இளையான்குடி, 63 நாயன்மார்களில்ஒருவரானஇளையான்குடிமாறநாயனார்அவதரித்துமுக்திஅடைந்ததலம். இங்குஇளையான்குடிராஜேந்திரசோழீஸ்வரர்கோவில்எனும்சிவன்கோவில்அமைந்துள்ளது.
மூலவர் : ராஜேந்திரசோழீஸ்வரர்.
உற்சவர் : சோமாஸ்கந்தர்.
அம்மன் : ஞானாம்பிகை.
தலவிருட்சம் : வில்வம்.
தீர்த்தம் : தெய்வபுஷ்கரணி.
பழமை : 1000-2000 வருடங்களுக்குமுன்.
மாவட்டம் : சிவகங்கை
தலவரலாறு :
✾மகரிஷிஒருவரிடம்பெற்றசாபத்திற்குவிமோசனம்வேண்டிபூலோகம்வந்தஇந்திரன், பலதலங்களில்லிங்கபிரதிஷ்டைசெய்துசிவபூஜைசெய்துவழிபட்டான். அப்போதுஇங்கும்ஒருலிங்கத்தைஸ்தாபித்துவழிபட்டான்.
✾இவ்வூரில்வசித்தஇளையான்குடிமாறனார்என்றசெல்வந்தர், சிவன்மீதுதீராதஅன்புகொண்டவராகஇருந்தார். அடியார்களுக்குஅன்னமிட்டுஉபசரிப்பதைவழக்கமாகக்கொண்டிருந்தார். ஒருசமயம்அவரைசோதிக்கஎண்ணியசிவன், மாறனாரின்செல்வத்தைகுறைத்துவறுமையைஉண்டாக்கினார். ஆனாலும்மாறனார், அடியார்களுக்குஅன்னமிடுவதைநிறுத்தவில்லை.
✾ஒருநாள்இரவில்சிவன், அடியார்வேடத்தில்அவரதுஇல்லத்திற்குவந்தார். அவருக்குபடைக்கவீட்டில்உணவுஏதுமில்லை. ஆனாலும்கலங்காதமாறனார், வயலுக்குச்சென்றுஅன்றுகாலையில்விதைத்தநெல்லை, எடுத்துவந்தார். அவரதுமனைவிஅதைஉலர்த்தி, அரிசிஎடுத்து, அன்னம்மற்றும்கீரைசமைத்தார். அப்போதுசிவன்சுயரூபம்காட்டிஅவருக்குமுக்திகொடுத்தார். நாயன்மார்களில்ஒருவராகும்அந்தஸ்தையும்கொடுத்தருளினார். இவருக்குகாட்சிதந்தசிவன், ‘ராஜேந்திரசோழீஸ்வரர்” என்றபெயரில்அருளுகிறார்.
தலபெருமை :
✾ 63 நாயன்மார்களில்இளையான்குடிமாறநாயனார்இத்தலத்தில்அவதரித்து, முக்திஅடைந்துள்ளார்.
✾சிவன்சன்னதிக்குபின்புறம்வெங்கடேசபெருமாள்தனிச்சன்னதியில்இருக்கிறார். கோஷ்டத்திலுள்ளதட்சிணாமூர்த்திஇரண்டுசீடர்களுடன்மட்டும்காட்சிதருவதுவித்தியாசமானஅம்சம்.
✾பிரகாரத்தில்மகாகணபதி, வள்ளிதெய்வானையுடன்சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், சூரியன், சந்திரனுக்குசன்னதிஇருக்கிறது. இக்கோவிலில்இருந்துசற்றுதூரத்தில்மாறநாயனார்வாழ்ந்தவீடும், அவர்பயிர்செய்தநிலமும்இருக்கிறது.
✾இந்நிலத்தை ‘முளைவாரிஅமுதளித்தநாற்றாங்கால்” (இறைவனுக்குஅமுதளிக்கநெல்விளைந்தவயல்) என்கிறார்கள். நாயனார்அன்னதானம்செய்து, சிவனருளால்முக்திபெற்றதலமென்பதால்இங்குபக்தர்கள்அன்னதானம்செய்துவேண்டிக்கொள்கிறார்கள்.
✾உணவிற்குபஞ்சமில்லாதநிலைஏற்பட, இங்குசிவனுக்குஅன்னம்படைக்கும்வழக்கம்உள்ளது. சுவாமி, அம்பாள்ஞானாம்பிகைஇருவருக்கும்தனித்தனிவாசல்உள்ளது. அம்பாள், சிவனுக்குவலப்புறம்தனிச்சன்னதியில்இருக்கிறாள். இவள்ஞானம்தருபவளாகஇருப்பதால்இப்பெயரில்அழைக்கப்படுகிறாள்.
✾குழந்தைகள்கல்வியில்சிறப்பிடம்பெறஇவளிடம்வேண்டிக்கொள்கிறார்கள். சிவன்சன்னதிமுன்மண்டபத்தில்முருகன், தெய்வானையுடன்இருக்கிறார். உடன்வள்ளிஇல்லை. இந்திரன்லிங்கம்ஸ்தாபித்துவழிபட்டதலமென்பதால், தெய்வானைமட்டும்இருப்பதாகச்சொல்கிறார்கள்.
பிரார்த்தனை :
✾பிறருக்குஉதவிசெய்யும்குணம்வளரவும், உணவிற்குபஞ்சமில்லாதநிலைஉண்டாகவும்இங்குவேண்டிக்கொள்கிறார்கள்.
✾பிரார்த்தனைநிறைவேறியவர்கள்சுவாமிக்குஅன்னம்படைத்து, பக்தர்களுக்குஅன்னதானம்செய்துநேர்த்திக்கடன்நிறைவேற்றுகின்றனர்.
The post அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்-இளையான்குடி appeared first on SwasthikTv.