான் சிலை அல்லது படத்தின் முன் ஒரு விளக்கேற்றி 2 கிராம்பு எடுத்து அதை அந்த தீப ஜோதியில் எரித்து விடவும்.அதன் பின் ஹநுமானுக்கு தூபம்.தீபம் காட்டவும்.
4.முக்கியமான காரியமாக வெளியில் செல்லும் பொழுது,வீட்டின் தலை வாசலில் கருப்பு மிளகு கொஞ்சம் வைத்து அதை மிதித்த பின் வெளியில் கிளம்ப காரிய சித்தியாகும்.
5.கொஞ்சம் கருப்பு மிளகு,கொஞ்சம் பணம் அல்லது நாணயங்களை வைத்து ஒரு கருப்புத் துணியில் வைத்துக் கட்டி அதை யாருக்காவது தானமாகக் கொடுத்து விடவும்.இதனால் சனீஸவர பகவானால் ஏற்படும் தோஷங்கள், கெடுபலன்கள் குறையும்.
The post தீமைகளை நீக்கும் எளிய பரிகாரங்கள் – Part 1 appeared first on SwasthikTv.